அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா
அவ வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில.. (2)

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தன தானே
தன தன்னா தன்னே தானே
தன தந்தன தந்தன தானே!!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

பூ மலர்ந்தது பூமிக்குதானே

பாடியவர்:மின்மினி

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடதானே.
பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்
என்ன தயக்கம் மனமே.....
(பூ மலர்ந்தது)

முள்ளிலும் பூவொன்று இயற்கை அன்று கொடுத்தது.
பூவிலே முள்ளென்று மனித ஜாதி மறந்தது
வேர்கள் கொஞ்சம் ஆசை பட்டல் பாறையிலும் பாதையுண்டு
வெற்றி பெற ஆசைப்பட்டால் விண்ணில் ஒரு வேறு உண்டு
துயரமென்பது சுகத்தின் தொடக்கமே,
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே...
(பூ மலர்ந்தது)
கண்களே கண்களே கனவு காணத்தடையில்லை
நெஞ்சமே நினைவு ஒன்றும் சுமையில்லை
உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால் ஊனம் ஒரு பாவமில்லை
உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு ஓய்வுகொள்ள நேரமில்லை
கவலை என்பது மனதின் ஊனமே,
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே....
(பூ மலர்ந்தது)

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி

படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, மலேசியா வாசுதேவன், மனோ, SN சுரேந்தர்

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்
பூச்சூடவும் பாய் போடவும்
சுபவேளை தான்
(தேவதை போல்..)

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ.. நலம் பாட
மூன்று முடி போல ஆண்டாள் துணைக்கூட
வேதங்களின் பாரயணம் பூப்பந்தளில் ஆலிங்கனம்
(தேவதை போல்..)

சீதாவை பிரித்தது மான் தான்
புள்ளி மான் தான்
தோதாக சேர்ந்தது மான் தான்
அனுமான் தான்
நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந்தென்றலே ஊர்கோலம் தான்
(தேவதை போல்..)

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா

பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
குரல்: எஸ் ஜானகி
வரிகள்:

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும்)

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும்)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலையில் நான் கேட்கும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா என்னாளும்
ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும்)

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்


மனசு தடுமாறும் அது நெனச்சா நெரம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடா போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

முஸ்தஃபா முஸ்தஃபா Oண் Oற்ற் முஸ்தஃபா

பாடல்: ுஸ்தஃபா முமஸ்தஃபா
குரல்: ஏ ஆர் ரஹ்மான்
வரிகள்: வாலி

முஸ்தஃபா முஸ்தஃபா Oண் Oற்ற் முஸ்தஃபா
காலம் நம் தோழன் முஸ்தஃபா
A Y A A Y A வாழ்க்கைப் பயணம் A Y A
முழுகாத ஸ்Iஏ REண்SIpஆ

(முஸ்தஃபா)

june பிறக்கும் july பிறக்கும் juniorற்க்கும் seniorற்க்கும்
கல்லூரிச் சாலை எங்கும் ragging னடக்கும்

students மனம் ஒரு நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்
நட்புக்கு ragging கூட பாதை வகுக்கும்

நண்பன் ஒருவன் வந்த பிறகு விண்ணைத் தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே
இன்பம் வரலாம் துன்பம் வரலாம் நண்பன் ஒருவன் பங்கு
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே

(முஸ்தஃபா)

இங்கு பறக்கும் வண்ணப் பறவை எங்கிருந்தோ வந்த பறவை
கல்லூரி மண்தான் எங்கல் வேடந்தாங்கல்
கன்னி மலர்கள் கூடப் படிக்கும் காளை மனதில் சாரல் அடிக்கும்
கல்லூரி சாலை எங்கள் கோடைக்கானல்

கல்வி பயிலும் காலம் வரையில் துள்ளித் திரியும் எங்கள் விழியில்
கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும் நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்
கண்ணீரில்தானே எங்கள் farewell party

(முஸ்தஃபா)

தென்மேற்குப் பருவக் காற்று

கருத்தம்மா
ஏ ஆர் ரஹ்மான்

பாடல்: தென்மேற்குப் பருவக் காற்று
குரல்: உன்னிகிருஷ்ணன், சித்ரா
வரிகள்: வைரமுத்து

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

(தென்மேற்குப்)

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாரட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

(தென்மேற்குப்)

நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

(தென்மேற்குப்)
_______________

வருகிறாய் தொடுகிறாய்

போ...போ...
போ...போ...

வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெண்ணீர் போலே சுடுகிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்
போ... போ... என்கிறேன்
போகாமல் நீ நிற்கிறாய்


வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
வருகிறேன் தொடுகிறேன்
நான் பன்னீர் போலே விழுகிறேன்
நீ போ போ என்கிறாய்-ஆனால்
பொய் சொல்கிறாய்

போ...போ...

வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி-அடி
உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைகாரி

குளிர் நிலவினை நெருப்பாய்
நினைக்கிற வெறுப்பாய்
நீ ஒரு அசடநடா - அட
உனக்கென உயில் நான்
எழுதிய வயல் தான் நீ இதை அனுபவிடா

அய்யோ... அம்மா ...நீ பொல்லாத ராட்கஷசி
ஏன்டி என் கற்போடு மோதுகிறாய்
நானா உனை வாவென்று கூவினேன்
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்

உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உதருவதேன்

ஓ தவித்தது போதும் தனிமையில் என்னை
இருக்க விடு என்னை இருக்க விடு இருக்க விடு
அன்பே இருக்க விடு

வருகிறாய்..

விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்
அடி இதய கதவை இழுத்தே அடைத்தேன்
எதற்கதை தட்டுகிறாய்

வங்க கடர்கறை மணலில்
மடியினில் கிடந்த நாட்கள் மறந்தாச்சா
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு
காத்தில பறந்தாச்சா

ஏதோ ஏதோ நான் ஏதேதோ பேசினேன்
தூண்டில் நீ போட்டாய் நான் மாட்டினேன்
இன்று நான் விடுதலை அடைந்தவன்
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்

தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே
கடல் என்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லையே

ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
மறக்க விடு உன்னை மறக்க விடு
மறக்க விடு அன்பே மறந்து விடு
மறக்க விடு

வருகிறாய்...
வருகிறேன்...

போ...போ.

திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா

திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கை வாளால் என்னை தொட்டு
முத்தத்தால் வெட்டு வெட்டு
முந்தானை கட்டில் போட வாராயா
காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு
காற்றோடு கூட்டிப்போக வாராய் வா
வந்தால் சாவேன்... நீரை போலே வாராய் வா

திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா

வா மாயவா இரவது இனித்ததே
கனவு ஜனித்ததே
இதயமும் குளித்ததே
முகம் தேடுது முகமே
மாயமே கனியது கனிந்ததே
இனிமை பிறந்ததே
மனமது தணிந்ததே
இனம் தேடுதே இனமே
வாட்டும் பகலதின் வயதை குறைக்கவே வாய்யா
பூட்டும் இதழ்களின் பூட்டை திறக்கவே நீயா
உன்னாசை என்னாசை மலிந்து போகும் முன்னே வாராய் வா

திரு திருடா திரு திருடா திருமகன் நானடா
திரு திருடா திரு திருடா திருடுதேன் பாருடா

கா.....மினி இருவரி குருந்தோகை
எழ்த குரு நகை
வியத்தின் நறுமுகை
இதயம் மாறினேன் ?இழப்பு
நா...மினி இரு இரு மலர்களாய்
ஓர் கொடி உயிர்களாய்
நிலைத்திட எதையும் நானினி இழப்பேன்
வாயை முத்தத்தினால் வலிமை ஓட்டவா பெண்ணே
வீர உதட்டினால் வீரம் கூட்டவா கண்ணே
பேராசை பேராசை பூவுக்குள் பூகம்பமே வாராய் வா

திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா
கண்ணோடு உன்னைக்கண்டால் கண்ணீரும் தேனாய் மாறும்
விண்ணோடு போவதுக்குள் வாராய் வா
தூரத்தில் உன்னைக்கண்டால்
ஈரத்தில் பெண்மை வாழும்
துயரம் போதுமடா வாராய் வா..
வா வந்தால் வாழ்வேன்...
தூங்காத பேதை கொஞம் வாழ்வேனே...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

(எந்தன்........)

