என்ன விலையழகே

என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌளனமாகிறேன் (2)

(என்ன விலை)

படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு

(என்ன விலை)

உயிரே உனையே நினைத்து விழினீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்லை சிற்றன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்

(என்ன விலை)

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்
உனைத் தென்றல்தீண்டவும் விடமாட்டேன்அந்தத்
திங்கள் தீண்டவும்விடமாட்டேன்
உனை வேறு கைகளில்தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான்தரமாட்டேன்
ரோஜா ...ரோஜா ...ரோஜாரோஜா ...


நிலத்தினில் உன் நிழல்விழா ஏங்குவேன்
நிழல் விழுந்தமணலையும் மடியினில்தாங்குவேன்
உடையென எடுத்துஎனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்இடையினை உறுத்தும்ரோஜா
உன் பேர் மெல்ல நான்சொன்னதும் என் வீட்டுரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக்கானாவிடில் எங்கே உன்அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம்விடியும் என் வானமே
மழையில் நீநனைகையில் எனக்குக்காய்ச்சல் வரும்
வெயிலில் நீநடக்கையில் எனக்குவேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டுஉணர்வுகள் ஒன்று
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்


இளையவளின்இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும்இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்குசொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறைவிடுமுறை எடுத்தால்என்ன
என்னைத் தீண்டக்கூடாதென வானோடுசொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக்கூடாதென கையோடுசொல்லாதுபுல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில்கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும்அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தரஎதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறுநினைவுகள் ஏது
ரோஜா ...ரோஜா ...ரோஜா ...

ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
கண்ட பின்னேஉன்னிடத்தில்என்னைவிட்டுவீடுவந்தேன்


ரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா ரோஜாரோஜா ரோஜா (௨)
ரோஜா ...ரோஜா ...

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை (2)
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாரும் இல்லை எவளுமில்லை
உன்னை விட ..... என்னை விட ........

அள்ளி கொடிய காத்து அசைக்குது
அசையும் கோலத்துக் உடம்பு கூசுது
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது
நிலவில் காயும் வேட்டி சேலையும்
நம்மை பார்த்து சோடி சேருது
சேர்த்து வைச்ச காதே துதி பாடுது சுத்தி சேருது
என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
யாரு சொல்லி தந்து வந்தது
காண கன வந்து கொல்லுது
இதுக்கு பேறு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ....
உன்னை விட .................................
காட்டு வழி காளைங்க கழுத்து மணி
கேட்கயில நமக்கு அது கோயில் மணி
ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
போதிக்கிற நமக்கு அது மூடு பனி - உன்னை விட ......

உன் கூட naan கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும் கேட்குறேன் சாமியே
(என்ன கேட்குற சாமிய ? - 100 ஜென்மம் உன் கூட - போதுமா ?)
நூறு ஜென்மம் நமக்கு போதுமா
வேற வாரம் ஏதும் கேட்போமா ?
சாகா வாரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய
காத அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
ஆகாசமா ஆனா போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

(உன்னை விட ...)

வாழ்கை தர வந்தான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி

(உன்னை விட ....)

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி

சில துளி பல துளி

படபட தடதட சடசடவென சிதறுது



சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன )


சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதாநியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கண்ணிஎன் பாதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது


(சக்கரவாகமோ )



மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2-)

(சக்கரவாகமொபட்ட )
(சின்னச்சின்ன )

திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்

ம்ம்ம்...
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

(திறக்காத)

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ இளை உன்னைச் சொல்லுதோ
அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது அதோ அதோ அதோ அங்கே
ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ

அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது - புதிய
கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும் காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

(திறக்காத)

கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது இதோ இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இளை நத்தைக் கூடுகளோ அவை நத்தைக் கூடுகளோ
வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

(திறக்காத)
Collected by AnuSuya a

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (3)


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுனாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிறே என்னைப் பெண்ணாய்ச் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (2)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே

காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞ்யாபகம்
சின்ன பூக்கள் பார்த்தால் தேகம் பார்த்த ஞ்யாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞ்யாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞ்யாபகம்
வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

வீசுகின்ற தென்றலே , வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா ,பெண்மயில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே , கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே , புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே செவைஎன்ன சேவை
முள்ளோடு தான் முதன்கள சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி )

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு

செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு

சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை

ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

(மார்கழி)

(வெண்பா)

அலை பாயுதே கண்ணா

பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)



அலையே சிற்றலையே

கரை வந்து வந்து போகும் அலையே

என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்

நுரையாய் கரையும் அலையே

தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்

அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்



நகில நகில நகிலா ஓ..

விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)



ஓஹோ.. பழகும் போது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கையறையில் குழந்தையாகி

என்னை கொல்வாய் கண்ணே



(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)



(எஸ். பி. பி. சரண்)



நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய்

வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய்

நானாக தொட்டாலோ முள்ளாகி போகின்றாய்

நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய்



என் கண்ணீர் என் தண்ணீர்

எல்லாமே நீ அன்பே..

என் இன்பம் என் துன்பம்

எல்லாமே நீ அன்பே..

என் வாழ்வும் என் சாவும்

உன் கண்ணின் அசைவிலே



நகில நகில நகிலா ஓ..

விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)



ஓஹோ.. பழகும் போது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கையறையில் குழந்தையாகி

என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணைத் தொடு தொடு (4)



(எஸ். பி. பி. சரண்)



உன்னுள்ளம் நான் காண என் ஆயுள் போதாது

என் அன்பை நான் சொல்ல உன் காலம்; போதாது

என் காதல் எடை என்ன உன் நெஞ்சு காணாது

ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது



கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீ தானே

நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே

உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே!



நகில நகில நகிலா ஓ..

விலகிடாதே நகில நகிலா.. ஓஹோ.. (2)



ஓஹோ.. பழகும் போது குமரியாகி

என்னை வெல்வாய் பெண்ணே

படுக்கையறையில் குழந்தையாகி

என்னை கொல்வாய் கண்ணே

(நவீன்)

காதல் சடுகுடு குடு.. கண்ணே தொடு தொடு (4)

கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம்
எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்க
ஏன் புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம்
எனக்குள் ஆசை இருக்க
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இருந்தானே
இது காதல்தானா புரியவில்லை


ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே
உன்னைத் தொலைக்காதே
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே அழைக்காதே
உன்னைப் புதைக்காதே
(கொஞ்சம் கொஞ்சம்)




இவன் இருளா இல்லை ஒளியா
எனக்குள் குழப்பம் புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவனில்லை இவனுக்குள் நானில்லை
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்துவிட்டதா புரியவில்லை
(ஏ பெண்ணே)




எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படிப் புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான்
என்ன விடையோ
வழக்கம்போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
(ஏ பெண்ணே)
(கொஞ்சம் கொஞ்சம்)
(ஏ பெண்ணே)

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

கண்ணிறேண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அதனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு தானும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தகமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வெய்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வெய்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே

F:
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே …

ஏழு ஸ்வரம் எட்டாய் ஆதாதோ
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
தேன் எங்கும் கண்கள் டோன்றாதோ
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிசழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது

வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்

வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓஓ..
ஓ மௌளனம் மௌளனம் மௌளனம் மௌளனமேன் மௌளனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கல்லையா யாரிடம் கேட்டு சொல்வேன்

(இவன் யாரோ)

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்

(இவன் யாரோ)
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை
நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதர்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
முறை ஒரு முறை சொல்லி விடு...ஒரு முறை சொல்லி விடு...
ஒரு முறை சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...சொல்லி விடு...

இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே

இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே...

கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே

உன் பார்வை பொய்தானா பெண்ணென்றால் திரைதானா
பெண் நெஞ்சே சிறைதானா சரிதானா...
பெண் நெஞ்சில் மோகம் உண்டு அதில் பருவத் தாபம் உண்டு
பேராசைத்தீயும் உண்டு ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில் பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடைசெய்த போதும் புல்லொன்று புதுவேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

பால் நதியே நீ எங்கே வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே...
பேரன்பே உந்தன் நினைவு என் கண்ணைச் சுற்றும் கனவு
இது உயிரைத் திருடும் உறவு உன் துன்பம் என்பது வரவு
ஏ மர்ம ராணி நில் நில் ஒரு மௌளன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணில் கண்ணே கண்ணீர் இன்ப கண்ணீரே
கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே...
தேடித் தேடித் தேய்ந்தேனே மீண்டும் கண்முன் கண்டேனே பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே காண்ணே கண்ணே காணாய் கண்ணே கண்ணீரே
கண்ணீரே...

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூற் ஆயிரம் நல் இரைவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லெமெ வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

குரலில் உன் குரலில் மெல் இசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் உன் பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வெள் அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக் கனி சுகம் புரிவது போலே
கூந்தலில் இனி இது தினம் மாறும் பரி மாறு
நீ நீச்சல் குளம் போலே நெடு நேரம் இல்லை பாரு

ஓர் ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூர் ஆயிரம் நல் இரைவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

நிலவினில் வெண்ணிலவில் உன் தலை முடி களைவது போதும்
பகலில் நன் பகலில் உன் செவி மடல் மலர்வதும் போதும்
ஒளியில் மின்னொளியில் என் வழையலும் இல்லவிடு போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் இரைவது போதும்
போதும் ஆனாலும் போதது சந்தோசம்
கண் துங்க கானலும் தூங்காது ஆல்வசம்
சகயமே உன் அருகினில் இல்லை பெறுவேனே
தடமே பொன் முது வானில் இணைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெல்லமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மெல் சுகங்களை கரைந்திடுவேனே
நூர் ஆயிரம் ம்ம்ம்ம் ம்ம்ம்

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேற இல்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

அதாடி ஆசை அலைபாய
சேத்துக்கோ மீச குடசாய
குத்தடி குட மழை பெய்ய
ஏத்துக்கோ ஆட உனகாய
அதாடி ஆசை அலைபாய
சேத்துக்கோ மீச குடசாய
குத்தடி குட மழை பெய்ய
ஏத்துக்கோ ஆட உனகாய

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

தலை தொடும் மழையே
செவி தொடும் இசையே
இதழ் தொடும் சுவையே
இனிபாயே
விழி தொடும் திசையே
விரல் தொடும் கணையே
உடல் தொடும் உடையே
இணைவாயே
யாவும் நீயாய் மாறி போக நானும் நான் இல்லையே
மேலும் மேலும் கூடும் காதல்நீங்கினால் தொல்லையே
தெளிவாக சொன்னால் தொலைந்தேனே உன்னால்

அத்தடி அசைந்தே போனாயா
ஆசையில் விழிந்தே போனாயா
நாக்கடி நழிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
அத்தடி அசைந்தே போனாயா
ஆசையில் விழிந்தே போனாயா
நாக்கடி நழிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா

என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை

தருநீற சிலையே
அறுபது கலையே
பரவச நிலையே
பகல் நீயே
இளகிய பணியே
எழுதிய கவியே
சுவை மிக கனியே
சுகம் நீயே
குடு பாவை வேக தொடு காதல் தினம் ஒதுதே
கூடு பாயும் தாக தோடு ஆசை மதிடுதே
தொடுவய என்னை தொடெர்வெநெ உன்னை

அத்தடி அசைந்தே போனாயா
ஆசையில் விழிந்தே போனாயா
நாக்கடி நழிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா
அத்தடி அசைந்தே போனாயா
ஆசையில் விழிந்தே போனாயா
நாக்கடி நழிந்தே போனாயா
காதலில் கரைந்தே போனாயா



என் அன்பே நானும் நீ இன்றி நான் இல்லை
என் அன்பே யாவும் நீ இன்றி வேறில்லை
நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் நீங்கி போனதே
என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே
காணவேண்டும் யாதும் நீ யாகவே
மாறவேண்டும் நானும் தாயாகவே

