நியுயார்க் நகரம் உறங்கும் நேரம்

நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படந்தது...
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது!
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தியும்...
தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...


பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ!
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ!


நாட்குறிப்பில் நூறூ தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே!..