அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே

அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானாட அகதியை ஏங்குவது என்னடா
உனக்கென நானே ஒற்றை பெண் என வாழ்கிறேன்

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
முள்ளின் இமைகளினால் கண்கள் விழித்திருபேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் புயலாய் கடந்தே புலம்பெயர்வேன்
புயலாய் கடந்தால் உளியாய் நிலமாய் உடனிருப்பேன்
தெருவெல்லாம் அனல் அடித்தல் தென்றல் ஏற்குமா
தலை சாய இடம் கொடுத்தால் கண்கள் வேர்க்குமா
தீயில் செய்த தின்பண்டம் தித்திக்காது பெண்ணே
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

உனைப்போல் உனைப்போல் கடல் நீர் உலையாய் கொதிக்கிறதே
உலை மேல் உலை மேல் இவன் ஊர் படகாய் மிதக்கிறதே

அலை தாண்டும் அகதிக்கெல்லாம் ஈரமில்லையே
நிலவோடு கதைப்பதர்கே நேரமில்லையே
முள்ளில் செய்த கூட்டில் தான் காக்கை குஞ்சு வாழும்
உன்னைவிட்டு என் ஜீவன் போகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்