மாலை நேரம் மழை தூறும் காலம்

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன் ...


நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன் ...

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..

இது தான் வாழ்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே.....

ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே.....

இது சோகம் அனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...

இதம் தருமே... (ஓஹோ )

உன் கரம் கோர்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்..

காதலில் விழுந்த இதயம்
மீட்கமுடியதது..
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது..

ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேன் என ...

(ஓஹோ )

ஒருமுறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன..

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொருத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன ..

என் தேடல்கள் நீ இல்லை..
உன் கனவுகள் நான் இல்லை..
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன ...

(மாலை நேரம்)

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா
(பட்ட..)

அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே
(பட்ட..)
(சின்ன குயில்..)

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்: கார்த்திக்

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்


எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ

எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ
நாங்கெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க
நாங்கலெல்லாம் வாட்டர் தானுங்க
ஹைக்க்ளாஸ் ஃபிகருக்கு ரூட்டு போடமாட்டோம்
லோக்க்ளாஸ் ஃபிகருக்கு கட்ரு போடமாட்டோம்
கான்வென் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு அண்ணன் ஆகமாட்டோங்க
டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே
ஏ.டி.எம் மெஷின் என்று தான் சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ண மாட்டோமே
நாலு நாளு தாடியோட அலைவோமே
(எம் ஜி ஆரு..)

ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரவுண்டடிப்போம்
சாத்துற நாயர் கடை டீக்குடிப்போம்
(ராத்திரியெல்லாம்..)
விடியும் வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம்
இரவினிலே இடிமழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்
வீட்டில் ஓடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான்
ஓவின் வாசலில் தவம் கெடப்போம்
பிக்கப்புன்னா பார்த்திதான் பேக்கப்புன்னா ஓடி தான்
கெட்டப்புள்ள மாட்டிக்கிட்டு ஆய் சொல்லுவோம்
(எம் ஜி ஆரு..)

பீச்சுக்கு போயி லைக்ட் ஹவுஸுக்கே லைட் அடிப்போம்
போலிஸு வந்தா ஸ்டுடன்ஸுன்னு பொய் சொல்லுவோம்
திரையரங்கில் படையெடுப்போம்
விரல்சழியே விசில் சத்தம் பறக்கும்
குட்டி சுவரில் கொடு கிழித்து
கிரிக்கட்டுல எங்க டீமு ஜெயிப்போம்
சிட்டி செண்டர் போயிதான்
ஷெர்ட்டு பேண்டு பார்த்துதான்
விலை மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்
(எம் ஜி ஆரு..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரி சரண்


அன்பாலே அழகாகும் வீடு

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு
(அன்பாலே..)

வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது ஓ..
சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது
மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
(அன்பாலே..)

பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே
ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ...
கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே
(அன்பாலே..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சிவாங்கி

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்

தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா


ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரஞ்சித்


எப்படியோ மாட்டிக்கிட்டேன்

எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவை மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ளிண்டன், ந்ருத்தியா


நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
(நண்பா..)

உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
(நண்பா..)

நண்பா நண்பா உன் நெஞ்சில் ஏதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தாங்கி கிடைப்பது உதன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுல் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
(நண்பா..)

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய்
(தித்திக்கும்..)
தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
(தித்திக்கும்..)

முதன் முதலாய் சறுக்க வைத்த
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் பொட்டுவிட்டாய்
உடல் கண்டிஷன் போட்டு விட்டாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்

இரண்டே இரண்டு இதழை கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனை தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே
பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே
முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும்
சர்க்கரை மரமும் நீ தானே
கூடை கொண்டு பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே
பேரின்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே
என் உடலை உறங்கவைத்தாய்
கண்ணெதிரே கரைய வைத்தாய்
தொடும்போதே தொலைய வைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்

ஹோ காதல் என்பது கத்தியைப்போலே
குத்துக்குத்தி கொண்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும்போதும் வென்றிடுமே
காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது
தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது
ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே
வேட்டையாட விரும்புமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டு திரும்புமே
மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும்
இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்க வைத்தாய்
(தித்திக்கும்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கே கே, ஷ்வேதா