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

ஆ:
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெ:
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

(எந்தன்...........)

பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

ஆ:
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...

பெ:
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொண்னிமைகளில் தாளலயம்
நித்தமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்

(சிறு பொன்மணி)
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

(சிறு பொன்மணி)
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் படியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் அதுவே உன் மஞ்சம்
கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வாசம் உடல் என் வாசம் சாதிராடுது உன் நினைவுகள்
(சிறு பொன்மணி)

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடைத் தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் வலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ அன்பில் வந்த ராகமே.. அன்னை தந்த கீதமே..
என்றும் உன்னைப்பாடுவேன் - மனதில்
இன்பத் தேனும் ஊறும்


மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது
மேகம் வந்து தாலாட்ட
பொன்மயிலாடுது வெண்பனி தூவுது
பூமியெ-ங்கும் சீராட்ட
ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சல் ஆட
அன்னங்களின் ஊர்வலம்...
ஸகரிமகபமதபநிதஸ்நிரிஸ்நி
ஸ்வரங்களின் தோரணம்...
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கண்களின் ஆதலவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்...
ஸகரிமகபமதபநிதஸ்நிரிஸ்நி
வானவில் ஓவியம்...
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும் - இந்த
இரவும் அந்த நிலவும் அது எல்லோருக்கும் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒன்னும் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் - அது
அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்மை
சொல்லடி ஞானப்பெண்ணே

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா…

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே…வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே
நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கம்பன் (?) உந்தன் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு வெள்ளி கம்பி என்று ஆஹியதெய் கன்பன் சிற்பம் கண்கள் தொட்டு தொட்டு தங்க சிற்பம் என்று மாறியதே
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கிகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற என் நாள்கள் சக்கரை ஆக
தலை கீழ் தடு மாற்றம் தந்தை என் இனிய காலையில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
பள்ளி செல்ல வில்லை பாடம் கேட்க வில்லை அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நாணம் கையில் இல்லை உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிரில்லாமல் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல் என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சம் கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்கலனதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெல்லம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆரும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

ஜன்னல் காற்றாகி வா

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல ஹ்ஹ
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல
ஸ்வாசமே ஸ்வாசமே

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஸ்வாசமே ஸ்வாசமே
ஸ்வாசமே ஸ்வாசமே

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள

இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல

வாசமே வாசமே
வாசமே வாசமே

என்ன் சொல்லி என்னைச் சொல்லு
கண்கள் ரெண்டில் கண்கள் செல்லு
சிறகுகள் முளைக்குது மனசுக்குள் மெல்ல

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்

ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்
இயற்கைக் கோளாறில் இயங்கிய என்னை
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் செய்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்
அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்

ஸ்வாசமே ஸ்வாசமே

இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்
நதிகளில்லாத அர(பு)தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்
நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
எனக்காக நீ கிடைத்தாய் விடிந்துவிட்டேனே

வாசமே வாசமே

என்ன சொல்லி ஹ்ஹ்ஹ
என்ன சொல்லி என்னைச் சொல்லு
காதல் என்னைக் கையால் தள்ள ஹ்ஹ்ஹ

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா

ஜன்னல் காற்றாகி வா
ஸ்வாசமே ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா... வாசமே...

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, கமல் ஹாசன்
வரிகள்: கலைகுமார்

ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா? ஹச்..
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா? ஹச்..
(ஆலங்கட்டி..)

சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா?
சின்ன சின்ன சண்டை சமாதனமாச்சா? ஹச்
இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சா?
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சா?

ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்
ஐயோடா

குளம் காட்டும் வெண்ணிலவாய் அழகான நம் குடும்பம்
கல் ஒன்று விழுவதால் கலையலாமா?
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ
அன்பென்னும் உளி பட்டால் பாறை சிலை ஆறுமே
பித்து குழலுக்கு தேங்காய் பூவ போல
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது
சொந்தத்தை தினம் சந்திக்க
அவர் நிழல் கூட ஏங்குது
(ஐயோடா..)

ஆற்றோர நாணல் அது காற்றோடு கை குலுக்க
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்
பனையில பழம் பறிச்சு விதையில் தென்ன வளர்க்க
ஆறேனும் ஆசை பட்டால் ஆகுமோ சொல்
ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே
உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே

அனைவரும் இங்கு நடந்திடும் போது
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன
கவிதை போல் உள்ள குடும்பத்தில்
நானுமொரு வார்த்தை ஆகலாமோ
(ஆலங்கட்டி..)
(ஐயோடா..)

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

கால்கள் ரெண்டும் தரையிடம்
கோபம் கொண்ட கலவரம்
மிதந்து மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்கோ
பூமியே துரும்புங்கோ
வானமே தூசுங்கோ
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்கோ

ம்ம்.. தண்டணைகள் இனிக்குது
தவறு செய்ய துடிக்குது
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க சிரிக்க தோணுது

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

என்னை என்ன செய்தாய்
என்னவெல்லாம் செய்தாய்
புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே
டாக்டருக்கு மருமகனா ஆனேனே

உயிரிலே வெள்ளி ஜரிகையும் கலந்து தான் ஓடுதே
உருவமே தங்க சிலையாய் மாறிதான் போனதே

கால் இருந்த இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஓஜாயே ஓஜாயே ஓஜாயே
ஒஜா ஒஜா ஓஜாயே

அடிக்கடி காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும் ஓஹோ
அந்த நாள் வந்ததே வந்ததே

வானவில்லை காணவில்லை
விடுமுறையில் இங்கே வந்துட்டதே

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
செல்ல கொஞ்சி நீங்க அழைக்கும்
நாய்க்குட்டி ஆனேனுங்க

இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

______________________________

படம்: தெனாலி
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, கமல்ஹாசன்
வரிகள்: தாமரை

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவ ன்
அவன் வேறேயறு கண்ணாடி பாரு ...

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னே ஆச்சி செய்வவல்
அவள் வேறேயாறு கண்ணாடி பாரு ....

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

மையங்கள் செய்தது உன் சூச்சி
என் மாற்பகு நறுலிலே நீர்வீழ்ச்சி

ஹே ஆசைக்கு ஏனடி அராய்ச்சி
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாச்சி

ஈஸ்கிமொகள் நாட்டில் அட ஐஸ் என்ன புதுசா ???
காமராஜன் உதடில் அட கிஸ் என்ன புதுசா ???

