துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

(துடிக்கின்ற )

இனி முத்துக்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

(துடிக்கின்ற )

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

(துடிக்கின்ற )