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என் இமைகளை நீவினாய்

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே

உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்-நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டி நாட்டு சமையல் வாசம்
ந்யூ யார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளிஅறை நம் செல்லஅறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேர் ஆடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹயயோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு
மணி முத்தம் எண்ணி கொண்டு
மனதோடு வீடு கட்டி காதல் செய்யுவேன்
உடல் கொண்ட ஆசை எல்லாம்
உயிர் கொண்ட ஆசை
எந்தன் உயிர் போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே

மௌனமாய் உன்னை நானே
மனபாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கிறேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வானத்தில் எழுதா விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி நாம் பறப்போமா

ந ந நன்னா நானா நானா

முத்தத்தை கடனை கேட்கும்
முதலாளி இவள் தானோ
வெட்கத்தை மறந்து வந்த
விருந்தாளி இவர் தானோ
வாலிப உடலில் வசிக்கிறேன்
புன்னகை முகத்தை ரசிக்கிறேன்
காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்
மீண்டும் நான் இன்றே பிறகின்றேன்

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
ஆஹா

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்


நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே


ஒ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே
என்று முகில்கள் தேடக் கூடாதா
ஒ மழை இரவினில் குயிலின்
கீதம் துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால்
அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் உயிரே எங்கே
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்று வெளியே இல்லையே ....
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே....

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே
விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி ஆகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
ஓரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமா

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...


காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே

ட்வின் டவர் மேல aircraftடை - போல
என் மேல மோதினா என்னாவது ?
ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே


கண்ணா உன் கால்சட்டையை நீ போடு மேல்சட்டையை
என்னை நீ ஹே அணைச்சிக்கோ வா வா
அன்பே உன் ஆசைப்படி நீதான் என் ஆடையடி
ராவிலே ஹே..இருட்டிலே வா வா வா
ஒவ்வொரு நாளும் என்னை திருடு திருடு
ஒவ்வொரு இரவை மெல்ல வருடு வருடு
நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே
நீ என்னை அவ்வாறு கூறாத டீ


ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்னை நீ ஏன் பிடிச்ச ?
ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனச்சேன்
அப்படியா ?
உன் பேர உச்சரிசேன் என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது
அயல்நாட்டை கத்தி கத்தி அழைக்காதே
ஷில்பா ஷெட்டி உனக்கு நான் ..
ஹா ..எனக்கு நீ வா வா

தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா
படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா

முடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்
உனக்கென திறந்த நான் டாஸ்மாக் கடை தான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய்
பத்தாமல் போனாலும் கத்தாதே ..ஹே..ஹே..ஹே

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்

ஆஹ்....ஆஹ்....
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

ஆஹ்...ஆஹ்....
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
..ஓ ..ஹோ
நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..

லா...லா... லா...லா... லா...லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்


மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல்-தான்
ஏ ...ஏ
ஆனந்தம்

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


சூரியனும் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
குட் மார்னிங் நீயே சொன்னால்
அது போதும் எப்போதும்

வெண்ணிலவு தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்

தீவில் நம்மை வைக்கா விட்டால்
ஓ ஓ
தேகம் ரெண்டும் ஒட்டி விட்டால்
உயிரே உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


பூவாசம் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் வாசல் நித்தம் வந்தால்
அது போதும் எப்போதும்

மேலாடை தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
நீ என்னை அணைந்துக்கொண்டாள்
அது போதும் எப்போதும்
கண்ணை மெல்ல மூடிக்கொண்டால் ஓ ஓ..
கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்
உயிர் உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி

ஹேய் ஹா ஹேய் ஹா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில் உன்னை தொட்ட மீனு வெந்துடுச்சே
கட்டை எறும்புகள் உன்னை கடிச்சதும் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா………..
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அண்ணன் மீசை துடிக்குதேடி
ஆஆ… அண்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
என்னடா ?
அண்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ
டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே

ஸ்லேட்டு முதுகுக்காரி…………………………………

ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டேய் கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
வர்றேன்..
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தர்றேன் ..
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
வர்றேன்..
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
வர்றேன...
ஸ்லேட்டு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி

ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை
tell me are you ready ?
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலிவூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi


மியாமி சுனாமி நீ
வேணுமே தினமும் நீ
ஸ்ரீலங்கா சுரங்காணி நீ தான்
கண்ணில் நான் ரெக்க பச்ச
கண்ணா உன் நெஞ்சம் பச்ச
காட்டிட்டேன் காதல் பச்ச நான் தானே
ஹே..
விட்டுது முட்டுது விக்குது சொக்குது
அச்சா அச்சாச்சோ
கத்துது விக்குது சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ

நான் ப்ளே பாய் தான்
பாய்ஞ்சா கௌ பாய் தான
நாட்டி பாய்...
நான் தான் ..

ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை

குட்கா..
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

Texas-இன் Apache நீ
Toronto Bullfighter நீ
Bed Room-இல் Good Fighter நீ தானே
Picaso Painting நீ தான்
Bethoven Music நீ தான்
Bernard Shaw ட்ராமா நீ தான்
நீ தான்..ஆஅந்

வெச்சது பச்சுனு நச்சுன்னு இச்சுனு
ஓட்டும் Fevicol
தொட்டதும் பட்டதும் சட்டுன்னு பட்டுன்னு
பத்தும் பெட்ரோல்
ஆடும் Mat போடு ஸ்வீட்டி என் மேல
ஒரு பால் நீ தான்

tell me Are You Ready
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹுக்கா ஹுக்கா ஹுக்கால மாடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலி வூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து இவன் முன்னே நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உக்கார உக்கார என் மடி

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ நானோ நீயோ சேர்ந்தா Bacardi

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


கல்யாணத்தை செய்யும் பொது பஞ்சாங்கத்தை பார்த்தவனே
காதலிக்க பஞ்சாங்கத்தை பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ளை பிறக்கும் நேரத்தை நீ சொல்ல முடியுமா

ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சி இழுக்கும் பொது தீ பந்தம்
பழைய சோறை பொதைச்சு வச்சி பருகும் பொது ஆனந்தம்
கனவு இல்லை கவலை இல்லை
இவன போல எவனும் இல்லை

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்

என்னடி என்னடி முனியம்மா ஹே
கண்ணுல மையி முனியம்மா ஹே
யார் வச்ச மையி முனியம்மா ஹே
நான் வச்ச மையி முனியம்மா ஹே

பட்டு சேலை கூட்டத்திலே பட்டாம் பூச்சி போல வந்து
பம்பரமா ஆடபோறேன் உங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிக்கா வாளமீனு போல வந்து
பல்லைக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாட போறேண்டா
மல்லுவேட்டி மாப்பிளை பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சு போடு

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி

கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலை காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே

என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ


பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

சுடும் நிலவு சுடாத சூரியன் ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்

அ அ ஆ அ அ ஆஆஆ
அ அ ஆ அ அ ஆ
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..


இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்.

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி

குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்
மயிலை புடிச்சி காலை ஒடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடும் அய்யா
அடி எப்படி ஆடும் அய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(குயிலை)

ஆண்பிள்ளை முடி போடும் பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அரிஞ்செனே பிறகு
ஆனாலும் பயனேன்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்?

ஓலை குடிசையிலே இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா? இது தெய்வத்தின் நிந்தனையா?
இதை யாரொடு சொல்ல

(குயிலை)

எல்லார்க்கும் தலைமேல எழுதொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாராற்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்

ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழையென்று இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(குயிலை)

விழாமலே இருக்க முடியுமா ? விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

ச.. ச..
ம ப ச ம ப நீ
ம ப ச நீ ப ம ரீ ச ரீ

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தி
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திரகொளோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
காதல் ஓரு பரமபதம்
கண்ணிரண்டில் தாயம் விழும்
ஏணி மேல ஏறும் போது
காதல் பாம்பு தீண்டினாள்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே


இவள் மூச்சு காற்றை கேட்கும் எந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈர மண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சங்கமம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ

சேர்ந்திருந்தால் ஏகாதேசி
சேலைக்கு தான் ஒரே குஷி
வயது வந்து வலையை விரிக்க
மாட்டி கொண்டேன் நீ ரசி

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா

காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
ஹே ஹே ஹே ...
கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ந ந ந நா .....

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள்தான் சகியே
ந ந ந நா .....
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
ந ந ந நா .....