அடிச்சா ஹார்ட் ’கு பீட் ’உ

அடிச்சா ஹார்ட் ’கு பீட் ’உ
குடிச்ச மேன் ’கு ஹீஅட் ’உ
அடிச்ச ஹார்ட் ’கு பீட் ’உ
குடிச்ச மேன் ’கு ஹீஅட் ’உ

இன்னி நாலயம் உலகம் நம்பிடும் லேட் ’ச கெட் சீகி சீகி
ஆழ பாருங்கடா
அந்த ஆவியும் வந்தும் பெண்ணிடம் லேட் ’ ச கெட் சீகி சீகி
மலை போடுங்கடா
இங்கும் பெண்களும் காலடி பதிவுகள்
அந்த அந்தங்கள் யாவிடும் பதிவுகள்
எ ஒ எ ஒ எஹொ …
நல்ல சுவிஎல்லாம் தேவைகள் எதையும் இந்த ஜீவன் ’உம் உள்ளாவதும் சிநேகமே
எ ஒ எ ஒ எஹொ ..

கெட் சீகி ஆல் கெட் சீகி ஆல்
பிரதர் கெட் சீகி ஆல் சிஸ்டர் கெட் சீகி ஆல்
கெட் இட் கெட் இட் கெட் இட்
அண்ட் போர் ஐ டான் ’ட் டாக் போர்

அதிச்சா ஹார்ட் ’கு பீட் ’உ
குடிச்ச மேன் ’கு ஹீஅட் ’உ
அடிச்சா ஹார்ட் ’கு பீட் ’உ
குடிச்ச மேன் ’கு ஹீஅட் ’உ
பேபி கேர்ள் யு ’ஆர் மெஸ்ஸெட் உப ஹோ -ஹோ ஹ ஹ மோவே யூர் போடி
ஹோல்ட் ஆன் கேர்ள் , மோவே எ லிட்டில் பாஸ்ட் யு ’ஆர் சோ பைன் ஷோர்தயே



அடிச்ச ஹார்ட் ’கு பீட்டு
குடிச்சா மேன் ’கு தீட்டு
அடிச்சா ஹார்ட் ’கு பீட்டு
குடிச்ச மேன் ’கு தீட்டு
கம் ஆன் பேபி கீப் ரிசிங் டு த ரூம் நொவ்
லேட் ’ச கெட் சீகி சீகி
பீல்ஸ் லைக் ப்ளையிங் தில் 5
கோட்ட பலி உஸ் இன் த ஹௌஸ் நொவ் கெட்டிங் நுக்த்ட்டி
லேட் ’ச கெட் சீகி சீகி டேக் இட் எவென் ஹிக்தேர்

புதுசா போட்டுக்கோ ரூட் ’உ
குடிச்ச ஊர்க்கு வெட்டு
புதுசா போட்டுக்கோ ரூட் ’உ
குடிச்ச ஊர்க்கு வெட்டு

ஒ ஒ ஒ ஒ ஒ
பேபி கேர்ள் யு ’ஆர் மெஸ்ஸெட் உப் ஹோ -ஹோ ஹ ஹ மோவே யூர் போடி
ஹோல்ட் ஆன் கேர்ள் , மோவே எ லிட்டில் பாஸ்ட் யு ’ஆர் சோ பைன் ஷோர்தயே

இன்னி நாலயம் உலகம் நம்பிடும் லேட் ’ச கெட் சீகி சீகி
ஆள பாருங்கடா
அந்த ஆவியும் வந்தும் பெணிடம் லேட் ’ச கெட் சீகி சீகி
மலை போதுங்கட
இங்கும் பெண்களும் காலடி பதிவுகள்
அந்த அந்தங்கள் யாவிதும் பதிவுகள்
எ ஒ எ ஒ எஹொ …
நல்ல சுவிஎல்லாம் தேவைகள் எதையும் இந்தா ஜீவன் ’உம் உள்ளவடும் சிநேகமே
எ ஒ எ ஒ எஹொ ..