அட கிஸ் -உ என்றால் உதடுகள் பிரியும்
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்

தகராறு எது தமிழ் முத்தம் போடு

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுகுலே யார் என்று சொல்வேன் (2)

உள்ளாடு புணர்ச்சி தீயாக
ஏன் உள்ளதை மரத்தை நீயாக

ஹா தண்ணீரில் விழந்த நிழல் போலே ...
நான் நினையாமல் இருந்தேன் நானாக ..

பூரம் என்று பார்த்தால் நீ பஞ்சடைத்த மேனி
நெருங்கி வந்து பார்த்தேன் நீ நெஞ்செழுத்த காரி

நெஞ்சில் விரித்தேன் முதலாய் உனையே
என் மடியில் முளைத்தாய் மறுநாள் வெளியே

நல் வார்த்தை சொன்னாய் நடமாடும் தீயே

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஏழை என்கிறாய் என் 7 ஸ்வரம் அவன்
ஏழு ஜென்மமாய் என்னே ஆள வந்தவன்
அவன் வேறேயாறு கண்ணாடி பாரு ...

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன் (2)
ஐது என்கிறாள் என் ஐந்து நிலமவள்
ஐந்து புலங்களில் என்னே ஆட்சி செய்வவல்
அவள் வேறேயாறு கண்ணாடி பாரு ....

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்

ஆல்வார்பேட்டை ஆளுடா

K:

ஆல்வார்பேட்டை ஆளுடா

அறிவுரையே கேளுடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

G:

லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

மவனே, லவ் பண்ணுடா மவனே, லவ் பண்ணுடா மவனே

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

G:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

K:

பன்னனு வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கண்ணை பார்த்து பேச சொல்ல

கழுத்துக்கு கீழ் பார்க்குமே

G:

லவ் இல்லே, அதன் பேர் லவ் இல்லே

K:

கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும் போது

உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே

ஜவுளி கடை பொம்மையை பார்க்கும் போது

உன் புத்திக்குள்ள கவுலி கத்தும் அதுவும் லவ் இல்லே

இதுக்கு ஏன் உசுர குடுக்கணும்

எதனையும் புரிஞ்சு நடக்கணும்

காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா

இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா

GROUP CHORUS:

ஆல்வார்பேட்டை, ஆல்வார்பேட்டை

ஆல்வார்பேட்டை ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

ஒரே காதல் ஊரில் இல்லையடா

காதல் போயின் சாதலா

இன்னோர் காதல் இல்லையா

தாவணி போனால் சல்வார் உள்ளதடா

…போடு

….வா நர்சம்மா

…ஐய்யோ

K:

பார்க்கபோனா மனுஷனுக்கு first தோல்வி காதல்தான்

G:

நல்லது அனுபவம் உள்ளது

K:

காதலுக்கு பெருமையெல்லாம் first காணும் தோல்விதான்

G:

சொன்னது கவிஞர்கள் சொன்னது

K:

டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம்

கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா

ஒன்னு ரெண்டு escape ஆன பின்னே

உன் லவ்வுதான் மூணாம் சுத்தில் முழுமை காணுமடா

ஐய்யயோ இதுக்கா அழுவுரே

lifeஇலே ஏன்டா நழுவுரே

காதல் ஒரு கடலு மாறிடா

அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா

டேய் டேய்

GROUP CHORUS

K:

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா

நர்ஸு பொண்ணை காதலி

கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோய் ஹோய்

GROUP CHORUS

என் மனசில் நீயேதானா

படம்: காதல் அழிவதில்லை
பாடியவர்கள்: Prasanna , Srivarthini

ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ

என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா

என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா

இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக் கொண்டோம் இதயத்தைத் தானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக் கொண்டோம் இதயத்தைத் தானா

அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா தானா

என் மனசில்..

உன்மனசில் நானேதானா
என்மனசில் நீயேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா
சொல் அன்பே உண்மைதானா

ஆ.. ஆ.. அ அ ஆ. ஆஆ ஆ ஆ அ அ ஆ
ஆ.. ஆ.. அ அ ஆ. ஆஆ ஆ ஆ அ அ ஆ

உள்ளத்தில் காதலனை சுமப்பேனா
உலகினும் பெரிதாய் நினைப்பேனா
கனவிலும் அவனது முகம்தானா
நினைக்க நினைக்க சுகம்தானா

காலை மாலை வருவதெல்லாம்
காதலர்கள் சந்திக்கத்தானா
கனநேரம் கிடைத்தால் கூட
காதல் பற்றி சிந்திக்கத்தானா

சொர்க்கம் இருவர் அன்பில்தானா
நரகம் காதல் பிரிவில்தானா
சொர்க்கம் இருவர் அன்பில்தானா
நரகம் காதல் பிரிவில்தானா

மொத்தத்தில் இதயம் துடிப்பது
காதலில் தானாஆஆஅ

என் மனசில்..

என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா

ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ

ஏய்யயய்ய ஏய்யய்யா.. ஏய்யயய்ய ஏய்யய்யா
ஏய்யயய்ய ஏய்யய்யா.. ஏய்யயய்ய ஏய்யய்யா

ஆ...ஆ...ஆ.. அ அ ஆ

காதல் என்றால் ஆழம்தானா
விழுந்தால் எழுவது கடினம்தானா
காதலர்கள் வேலை சரிப்பதுதானா
கயவர்கள் வேலை பிரிப்பதுதானா

லைலா மஜ்னு மறைந்தார்கள் என்றால்
புதைந்தது அந்த உடல்கள் தானா
இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால்
வாழ்வது அந்த காதல் தானா

காலம் கூட மாறும்தானா
காதல் அழிவதில்லைதானா
காலம் கூட மாறும்தானா
காதல் அழிவதில்லைதானா

உலகம் உள்ளமட்டும் காதல்
வாழ்வதுவே தானாஅஅஆ

என் மனசில்..

என் மனசில் நீயேதானா
உன் மனசில் நானேதானா
நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா

இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக் கொண்டோம் இதயத்தைத் தானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாத்திக் கொண்டோம் இதயத்தைத் தானா

அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா? தானா
அடிக்கடி பார்த்தால் தானா
காதல் வளரும் தானா? தானா

என் மனசில்..

என் மனசில் நீயேநீயே தானா
உன் மனசில் நானேநானே தானா
நம் மனசில் காதல்காதல் தானா
சொல் அன்பே உண்மைதானா

ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ
ஆ...ஆ...ஆ.. அ அ ஆ

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பாக்கிறேன்

மேகமது சேராது வான் மழையும் வாடாது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

...............எனக்கொரு ஸ்னேகிதி..............

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

.........எனக்கொரு ஸ்னேகிதி.....................

ஒஹ் நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா

படம் : முகவரி
இசை : தேவா
சிங்கர்ஸ் : ஹரிஹரன் & ஸ்வர்ணலதா .

ஒஹ் நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா
ஒஹ் நெஞ்சே நெஞ்சே(2)
நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...
காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணால காதுக்குள் பாட்டுபாடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி
நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும் ................

ஒ நெஞ்சே நெஞ்சே............


சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன் காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சொதுக்குள்ளே இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் பாட்டுக்கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம் ............

ஓ நெஞ்சே நெஞ்சே...........