அடடா இன்னும் என் நெஞ்சம்
புரியலையா? காதல் மடையா?
இது என்னடி இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா..?
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா?
தவறு செய்தால்.. முத்தம் தந்தென்னை
திருத்திக்கனும் தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்
சொல்லிவிடுடா

சொல்லுகிறேன் இப்போதொரு
முத்தம் கொடுடி

நீ இல்லாமல் நான் இங்கே ஏது

நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது
யார் சொன்னாலும் அழகிய காதல் வாயை மூடாது
போ என்றாலும் பழகிய ஆசை தூரம் போகிறது
கால நேரம் காதலில் கிடையாது
பேச பேச நேரமே குறையாது
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

ஒ நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது

காதோடு சேரவே இசை பாட்டு
கை சேரும் வீணையை நீ மீட்டு
வாயோடு சேருவேன் சுவை கூட்டு
அகாரம் போல நீ உனை ஊட்டு
நீ கூடவும் எனை பாடவும்
கதை சிறுகதை தொடர்கதை ஆகும்
நீ மேயவும் மடி சாயவும்
பல விடுகதை விடைகளை சேரும்
பூலோகம் ஓய்ந்தாலும் உனை ஆவேன் நீங்காது
ஆதாயம் சாய்ந்தாலும் காதல் வாழும் சாகாது

ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது

வாராத கூந்தலில் மழை மேகம்
தூராமல் போவது அநியாயம்
ஆறாத தாகமோ அனல் வீசும்
ஆளான வாலிபம் குளிர் வீசும்
நீ பார்வையில் எனை மோதிட
நடு இரவுகள் கலவரம் ஆகும்
நீ சேலையை தொடும் வேளையில்
நக கணுவிலும் எரிமலை மூளும்
வேறேதும் தோணாமல் சரிய வேணும் மடி மீது
நூறாண்டு போனாலும் காதல் தேர்வு முடியாது

ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்


நீ இல்லாமல் நான் இங்கே ஏது
போதும் போதும் பொய்கள் தீது
யார் சொன்னாலும் அழகிய காதல் வாயை மூடாது
போ என்றாலும் பழகிய ஆசை தூரம் போகிறது
கால நேரம் காதலில் கிடையாது
பேச பேச நேரமே குறையாது
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்
ஹேய் டிங்குடாங்கு டிங்குடாங் டிங் டிங்டிங்கி டாங்குடிங்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே என் நெஞ்சில் அடங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

தையத் தா தையத்தா தைய தைய தா பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா உயிர் வாழ்ந்திடும் வரையில்

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

நிலங்கள் உடைந்து போனாலும்
நிழல்கள் உடைவதில்லை

நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும்
சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று
அங்கு ஆணை மேல் மஞ்சனம் ஆட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்


பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்றவா
உன்னை போல அன்பாளன்
யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்டவா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன்
உயிர் நொறுங்க ரசிக்கிறேன்
அணு அணுவாய் உன்னில் பிறந்து என் ஆயுள் அடைப்பேன்.

தையத்தா.....

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்ந்திடும் வரையில்
உனக்கே மடி குடுப்பேன்.
இனி ஓர் ஜென்மம் இருந்தால்
உனக்காய் மீண்டும் பிறப்பேன்
உனது கனவில் நினைவில் உருவில்
நானே என்றும் இருப்பேன்.

தையத் தா தையத்தா தைய தைய தா
பையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா

அக்கம் பக்கம் யாரும் இல்லா

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

ஓரு தடவை சொல்வாயா

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேறை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும் பொது
அன்பே என்ன செய்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

பையா பையா சின்ன பையா உள்ளுக்குள்ளே கியா கியா

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா


பக்கம் இருக்கையிலே மொத்தம் நொறுக்குறியே
அங்கும் இங்கும் அழகா தொட்டு கிருக்குறியே
நெட்டி முறிக்கையிலே கொட்டி கவுக்குறியே
கிட்ட நெருங்கையிலே அள்ளி குவிக்கிறியே
விடாதே மீறி மீறி போடா
தொடாத பாகம் ஊறுதேடா
கனாவா தூங்க வச்சு வாரேன்
மூச்சாலே நீவிவிட்டு போறேன்
பத்து விரல் தொடுதே
அட வெப்பத்தையும் சுடுதே
இதழ் அங்கும் இங்கும் சென்று
முத்த செடி நடுதே