பால் பப்பாளி

பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
உன் கூட்டாளி
என்னை சமாளி

பால் பப்பாளி
நல்ல தக்காளி
நான் கோமாளி
இப்போ சொக்கை

உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா
naan மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா
நீ புள்ளி வச்ச மானு தானே கோலம் போடவா
என் மீசையால் காது குதி கூச்சம் கட்டவா

பால் பப்பாளி
நல்ல தக்காளி
உன் கூட்டாளி
என்னை சமாளி

பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
நான் கோமாளி
இப்போ சொக்கை

முண்டனைய முண்டசக கட்டி கொல்லாதே
நீ மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னாதே
என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசயல காது குத்தி கூச்சம் கட்டாதே


பெ : கண்ணா குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு
நெஞ்சு குழி நடுவே மையம் கொள்ளாதே

ஆண் : ஹே ஆச்சு வெல்ல அழகே உச்சி வெய்யில் நிலவே
பிச்சு பிச்சு என்னை ஈரம் செய்யாதே

பெண் : என்னை மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த ஊரு கெட்ட பொண்ண பார்த்து உச்சு கொட்டாதே

ஆண் : எனை பூவுக்குள்ளே தேனை போல பூட்டி வைகதே
நம்ம ஆத்த kovil யனைய -போல் ஆட்டி வைக்காதே

பெண் : காதலா காதல ஓடி வரவ
யாருமில்ல நேரம் பார்த்து தேடி வரவ

ஆண் : வான் -நில தென் -நில கூடி வரவ
ஆடி மாச காது போல ஆடி வரவ

ஆண் : பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
உன் கூட்டாளி
என்னை சமாளி

பெண் : பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
நான் கோமாளி
இப்போ சோக்காளி

ஆண் : உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா
நான் மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா
பெண் :என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசயல காது குத்தி கூச்சம் கட்டாதே



ஆண் : ஒத்தையிலே குதிச்சேன் மெத்தையிலே தவிச்சேன்
கத்திரி -கொள் விழியாலே கண்ணா வேதத்தே

பெண் : ஒத்தையிலே இருந்தேன் சுத்தி சுத்தி பறந்தேன்
சீதே -துக்கும் கிளியை கூண்டில் வைகதே

ஆண் : ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பாட்டி -கட்டன் போல்
நீ எட்டி நின்னு என்ன பார்த்து எங்க வைகதே

பெண் : உன் ஆடு புலி ஆடம் எல்லாம் இங்கே வேனன்யா
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தனயா

ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யில
கால காலமாகும் வாழும் காமன் மகள

பெண் : கோவல கோவல காதல் நகல
ஓர -கன்னல் பார்க்க வேணும் பட்ட பகல


ஆண் : பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
உன் கூட்டாளி
என்னை சமாளி

பெ : பால் பப்பாளி
வெள்ளை தக்காளி
நான் கோமாளி
இப்போ சோக்காளி

ஆண் : உன் முண்டனைய முண்டசக கட்டி கொல்லவா
நான் மூணு வேலை மூட சோறு அள்ளி தின்னவா

பெண் :என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசயல காது குத்தி ...உ ஹு ..

அடை மழை காலம் விழியிலே

அடை மழை காலம் விழியிலே
நனைந்ததே தேகம் முழுதும்
அனல் தரும் கோடை மனதிலே
எரிந்ததே நான்கு புறமும்
இதற்க்காகவே அழுதேனே அன்று
எனக்காக இன்று அழவோ
எனக்காருமே துணை இல்லை என்று
வானம் கூட வருமோ

அடை மழை காலம் விழியிலே
நனைந்ததே தேகம் முழுதும்
அனல் தரும் கோடை மனதிலே
எரிந்ததே நான்கு புறமும்


ஒரு தாயின் பிள்ளையல்ல
இல மானே நாம் தானே
இருந்தாலும் தங்கை என்று
நினைத்தேனே நான் தானே