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள
தவளை ரெண்டும் பொந்துக்குள்ள ச்சூ ச்சூ மாரி
குத்தாலத்து காட்டுக்குள்ள
குரங்கு எல்லாம் வீட்டுக்குள்ள ச்சூ ச்சூ மாரி

ஊத்தப்பல்லு ரங்கம்மா
உள்ள வாடி ரங்கம்மா ச்சூ ச்சூ மாரி
உனக்கு புருஷன் யாரம்மா
ஊளைமூக்கு ஆளம்மா ச்சூ ச்சூ மாரி


அதோ பாரு ரயிலுடா
ரயிலுக்குள்ள குயிலுடா ச்சூ ச்சூ மாரி
குயிலுக்கிட்ட நெருங்கினா
ரெண்டு மாசம் ஜெயிலுடா ச்சூ ச்சூ மாரி


சங்கிலி புங்கிளி கட்டிப்புடி
நான் மாட்டேன் வேங்கைப்புலி
சங்கரன்கோயில் சுந்தரி
சப்பரம் வருது எந்திரி ச்சூ ச்சூ மாரி

வேணாண்டா ராசு மாட்டிக்குவே வேணாண்டா டேய் ராசு
போடீ மாரி


தட்டான் தட்டான் லைட்டடி
கோழிக்குஞ்சுக்கு லைட்டடி ச்சூ ச்சூ மாரி
குசும்பு பண்ணும் சேவலை
குழம்பு வச்சு ஊத்தடி ச்சூ ச்சூ மாரி


பட்டைய பட்டைய எடுத்துக்கோ
பரங்கிப்பட்டைய எடுத்துக்கோ ச்சூ ச்சூ மாரி
மொட்டையடிச்சது யாருன்னு
முட்டைய பார்த்து கேட்டுக்கோ ச்சூ ச்சூ மாரி

தோசை பார்த்து சிரிச்சிச்சாம்
பூரி கண்ணை அடிச்சிச்சாம்
இட்டிலி சண்டை போட்டுச்சாம்
சட்டினி விலக்கி விட்டுச்சாம் ச்சூ ச்சூ மாரி

கடுகு மிளகு திப்பிலி
கருங்குளத்தான் போக்கிரி ச்சூ ச்சூ மாரி
கொல்லைப்பக்கம் போகாதே
கொட்டிக்கிடக்கு ஜாங்கிரி

ச்சூ ச்சூ மாரி


படம்: பூ
பாடல்: நா.முத்துக்குமார்
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்கள்: பார்த்தசாரதி, மிருதுளா, ஸ்ரீமத

ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று

[பெண்]ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று
எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும்
விழிகளுக் ஏனிந்த புழுக்கம்
அவன் குளிர் முகம் பார்த்தும் துளிர்க்கும்
[ஆண்]கண்ணில் பருவம் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்
தூக்கம் தொலைத்தாய்
ரகசியம் ஒன்று சொன்னான் காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமும் நின்று துடித்ததின்று

[ஆண்]அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூல்கியே நான் என்னை தேடினேன்
காற்றில் கலந்த அவள் சுவாசம் என்னை மட்டும் தீண்ட
கொள்ளை கொண்டு அவள் போனால்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை கொடு

[பெண்]கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் கன்ன
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரி
தூக்கம் தொலைத்தாய் ...

மீள முடியாமல் என்னுள் நிறைந்து போகின்றாய்

மீள முடியாமல் என்னுள் நிறைந்து போகின்றாய்
என் சுவாசம் தீண்டிய காற்றில் களைந்து வருகின்றாய்
நெஞ்சை தொட்டவளே என் உள்ளம் கவர்ந்தவளே
என்னை விட்டு போகாதே அன்பே நீ
என்னை நீ பிரியாதே அன்பே நீ
என்னை நீ பிரியாதே
கனவுகள் அழிந்தாலும் மனுசுள்
பதிவுகள் அழிவதில்லை

மீள முடியாமல் உன்னுள் உறைந்து போனேனே
உந்தன் சுவாசம் தேடி உன்னுள் காற்றாய் வந்தேன்
என்னை கவர்ந்தவனே என்றும் என்னுள் நிறைந்தவனே
என்னை விட்டு போகாதே அன்பே
என்னை நீ மறவாதே அன்பே நீ
என்னை நீ மறவாதே
விரல் கொண்டு மீட்டாமல் தேனே இசை தனே தாறதே

ஒநில் கலைந்து நீ உருக்கி கொள்ளாதே
உறவின் தரிசனம் தினமும் தேடினேன்
விழிக்குள் என்னை நீ சிறைபிடிதாய்
ஆயுள் கைதியாய் தீர்ப்பும் இட்டாய்
விழியே உறங்காதே
உன்னுடன் பேச துடிக்குது என் உதடுகள்
மறுகணம் நானும் என்னை தடுக்க
உன்னகுள் நானும் தினம் உருகி போகிறேன்
எனக்குள் உன்னை தேடினேனே
என் தூக்கம் தொலைத்தவனே
என்னை தீண்டி துளிர்தவனே ஆஹா

என்னை நீ பிரியாதே அன்பே நீ
என்னை நீ பிரியாதே
கனவுகள் அழிந்தாலும் மனுசுள்
பதிவுகள் அழிவதில்லை

மீள முடியாமல் உன்னுள் உறைந்து போனேனே
உந்தன் சுவாசம் தேடி உன்னுள் காற்றாய் வந்தேன்
என்னை கவர்ந்தவனே என்றும் என்னுள் நிறைந்தவனே
என்னை விட்டு போகாதே அன்பே
தனிமையில் கூடி உன்னை நினைத்து கொள்கிறேன்
என் நெஞ்சத்தில் ஆளும் உன்னை அணைக்கிறேன் ஆஹா

அடியே கொல்லுதே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே



இரவும் பகலும் உன் முகம்
இரையைப் போல துரத்துவதும் ஏனோ

முதலும் முடிவும் நீயென
தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ

வாடைக் காற்றினில் ஒரு நாள்
ஒரு வாசம் வந்தது
உன் நேசம் என்றது

உந்தன் கண்களில் ஏதோ
மின்சாரம் உள்ளது
என்மீது பாய்ந்தது

மழைக்காலத்தில் சரியும்
மண் போலவே மனமும்
உனைக் கண்டதும் சரியக்
கண்டேனே

அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே
உலகம் சுருங்குதே
இருவரில் அடங்குதே

உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே

என் காலை நேரம்
என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே

அழகின் சிகரம் நீயடி
கொஞ்சம் அதனால் தள்ளி நடந்தேனே

ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி
இந்தக் கணமே உன்னை மணப்பேனே

சொன்ன வார்த்தையின் சுகமே
மயில் தோகை போலவே என் மீது ஊருதே

எல்லா வானமும் நீலம்
சில நேரம் மாத்திரம் செந்தூரம் ஆகுதே ….

அனல் மேலே பனித்துளி

பல்லவி

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி....."

சரணம் -1

எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் திறந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அழித்துவிட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

இதுதானே இனி நிலாவின் கறை கறை..

சரணம் -2

சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா?