ஏன் எனை ஒரு பகைவன் போலே
பார்கிறாய் கிளியே
நான் உன்னை தினம் காவல் காத்து நிற்கிறேன் வெளியே
உப்பு கல்லை போல வைரம் தன்னை நீ நினைத்தை போ

வெளிச்சத்தில் கூட வரும் நிழல்
இருட்டினில் கூட வருமோ
நிழல்களை போல உறவுகள்
துயர் வந்தால் நீங்கி விடுமோ



உயிர் தோழர் கூடமெல்லாம்
உடன் வாழ்ந்த நாள் எங்கே
எனை சூழ்ந்த துன்பம் என்றால்
தனி தீவை நான் இங்கே

நண்பர்கள் நலம் வாழ பாடும் நான் கொண்ட மனது
கலப்படம் தாய் பாலில் எது புலப்படும் பிறகு

தொலை தூரம் நீங்கினாலும் தாழம் பூ மணக்கும் ஓய்

காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே

காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே
காலமெல்லாம் உன்னை நான் தேடச் செய்யாதே
நான் ஒரு சேவகன் காதலின் காதலன்
யாரிடம் நான் உனை தேடுவேன் காதலே...

காதலே நீ...

தூங்கும் போதும் யோசிப்பேன்
தூங்காது உனை நான் நேசிப்பேன்
உண்ணும் போதும் உன்னையே
உண்ணவே நான் யாசிப்பேன்
போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை
பிடித்தபடியே நான் நடக்கிறேன்
என்னக் கோபமோ கண்ணை கட்டி நீ
உன்னைத் தேடவே சொல்கிறாய்
காதலே நான் ஒரு காதலின் தூதுவன்
நீ எனை காதலி காதலே வாழுவாய்...

காதலே நீ...

காதலே உன் வாசலில் மொழிகள்
யாவும் மௌனமே
பேசுகின்ற வார்த்தையோ நானத்தாலே விலகுமே
யாருமில்லையே என்ற போதிலும்
வரம்பு மீறியதில்லையே
காதலாகினோம் கசிந்தும் உருகினோம்
கரங்கள் தீண்டியதில்லையே
ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே
யாருமே என்னைப் போல் காதலன் இல்லையே...

காதலே நீ...

நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

ம ம……. ம ந ந…….. ந
ஹா ஹா ஹே ஹே

நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

Once upon a time when we were riding real easy
Only we used our new Maruthi
Look up on the sides when a citi girl pass by
bale bale you say bye bye bye

ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்கை என்னாவது

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

உழா ஊழா… நண்பன் கிடைத்தால் எல்ல்லாம் ஓசி
உழா ஊழா… யோசி யோசி யோசி யோசி

We’ve gonna a smile coz we have a journey
dinner with a lady in a red saree
shout out loud, say you’re so sweet

We’ve gonna a smile coz we have a journey
dinner with a lady in a red saree

உழா ஊழா

என் தவறை நீ மறைத்தாய்
எனக்காய் அர்ச்சனை வாங்கினாய்
உன் தோள்கள் ஏணியை போல்
ஏறி மிதித்தேன் தாங்கினாய்

எழும் போது கை தந்து
அழும் போது கடன் தந்து
இளைப்பாற மடி தந்து
எனக்கென வாழ்வது நீதானே

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

Il faut que je me dépêche parce qu’on m’attend à Chennai
Il faut que je me dépêche parce qu’on m’attend à Chennai
Il faut que j’aille prendre le Taxi, prendre le Taxi à Paris
Il faut que j’aille prendre le Taxi, prendre le Taxi à Paris

ம ம……. ம ந ந…….. ந
ந நங்ய நங்ய ………. நங்ய

தில்லானா தில்லானா திமிரு புடிச்ச தில்லானா
அன்பா நான் அன்பா நான் அடங்கமாட்டேன் ஹீரோ நான்
கள்ளத்தனம் தெரியாது
காதலியே கிடையாது

ம ம……. ம ந ந…….. ந

கஞ்சத்தனம் தெரியாது
கஞ்சாவே கிடையாது
நல்ல பழம் கிடையாது
ஞான பழம் கிடையாது
என் உயிர் நண்பன் நீதானே

ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி

நீயே நீயே நீயே நீயே இல்லயேல்
ந ந ந ந ந எங்கு போஅவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்கை என்னாவது… என்னாவது… என்னாவது…

ம ம……. ம ந ந…….. ந
ந நங்ய நங்ய ………. நங்ய

டாக்ஸி டாக்ஸி.. awesome டாக்ஸி…
டாக்ஸி டாக்ஸி… ராசி ராசி…”ராப்” ஏ ஜாஸ்தி
டாக்ஸி டாக்ஸி… ஹே ஹே
டாக்ஸி டாக்ஸி… Make the wave… Make the sound…
டாக்ஸி டாக்ஸி… கும்பகுமெங்கும் சிட்டி சிட்டி
தினம் தினம் எங்கள் tire காட்சி
குரூப் பாய்ஸ் நாங்கள் king of the streets
Live people gather every body follow me…

Look up in the side when ya see u when u pass by
Friend thavira friends thavira stay with me all at the time
Goli soda pizza.. they must they must ask why?

ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா
ம்ம் சி பலே பலே… ம்ம் சி ஹோலே ஹோலே… ம்ம் சி ஓயே ஓயே… ஷ்யாவா

தீயில் விழுந்த தேனா? - இவன்

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா



ராசாத்தி என் உசிரு என்னதில்ல

ராசாத்தி என் உசிரு என்னதில்ல
பூச்சூடி வாழ்க்கப்பட்டு போனபுள்ள
நீ போனா என்னுசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதிவரும் வாடிபுள்ள

(ராசாத்தி)

காரவீட்டுத் திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கயில
மஞ்சள அரைக்குமுன்ன மனச அரச்சவளே..
கரிசக்காட்டு ஒடையில கண்டாங்கி தொவைக்கயில
துணிய நனையவிட்டு மனச புழிஞ்சவளே..

நெல்லுக் களத்துமேட்டுல இழுத்து முடிஞ்சிகிட்டு
போனவ போனவதான் - புதுக் கல்யாணச் சேலையில
கண்ணீரத் தொடச்சிகிட்டுப் போனவ போனவதான்
நாந்தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு
அரளிப்பூச்சூடி அழுதபடி போறவளே

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளங்க சொன்னசொல்ல..

தொட்டுதொட்டு பொட்டுவெச்ச சுட்டுவெரல் காயலையே
மரிக்கொழுந்து வெச்சகையில் வாசமின்னும் போகலையே..
மருதையில வாங்கித்தந்த வளவி ஒடையலையே
மல்லுவேட்டி மத்தியில மஞ்சக்கர மாறலையே

அந்தக்கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்பதெப்போ - அந்தக் கொலுசு மணிச்சிரிப்பும்
கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ
கருவேலங்காட்டுக்குள்ள கரிச்சான்குருவி ஒண்ணு
சுதிமாறிக் கத்துதம்மா தொணயத்தான் காணோமின்னு

கடலக்காட்டுக்குள்ள கையடிச்சி சொன்னபுள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்னசொல்ல..

(ராசாத்தி)

எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பெ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

பெ: போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

ஆ: பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

ஆ: கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

பெ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
ஆ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பெ: காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஆ: ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே
ஆ: தூங்காமல் கைசேர காதல் தங்குமே

பெ: ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
பெ: கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

ஆ: பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

பெ: எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

ஆ: பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

பெ: போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

ஆ: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

எகிறி குதித்தேன் வானம் இடித்தது

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே

ஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்
(அலே அலே)

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
(காதல் சொன்ன)
(எகிறி குதித்தேன்)
(அலே அலே)

விழிகளின் அருகினில் வானம்

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் Oh yeah

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல Oh yeah

பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும் Oh yeah

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இல்லை நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனைக் கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது Oh yeah

(விழிகளின் அருகினில் வானம்)