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமா கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ

ஒட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ



வட்ட வட்டப் பொட்டுக்காரி



ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ



வாய் வெடிச்ச மொட்டுக்காரி



விடவேண்டும் அச்சத்தை



தொடவேண்டும் உச்சத்தை



அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

(ஒட்டகத்தக்)



கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது



பெண்ணே நான் தூண்டில் போட்டால்



விண்மீனும் தப்பாது



உள்ளங்கைத் தேனே கள்வன் நான்தானே



கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே



பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை



அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை



(ஒட்டகத்தக்)



உடைவாளில் நீயெந்தன் உடைதொட்ட அந்நேரம்



உன் பார்வை எந்தன் உயிர் தொட்டதறிவாயோ



கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே என்னாகும்



உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்



நீஎன்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்



முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்



(ஒட்டகத்தக்)

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - உன்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - உன்
ஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாகச் செல்லேண்டி - உன்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி
குதிபோட்டு வந்தேண்டி

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி

கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மையா வெக்கும் சாக்க வெச்ச கையா வெப்பே தெரியாதா
அலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா
மாடுபுடிச்சி முடிச்ச கையில் மயிலப் புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தொகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்

உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு - நீ
ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளதாச்சி
கூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே
உருவித்தான் பாக்காதே - என்
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
துருவித்தான் கேட்காதே

உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
வெடலப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு?
இடுப்புச் செல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு
ஆசைப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அதுதான் பெண்ணின் குணம்

(உசிலம்பட்டி)

நான் மடி ஏந்தி மண்போல் யாசித்தேன்

காதல் மன்னன்
பரத்வாஜ்

பாடல்: திலோத்தமா திலோத்தமா திலோத்தமா
குரல்: பரத்வாஜ், அனுபமா
வரிகள்:

நான் மடி ஏந்தி மண்போல் யாசித்தேன்
என் மழைத்துளியே ஏந்தான் யோசித்தாய்
மனம் தாங்காதே பின் வாங்காதே
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

ஆஹா...ஆஹா...ஆ...ஆ...

மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு

யெஹி யெஹி யெஹி யெஹி
காதல் அனைவருக்கும் பூவோ
எனக்கு மட்டும் முள்ளோ
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இது சொல்லாத சோகம் அல்லவா
அதை மௌளனங்கள் சொல்லும் அல்லவா
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது
அதை உன் காதில் சொன்னால் நல்லது
மௌளனம் தீர்ப்போமா மீண்டும் பார்ப்போமா
திலோத்தமா திலோத்தமா திலோத்தமா

ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ

ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

ஆஹாய வெந்நிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளை தானோ!

மலர்சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட.

(ஆஹாய வெந்நிலாவே)


தேவார சந்தம் கொண்டு தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று.
தென் பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று


இளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்.
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
நடு ஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட
( ஆகாய வெண்ணிலாவே )



தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சை கேட்கக் கூடும்

அடியாளின் ஜீவன் மேனி அதிகாரம் செய்வதென்ன?
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன?
இசை வீணை வாடுதோ? இதமான கைகளில் மீட்ட!
ஸ்ருதியோடு சேருமோ? சுகமான ராகமே காட்ட!
(ஆகாய வெண்ணிலாவே)


படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், உமா ரமணன்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே

படம்: நல்லவனுக்கு நல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ் & மஞ்சுளா





உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்

(உன்னைத்தானே...)

மலரின் கதவொன்று திறக்கின்றதா
மௌனம் வெளியேற தவிக்கின்றதா
பெண்மை புதிதாக துடிக்கின்றதா
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா

முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே
இரவுகள் இதமானதா?
கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால்
வெட்கம் என்ன சத்தம் போடுதா?


என்னத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிடு
விழி நீர் தெளித்து ஒரு கோலமிடு

(என்னத்தானே...)

உலகம் எனக்கென்றும் விளங்காதது
உறவே எனக்கின்று விலங்கானது
அடடா முந்தானை சிறையானது
இதுவே என் வாழ்வில் முறையானது

பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்தது

(என்னத்தானே...)

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்

படம்: ஏழாவது மனிதன்
பாடியவர்:K.J.ஜேசுதாஸ்
இசை: L. வைத்தியநாதன்
இயக்கம்:K.ஹரிகரண்
வருடம்:1982

காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கைச் சிறகினிலே)

என் உயிர் நீதானே

படம்: ப்ரியா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ் & ஜென்ஸி

ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
ஹத்தியக்கு சுக்காவா
ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
சயாபாண்டாங் டெரிமு
சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு


என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே

(என் உயிர் நீதானே.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

அவ சந்திக் மச்சாங்
புங்காராயா
ஜானாலுபா
சாமா சாயா

(பூங்கொடி தள்ளாட.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட வந்தேன்

(என் உயிர் நீதானே.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

ஹத்தி ஹித்த டுவா டுவா
ஓராங் சகல டுவா டுவா

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை கண்டேன்

(என் உயிர் நீதானே.....)

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

படம் - முள்ளும் மலரும்
இசை - இளையராஜா
வருடம் - 1978
பாடியவர் - கே.ஜே.ஜேசுதாஸ்


செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

(செந்தாழம் பூவில்...)

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

(செந்தாழம் பூவில்...)

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்கசிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

(செந்தாழம் பூவில்...)

கண்ணே கலைமானே....

படம்:மூன்றாம் பிறை
இசை:இளையராஜா
பாடல்:கண்ணதாசன்
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ்


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே


ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...


காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி...


கண்ணே கலைமானே....
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ...ஓராரிராரோ... ராரிராரோ...ஓராரிராரோ...

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

படம் : மன்னன்
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்


அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது

(அம்மா என்றழைக்காத.....)

அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா என்றழைக்காத.....)

பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா என்றழைக்காத.....)

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

படம் : சொல்லத்துடிக்குது மனசு
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கவிஞர் வாலி


பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

நிழல்போல நானும் நடைபோட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்காலபந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

உனைப்போல நானும் ஒரு பிள்ளைதானே
பலர்வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை நானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதனொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே...)

கண்ணன் ஒரு கைக்குழந்தை

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!

(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)


உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?


உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ?

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா.

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது.

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.

மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மை குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா?
கண்கள் படக்கூடமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா?


(கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கண்ணம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை)

கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ!
மைவிழியே தாலேலோ!
மாதவனே தாலேலோ!



ஆராரிரோ ஆராரிரொ
ஆராரிரோ ஆராரிரோ

படம்: பத்ரகாளி (1976)
பாடலாசிரியர்; வாலி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ், சுசிலா

ராஜ ராஜ சோழன் நான்

படம் : இரட்டை வால் குருவி.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ்


ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்

ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே

(ராஜ ராஜ சோழன் நான்...)

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண்பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தாணை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே நீராடும் நேரமே
புல்லாங்குழல் தல்லாடுமே பொன் மேனி கேளாய் ராணி

(ராஜ ராஜ சோழன் நான்...)

கல்யாண தேன் நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

படம் : மௌனம் சம்மதம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச நாயகி

சாம்பவி சங்கரி சாமனை சாதி நச்சு நாயகி

மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்


பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க

ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே

மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே

(பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க)



இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி

இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை

கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்

கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்

படங் கொண்ட அல்குல் பனிமொழி

வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த

காட்சி இங்கு காணக் கிடைக்க.


படம்: குணா
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ் & குழு

பூங்காவியம் பேசும் ஓவியம்

படம் : கற்பூர முல்லை
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா



பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

பாட்டுதான் தாலாட்டுதான்
கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள்
வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது

(பூங்காவியம்...)

யார் மகள் இப்பூமகள்
ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
புதுக்கதை அரங்கேறிடும்

(பூங்காவியம்...)

சின்னஞ்சிறு வயதில்

படம் : மீண்டும் கோகிலா
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.பி. ஷைலஜா


சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

(சின்னஞ்சிறு வயதில்...)

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி எனக்கோர்
காவியம் சொல்லு என்றான்

(சின்னஞ்சிறு வயதில்...)

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே...
மோதும் விரகத்திலே செல்லம்மா

(சின்னஞ்சிறு வயதில்...)

வா வா அன்பே அன்பே

வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக்கூறும் பொன்மணி

காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்

நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீயின்றி ஏது பூவைத்த மானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

உன் தோளில் தானே பூமாலை நானே
சூடாமல் போனால் வாடாதோமானே
இதயம் முழுதும் எனது வசம்

(வா வா அன்பே அன்பே...)

படம் : அக்னி நட்சத்திரம்.
இசை : இளையராஜா.
குரல் : கே.ஜே.யேசுதாஸ், சித்ரா

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

படம் : தூறல் நின்னு போச்சு
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.யேசுதாஸ் & உமா ரமணன்

பூபாள‌ம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

(பூபாள‌ம் இசைக்கும்...)

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே
நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே
மேகமழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

பூவை எந்தன் தேவை உந்தன் சேவை அல்லவா
மன்மதன் கோயில் தோரணமே மார்கழி திங்கள் பூமுகமே
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்கத்தில் சுகம் நனநனநனந‌ன‌னா

(பூபாள‌ம் இசைக்கும்...)

ஒரு பெண்புறா கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட

ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே

(ஒரு பெண்புறா...)

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு

(ஒரு பெண் புறா...)

கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!

(ஒரு பெண் புறா...)

படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ்

அலைபாயுதே கண்ணா....

அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா

என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே.. கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே கண்ணா

அலைபாயுதே....

வேணு கானமதில் அலைபா
என் மனம் மிக அலைபாயுதே
மோகன வேணு கானமதில் அலைபாயுதே

கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே...
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....


கண்ணா......கண்ணா..


நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர
நேரமாவதறியாமலே மிக வினோதமான
முரளீதர



என் மனம் அலை பாயுதே.
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு காணமதில்
அலைபாயுதே.....

கண்ணா......கண்ணா..



தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே

உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே


கனிந்த உன் வேணுகானம் ..ஆஅ...ஆஅ..
கனிந்த உன் வேணுகானம்
காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே

கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா
கனித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு
அளித்து மகிழ்த்த வா


ஒரு தனித்த வனத்தில் அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழையென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதரமாதருடன் நீ களிக்கவோ


இது தகுகோ.. இது முறையோ..
இது தருமம் தானோ....

குழல் ஊதிடும் பொழுது ஆடிடும் குழல்கள் போலவே
மனது வேதனை மிகவூது

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக
அலைபாயுதே.
உன் ஆனந்த மோகன வேணுகாணமதில்
அலைபாயுதே.

கண்ணா.. கண்ணா.. கண்ணா...

ஓடி விளையாடு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.


காலை எழுந்ததும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா


சின்னஞ்சிறு குருவி போலே
நீ திரிந்து பறந்து வா பாப்பா
வண்ண பறவைகளைக்கண்டு நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா.

பாயுமொளி நீயெனக்கு

பாயுமொளி நீயெனக்கு
பார்க்கும்விழி நானுனக்கு
தோயும் மது நீயெனக்கு
தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை
வாழி நின்றன் மேன்மையெல்லாம்
தூய சுடர் வானொளியே
சுரையமுதே கண்ணம்மா.....

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீயெனக்கு
புது வயிரம் நானுனக்கு

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ
வானமழை நீயெனக்கு
வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு
கான ஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதி முகம்
ஊனமறு நல்லழகே
நல்லழகே
ஊறுசுவையே கண்ணம்மா....


காதலடி நீயெனக்கு
காந்தமடி நானுனக்கு
வேதமடி நீயெனக்கு
வித்தையடி நானுனக்கு
போதமுற்றபோதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நாதவடிவானவளே... நல்ல உயிரே... கண்ணம்மா.

வீணையடி நீயெனக்கு
மேவும் விரல் நானுனக்கு


படம்: ஏழாவது மனிதன்(1982)
பாடல் வரிகள்: பாரதியார்
இசை: எல்.வைத்தியநாதன்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே
தேனே.. ஆடி வரும் தேனே...
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

உச்சிதனை முகர்ந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி..
மேனி சிலிர்க்குதடி..

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி..
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி.
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி (உன்னைத் )

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
என்னக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வ களஞ்சியமே
செல்வ களஞ்சியமே

மூக்குத்தி பூமேலே காத்து

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....


மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்


மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதம்மா



கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான்
காண நாளாகுமோ?
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ?


திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..

மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா
அது உக்காந்து பேசையிலே தேனு
உள்ளூர ஊருதய்யா!
அது ஏந்தான் புரியலையே அதை
நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்ம....

தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா




படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி

ஒன்றே குலமென்று பாடுவோம்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன்மெய் வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்

அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்.



கடவுளிலே கருணை தன்னைக் காணலாம்
அந்தக் கருணையிலே கடவுளையும் காணலாம்

நல்லமனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒரு போதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்..



பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழி ஒன்றுதான் எங்கள் வழி என்றுநாம்
நேர்மை தவறாமல் நடை போடுவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்


இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்...
இதயம் தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்




படம்: பல்லாண்டு வாழ்க
பாடியவர்: கே.ஜே.யேசுதாஸ்

இசை: கே.வி.மகாதேவன்

சொல்லத்தான் நினைக்கிறேன்...

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!


சின்ன பூவொன்று பாறையை தாங்குமா..
உன்னை சேராமல் என் உயிர் தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது நியாயமா ..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொலுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,காதல் சுகமானது..

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ராகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!

மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா

மன்மதனே நீ கலைஞணா மன்மதனே நீ கவிஞணா
மன்மதனே நீ காதலனா மன்மதனே நீ காவலனா
என்னை உனக்குள் தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
எத்தனை ஆண்களை கடந்து வந்தேன் எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னைப்போல் எவனும் என்னையும் மயக்கவில்லை

நானும் ஓர் பெண் என பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின் ஆண்கள் வார்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன் அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலறுகிறேன் உனக்கேதும் தெரிகிறதா?
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிறாய் என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அது தான் ஸரித்திரமோ

மன்மதனே உன்னை பார்க்கிறேன் மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை வாசிக்கிறேன் மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் ஒதுக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பேரை வைக்கவோ
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் என்னை ஏற்று கொள்ளு
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன் அன்பாய் பார்த்துக்கொள்ளு

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போல வருவனா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?

ஒருமுறை பார்க்கையில் பணியென உறுகினேன் மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிரேன்
கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய் மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன் எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே மூழ்கி போகிறேன் கையை நீட்ட வா கரையில் சேர்க்கவா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?
இவள் தானா இவள் தானா ? இவளோடு இணைவேனா


தூரத்தில் நின்று எனை ரசித்தது போதுமா தூரத்து வென்னில்லா தாகங்கள் தீறுமா
வெட்கத்தை வீசியே வா என்று சொல்கிறாய் பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்
அழைப்பாய் என நான் தவியாய் தவிததேன் இருந்தும் வெளியே பொய்யாய் முறைத்தேன்
கன்ன குழிகள் தான் காதல் தேசமா ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில் ரகளைகள செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு அலும்புகள் செய்பவனா
மழை போல வருவனா மடி மேலே விழுவானா
மலர் போலே தொடுவானா
இவன் தானா இவன் தானா ? இவனோடு இணைவேனா

வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே
முகம் கண்டு நிறம் கண்டா நேசம் நான் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

அட கை நீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
முகம் கண்டு நிறம் கண்டா நேசம் கொண்டஎன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

கால் அழகும் மேல் அழகும் கண் பொங்கக் கண்டேன்
அவள் நூல் அவிழும் இடை அழகா நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாள் ஏ
அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைதாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அவள் சிக்கு எடுக்கும் கூந்தளுக்கு சீப்ப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் நின்ற போதும் கொண்ட காதல் கொள்கை மாறாது

ஈரமான ரொஜாவே என்னை பார்த்து மூடாதே

Nee pesum pothu pesa maruthen
paarkum pothu paarvaiyai thavirthen
indru un pechai ketka paarvaiyai parka virumugiren
nee ennai verukkiraai

ஈரமான ரொஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம்
உன் வாசலில் என்னைக் கோலாமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து

நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரொஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

கேளாமல் கையிலே வந்தாயே காதலே

Naan kelaamale nee en kaadhalaai en kaladiyil thavamirunthaai
kangalai moodi unnai mithithu sendruvitten
Indru thirumbi paarkiren , En izhappai unarnthu thudikkiren
En raaman un kaiyil naan anilaaka irukka ninaikkiren

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ எழுதியது போலவே தோன்ற
கேளாமல் கையிலே வந்தாயே காதலே கேளாமல் காயிலே வந்தாயே காதலே
என் பேரை கூவிடும் உன் பெரும் கோகிலம்
கோகிலம் .. கோகிலம் .. கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்
கேளாமல் ...கையிலே.. வந்தாயே காதலே..
என் ராமன் ..நீ எனில் உன் கையில் நான் அணில்
இனிமேல் இனிமேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
ஏதோ நடக்கின்றதே துணிந்து பாருங்களேன்
பார்த்தும் பாராமலே போகும் நேரங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
பார்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் உன்னை அடைப்பேன்
அதில் நீ நிரந்தரமா நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன்
மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
தூங்கும் தேவை எதும் இன்றி கனவுகளும் கைகளில

நீதானா நீதானா என் நெஞ்சம் கேட்கின்றது

en nenjam indrum kettu konde thaan irukkirathu
nijam thaana nijam thaana
nee ennai kadahal seithathu nijam thaana
Unmaiyo poiyo endru naan unaraamaleye naan unnai virumbinen

நீதானா நீதானா என் நெஞ்சம் கேட்கின்றது
நிஜம்தானா நிஜம்தானா என் உயிரில் இறங்கி உந்தன் உருவம் கலக்க
நீ தானா நீ தான என் கண்கள் கேட்கின்றது
நிஜம்தானா நிஜம்தானா என் கனவில் இறங்கிவந்து உன் உருவம் நடந்து வர

காதலின் கால் தடங்கள் வாசலில் பார்த்தேன்
காலடி ஓசைகளை நெஞ்சிலே கேட்டேன்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்


தோழியே தோழியே உன்னிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கின்றதே
உன் முகம் பார்க்கையில் கண்களின் ஓரம் தாய் முகம் மறுபடி தெரிகின்றது

ஆயிரம் சொந்தம்கள் பூமியில் கண்டேன்
ஆயினும் என் நெஞ்சை உன்னிடம் தந்தேன்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்


மனம் உருகி உருகி விட
பூ பூக்கும் நெரம் இதுதானா
தினம் அருகில் அருகில் வர
இது காதல் தானா

தொலைவிலே உன்னை நான் பார்த்திதிடும் போது தேவதை நீ என தெரிகின்றதே
தோளிலே வந்து நீ சாய்ந்திடும் போது வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிகின்றதே
நீ வரும் முன்னாலே தனிமையில் வாழ்ந்தேன்
நீ வந்த பின்னாலே வழித்துணை கண்டென்
என்னவோ என்னவோ இன்ப மயக்கம்

பிடிக்கும் உனை பிடிக்கும் அழகா உனை பிடிக்கும்

Un sirippai ulakkukku pidikkiratho illaiyo
enakuu migavum pidikkum
un siripai en idhayathil padam pidithu vaithullen
Intha padal varnananai unaku porunthaathu endraalum
Nee enaku azhagan thaan

பிடிக்கும் உனை பிடிக்கும் அழகா உனை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
பிடிக்கும் உனை பிடிக்கும் அழகா உனை பிடிக்கும்
ஆகாய வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகா உன் சிரிப்பை உலகுக்கு பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்

காபுல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்
ரேஸ் காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும்
தங்கம் போல இருக்கும் உன் தோள்கள் பிடிக்கும்
தங்கம் போல மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்ன பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாடம் நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்

காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்

பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலையே
பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னும் நான் பறக்களையே
பகலெல்லாம் ஆட்டம் போதும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்
கனவெல்லாம் உன்னை தேடும்
உயிரெல்லாம் இரு விழி கலக்கும்


காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்

நான் எப்போது பெண் ஆனேன்

Puriyavillai eppothu naan unnai kadhalikka arambithen endru
Nee parvaiyaale ennai kelvi kettaye appotha?
Un punnagaiyaale en manathil puyal varavazhaithaaye appotha?
Nee enge enge endru ennai theda vaithaaye appotha?
Nee illamaal kaneerudan kaathirukkirene appotha?
Puriyavillai eppothu naan unnai kadhalikka arambithen endru

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

முதல் புன்னகை பூத்தானே அப்போதா
முதல் வார்த்தை பேசினாய் அப்போதா
அகல் விளக்குகள் ஏற்றிய திருநாளில்
என்னை தேவதை என்றான் அப்போதா
என் உறக்கத்தில் நடுவே சின்ன பயம்
வந்து முழு உடல் வேர்த்ததே அப்போதா
நீ எங்கோ நின்று பார்ப்பது போல்
நான் மனசுக்குள் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

அட யாரும் இல்லா கடற்காரையில்
மணல் வீடாய் நான் காத்திருந்தேன்
ஒரு அலையாய் நீயும் வந்துவிடு
என்னை உன்னில் கொண்டு சென்றுவிடு

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்
உன் பார்வை பாய்ந்ததுதே அப்போதா
உன் பேர் மட்டும் தெரிந்ததே அப்போதா
என் விழிகளை மெதுவாய் திறக்க சொல்லி
இமை விண்ணப்பம் போட்டதே அப்போதா
உன் மெல்லிய மீசை படுவதை போல்
நான் குளிக்கையில் உணர்ந்தேன் அப்போதா

நான் எப்போது பெண் ஆனேன்
நான் எப்போது பெண் ஆனேன்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
பெண்ணே நெற்றிப் பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்
முதுகில் கட்ட்எரும்பை போலே ஊர்க்கிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால்
நெஞ்சம் ஏனடி துடிப்பதில்லை
எண்ணம் யாவையும் அழித்து விட்டேன்
இன்னும் போக மறுப்பது ஏன்

விண்ணை துடைக்கின்ற முகிலை
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை
என்னை தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைத்தேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும்
சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன்
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும்
சொல்லவில்லையே இல்லையே
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும்
கால்கடுக்க காத்திருக்கேன் எதனாலே
பெப்ரவரி மாததில நாலு ஒன்று கூடிவர
ஆண்டு நாளும் காத்திருக்கும் அது போலே

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள்நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்குதே
நான் பிறக்குமுன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில்
என்னை ஏந்தத்தான்

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்

நீ வீரமான கள்ளன் உள்ளூரம் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது

நீர் அடிப்பதாலே மீன் அழுவதில்லையெ
ஆம் நமக்குள் ஊடலில்லை

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…

சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…
உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…
அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…


மனசுக்குள்ள பொத்தி மறச்ச…இப்ப எதுக்கு வெளியில சிரிச்ச?
கனவுக்குள்ள ஓடிப் புடிச்ச…நெசத்திலதான் தயங்கி நடிச்ச…
அடி போடி பயந்தாங்கொள்ளி…எதுக்காக ஊம ஜாட?
நீ இருந்த மனச அள்ளிஎந்த தீயில் நானும் போட?
உன்னை என்னை கேட்டுகிட்டா காதல் நெஞ்சில் தட்டுச்சு?

தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி…கல்லெறிஞ்சா கலையும்? கலையும்?
நெஞ்சக்குளத்தில் படிஞ்ச காதல்எந்த நெருப்பில் எரியும்? எரியும்?
நீ போன பாத மேல…சருகாக கடந்தா சுகமா?
உன்னோட ஞாபகம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கும் ரணமா?
கட்டுக் காவல் மீறி வர காதல் நெஞ்சு கெஞ்சுதே…


சாமிகிட்ட… சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில்… வச்சி கிட்டேன்…
ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாத்துக்கவே முடியலன்னு
கனவுக்குள்ள பாத்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லி புட்டேன்…உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்…

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சிருச்சு காலம்! காலம்!
இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்…அப்பவும் சேராமல் இருவரும் பிரியனுன்னா
பொறக்காமல் போயிடுவேன்…

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே

இதுக்குத்தானா இதுக்குத்தானா

இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா ஹே.. இதுக்குத்தானா
என் நெத்தி கொதிச்சதும்
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆசை வளத்ததும் மீசை மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே ஹோ.. இதுக்குத்தானே
சட்டி ஒட்டை ச்சதும் கட்டி பிடிச்சதும்
இதுக்குத்தானே

கண்ணுக்கும் கண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
தண்ணிக்கும் மண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
சட்டிக்கும் மூடிக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
வேட்டிக்கும் சேலைக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
மண்ண பெனஞ்சேன் பானை ஆச்சு
ஒண்ணா பெனஞ்சேன் காதல் ஆச்சு
மனசுக்குள்ள சூல போட்டு
சுட்டு முடிச்சாச்சு
தரையில் கெடந்த ஒத்த சகதி
தலையில் சுமக்கும் பானை ஆச்சு
காயத்த முடிஞ்ச அண்ணாக்கயிறு
தாலி கொடி ஆச்சு
மொத்தமா பாத்ததும்
புத்தியெ ஓடலா
எந்நமோ கேக்கணும்
ஒண்ணுமெ தோணாலா
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானே இதுக்குத்தானே
ஆசை வளத்ததும் மீசை மொளச்சதும்
இதுக்குத்தானே
இதுக்குத்தானே ஹே.. இதுக்குத்தானே
சட்டி ஓதைச்சதும் கட்டி பிடிச்சதும்
இதுக்குத்தானே

வானுக்கும் மண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
ஆணுக்கும் பொண்ணுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
பூவுக்கும் நாறுக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
பொட்டுக்கும் நேத்திக்கும்
ஜிஞ்சகக் ஜிஞ்சகக்
கநிஞ்ச பழத்த காட்டாதே
காட்டி காட்டி பூட் டாதே
யானையை புடிச்சி பானைக்குள் அடைச்சு
மறைக்க பாக்காதே
வெந்த மண்ணா நான் கிடக்கென்
வெருவ ஊத்தி நானைக்காதே
விருப்பம் போல வலஞ்சி கொடுக்க
என்னை ஓடைக்காதே
வைத்த தவற
எல்லாம் பசிக்க
எதை நான் எடுக்க
பசிய தடுக்க
கொய்யா பழம் வெணுமா
கோவ பழம் வெணுமா
நாவா பழம் வெணுமா
புளியம் பழம்

இதுக்குத்தானா இதுக்குத்தானா
மண்ண மிதிச்சதும்
பெண்ணக் குலைச்சதும்
இதுக்குத்தானா
இதுக்குத்தானா இதுக்குத்தானா

ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்

ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்


ஊருகுள்ள ஓடும் தெருவில் பாட தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்

இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே

நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன

கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நொழந்சே
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனாதய்யா

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு

கட்டபோம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட

அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன

வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா

ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

மரணம் என்னும் தூது வந்தது

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

கண்கள் தீண்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது நம்மை பித்தனாக்கி அலையவைப்பது

எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று

யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை
வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

பனியாக உருகி நதியாக மாறி அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவொடு வாழ்ந்து
உயிர் காதல் உறவடி கலந்தேன் இன்று
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேறும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா, என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு கானல் தான்

இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே

குமாரி... என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..

குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே
குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்

என் மனம் ஒரு மலர் அடி மனசுக்குள் அடிதடி ..........

குமாரி...
என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

இந்த காதல் என்ன பெரும் பாரமா....
இது பேரு காலம்.... இல்லா கர்ப்மா
காதலே மறைத்தால் கணம் தாங்காமல் ...
என் உயிரே செத்து போகும் இல்லையா ?
காதலே சொல்லி... இல்லை என்று மறுத்தால்
காதலே செத்து போகும்... இல்லையா ?

ஒரு காதல் கடிதம் எதுவும் ...மனசை!!
முழுசாய் சொல்வது இல்லை
நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய
இன்னொரு வாசல் இல்லை ...

நான் தானம் கேக்கும் ஒரு ஊமையா
தினம் தேய்கிறேனே இது தேவையா....
கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி
கோவிலை தேடி நடக்கின்றேன்
கூடையே கொடுத்து கும்பிட்டு முடித்து
கோரிக்கை வைக்க மறக்கின்றேன்
அந்த கடவுளை விடவும் ...பெரியவன் ஒருவன்
பூமியில் உள்ளான் எவன்
கண்களை பார்த்து காதலே சொல்லும் தைரியம் உள்ளவன்
அவன் ..அவன் ..அவன் ..

என் காதல் சிக்கி முக்கி திக்கி... விக்குது குமாரி..
என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி ..நிக்குது குமாரி..
என் வார்த்தைகடல் வற்றி ...விட்டதே

நான் தோற்று போவேன் என்று அஞ்சியே.
என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்...

மின்சாரம் என் மீது பாய்கின்றதே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்

பெண்ணென்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே


மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்

பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர காதல்தான் என்று கண்டேன்

அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....

வெண்ணிலவே வெண்ணிலவே

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?

நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அது வரைதான்
வாழ்வு என்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான்

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது

ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை என் பரிதாய்?
இரவு இங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?
உறுகினான் நான் உறுகினேன், இன்று உயிரில் பாடி கருகினேன்
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?

வேரில் நான் அழுதேன், என் பூவும் சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல் பழக்கமில்லை
உனக்கு என்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவேன்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை
மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா?

நீயா பேசியது? என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது? என் அன்பே தீயை வீசியது?
கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது
நீயா பேசியது