என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

வெட்கம் விட்ட திமிரே , வேட்டுதடி குளிரே
கட்டிபுடிசிக்கவா ? கட்டில் முரிச்சிகவா ?
கட்டழகு பயலே , திக்குதடா உடலே
முத்தம் கொடுதுக்கடா மொத்தம் எடுத்துக்கடா
பலாவை கீறி கீறி பார்த்தேன்
கொஞ்சூண்டு தேனை பூசி வேர்த்தேன்
சுடாத தீயில் மூழ்கி பார்த்தேன்
கண்மூடி மூச்சை மூச்சில் கோர்த்தேன்
மின்னல் அடிக்குதடி இரு ஜன்னல் துட்க்குதடி
இதழ் தொட்டு தொட்டு உயிர் மொட்டு வெடிக்குதடி


என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

ஐ லைக் யூ லைக் யூ உன் லேசர் பாயும் கண்ணை பிரவுன் சீசர் போன்ற தோள்கள்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்களை
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்


பார்த்தவுடன் உயிர் உடைத்துவிட்டாய்
I like you I like you
பார்வைகளால் எனை துகிளுரிந்தாய்
I like you I like you
புத்தம் புத்தம் புது உதடுகளை
குத்தும் குத்தும் உன் மீசையினை
ஹையோ ஹையோ
like you I like you
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்
I like you I like you
அலட்சியமாய் எனை கலக்கிவிட்டாய்
I like you I like you
எனக்கான உயரம் நீ like you I like you
எனக்காக பிறந்தே நீ like you I like you
எண்டா யோசிக்கிறாய் ?
உனக்கான பெண்ணே நான் தானடா
உயிரோடு என்னை தின்னடா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்


கண்களிலே ஓரு சிறு மலர்ந்தாய்
I like you I like you
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்
I like you I like you
அதோ அதோ அந்த நடையழகை
உடல் தொடும் உந்தன் உடையழகை
ஹையோ ஹையோ
like you I like you

விரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய்
like you I like you
திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்
like you I like you
மனம் போன்று வர மாட்டாய்
like you I like you
பசிக்காமல் தொட மாட்டாய்
like you I like you
பெங்களூர் தக்காளி நான்
ருசி பார்க்கும் நண்பா வாயில்லையா
தக்காளி மறுநாள் தாங்காதையா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம் கொடுப்பாயா கொடுப்பாயா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா..அணைப்பாயா..



தலை கோதி உன் தலை கோதி
நான் முழுதாக களைகிறேன்
இமை மோதி உன் இமை மோதி
நான் படு காயம் அடைகிறேன்
ஹே வசிய மருந்தை வசிய மருந்தை
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே

இதழில் இதழால் இலை போடு
நீ இரவு முழுதும் இறை தேடு
மனதை மனத்தால் அணை போடு
என் புடவை நெருப்பில் விளையாடு
விளையாடு.. விளையாடு ..

சொல்லடா... மன்மதா ....
சொல்லடா... மன்மதா ....


ஓரு பாதி உன் உடலாலே
நான் குடை சாய நேர்ந்தது
மறு பாதி உன் உயிராலே
நான் குளிர் காய சேர்ந்தது
ஹே நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்தம் தீவிரவாதி நீயே
இரும்பு மார்பில் வசிப்பேனே
உன் கரும்பு வேர்வை ருசிப்பேனே
ஆசை வெட்கம் காத்தேனே
என் ஆயுள் நொடி வரை புப்பெனே பூத்தேனே

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா...அணைப்பாயா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனே அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே ஏ ஹே தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓ ஹோ தொட்டவ நீயடி

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை


ஐயாரெட்டு நெல்லப்போல அவசரமா சமைஞ்ச
ஐத்த மகன் மஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்ச
குட்டிப்போட்ட பூனை போல காலச் சுத்தி கொழஞ்ச
பாவமின்னு நீவி விட்டா பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நாந்தானே தொட்டுப்பாக்க கூடதா
கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்த பூ ஓ ஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை

கம்மாக்குள்ள ஒத்தமரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிடுவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன் நீயும் கொஞ்சம் வா மா
அங்கே இங்கே கை படும் சொல்லிப்புட்டேன் ஆமா
நிலா கறையை அழிஞ்சாலும் உன்ன திருத்த முடியது
பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடயாது
போகப்போக மாமனுக்கு புத்தி மாறுது
அள்ளவா கிள்ளவா ஓ ஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒஹ் ஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே ஹே ஹே உங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஹோ ஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன எண்ணி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்றும் தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ


எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா ஒ நெஞ்சே நெஞ்சே

ஒ நெஞ்சே நெஞ்சே ..ரா ரா ரா
ஒ நெஞ்சே நெஞ்சே


நீ வெள்ளை சந்திர வீதியில் உலாப் போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனாக் காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றி பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில் நில்

அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணைத் தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு ...


காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுபடி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிரூட்டும் உந்தன் விரல்களின் ச்பரிசமடி

நான் சொல்லும் சொல்லைக் கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தும் நான் கொட்டித் தரவேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல்வேண்டும்
இன்னும் சொல்லு என் ரத்தம் ஊற வேண்டும்

காலேஜு காலேஜு ..
அக்கா எந்த காலேஜு
அக்காவுக்கு love affair
எந்த மாசம் மேரேஜு
காற்றெல்லாம் கேட்குமே
love love love love


சந்தர்பம் அமைந்து விட்டால் பெண்பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசைஅமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணையிருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்

என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஓட்டிச்செல்லும் சத்தம் கேத்த மெட்டுப் போடு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம்கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
வெல்லும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

குமுதம் போல வந்த குமரியே முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்

இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு

தின தந்தி அடிக்கின்றதே ...
தின தந்தி அடிக்கின்றதே ...
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணியோசையே
தினமணி ஓசையே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி

ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு

நான் பாக்யாதிபதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும்பொன்னே உஷா

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

அசத்துறா அசத்துறா அசத்துறா உலகத்த உதட்டுல உலுக்குறா

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
இந்த வயசு போனதுனா திரும்பாதே
சன்னனா சன்னனானே
இந்த வயசு வேறெதையும் விரும்பாதே

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா


இரண்டு வயசானால் அன்னை மடி வேண்டும்
இருபத்தைந்து ஆனால் அவளின் மடி வேண்டும்
பதினெட்டிலே தோன்றும் பருவம் மறைக்காதே
நூருவயசோடும் காதல் மறைக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

சன்னனா சன்னனானே
சன்னனா சன்னனானே

கடல் தாண்டி வந்தாய் மலை தாண்டி வந்தாய்
உன் அழகை தாண்ட முடியாமல் போனேன்
தொடர்வதற்கு நன்றி புகழ்வதற்கு நன்றி
சீக்கிரம் பார்த்து சிரித்தாய் நன்றி

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

அசத்துறா அசத்துறா அசத்துறா
உலகத்த உதட்டுல உலுக்குறா
கசக்குரா கசக்குரா
கண்களில் சூரியனை கசக்குரா

மாணவரே மாணவரே எங்களை படிக்காதே
நீ நானும் திருக்குறளாய் வாழ்ந்திட மறுக்காதே

பதினாறோ பதினேழோ உன்னை
பார்த்ததிலே ரசித்ததிலே புதுசானோம்
ஒ ஒ ஒ

சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால

சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாவணி நழுவுது கீழே தன்னால

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


கொண்டையிலே பூவடுக்கி
கும்முனுதான் பேசுற
கெண்ட காலை நீவுற
கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்கிற
அஞ்சு நொடி நேரத்தில .. கோடி முறை பார்க்குறே
மீனுகுஞ்சு போல துள்ளி ஐய்சாலக்கடி காட்டுற

எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

கொழுத்து போன பொம்பளை இடுப்ப கொண்டாடீ
ஹே .. கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

சக்க போடு போட்டாளே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
ஹே ..தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால


உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற ..
பம்பரமா ஓடுற ..
உன்னை எண்ணி ஏங்கிரேனே என்ன செய்ய போகுற
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

ஒத்த சொல்லு சொன்னதில பத்திகிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது

வடிச்ச சோறு போலதான் ஆவி பரகுற ..
ஹே மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்
சக்க போடு போட்டனே சவுக்கு கண்ணால
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால

தாங்கதான் முடியல ஐயோ என்னால
என் தாகம் தன் கூடுது இந்த பொண்ணால

கண்ணீரை போலே வேறு நண்பன் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ

தோம் கருவில் இருந்தோம் ,

தோம் கருவில் இருந்தோம் ,
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம் ,
தோம் தரையில் விழுந்தோம் ,
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைந்தோம் .
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே ,
எப்போது எப்போது வந்து சேரும்
விடை தோணலையே .ஏய் ..ஏய்
தண்ணீரில் வாழ்கின்றேன்
நான் கூட மச்சாவதாரம் தான்
தோம் கருவில்

அலைகளை அலைகளை பிடித்து கொண்டு
கரைகளை அடைந்தவன் யாருமில்லை
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை
கவலைக்கு மருந்து இந்த ராஜா திரவம்
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை
வட்டத்துக்கு தொடக்கம் முடிவுமில்லை
கற்பனை வருவது நின்று விடும் .

தோம் கருவில் இருந்தோம்...

ஜனனம் என்பது ஒரு கரைதான்
மரணம் என்பது மறு கரை தான்
இரண்டுக்கும் நடுவேயோடுவது
தலைவிதி என்னும் ஒரு நதி தான்
வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேருஇல்லை
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா ?
அதில் மதுரசம் குடிபவன் குற்றவாளியா ?
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது
மண்ணுக்குள் முடிகிறதே
விஷயம் தெரிந்தும் மனித இனம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறகிரதே
(தோம் )

நான் முத்தம் தின்பவள்.. ஒரு முரட்டு பூ இவள்..

நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே….

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா… நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..
மைய்யா மைய்யா…என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ…
ஹே..ஹே..ஹே…

நான் புன்னகை செய்தால் போதும்…
நாலு திசைகள் அடைபட கூடும்..
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..

என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்
காதலின் ஆயுதம் நானே..

மென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..
இனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..
காமா..காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்…
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை..மை.. மைய்யா..
மை..மை.. மைய்யா..
……..
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…


மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…
…ஆ..ஏலீ..லியே..லி..ஹபீபீ…
மைய்யா மைய்யா…

மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…
மை..மை.. மைய்யா.. ஹே..ஹே..ஹே…

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஒ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போவேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே...

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை முள்
காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே


ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ


தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தர தம் தர மஸ்தி மஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே

அரேபியா அரேபியா.. இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?

அரேபியா அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..
அரேபியா..

திமிரும் குதிரையை தாக்கி திணற செய்பவன் ஜாக்கி
வாயை பூட்டிய பின்னே கடிவாளம் ஒன்று தான் பாக்கி
உடம்போ குதிரை மனமோ குழந்தை
கனவே காண்பாள் கண்ணில் உயிரை தேக்கி

அரேபியா..அரேபியா..
இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?


கொள்கை வீரனை கண்டு குதிரை மயங்கியதென்ன ?
இதழை திருடிய கள்வன் இதயம் திருடுவதென்ன ?
வானம் உடைந்து தலையில் சரிந்து
மடியில் மடியில் நொடியில் விழுந்தது என்ன ?

சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...
சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே...

பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே
கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு
அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து
சதையை தாண்டி விதியை காண்பது காதல்

அரேபியா..
அஹா.. அஹா..
அரேரேரேரேரேபியா..

இது ஜாதி குதுரை பழக போவது யாரு ?
இது சண்டி குதுரை அடக்கபோவது யாரு ?
தேசிங்கு ராஜா குதுரை
திமிரான செல்ல குதுரை
சவாரி செய்ய போவது யாரு ?
யாரு ?
சவாரி செய்ய போவது யாரு ?

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..

மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!

பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..

கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!

பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒ
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..


ஆஆஅ ஆஆ...

கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..


ஒஓ ஒஒ ஒஒஓ..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;

பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

ஒஓ ஒஒ ஒஒஓ..
னானன னான னான னா,

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி

போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

காவேரி அல்ல ..
அணை போட்டு கொள்ள இந்த காதல்
விலை வாசி போலே
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இது வா வா
பார்காத ஹனி மூன் ஒன்று பார்கின்ற வேளை இன்று வா வா
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்ஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரெஸ் ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்சச்ஸ் இனி காலை மாலை கிஸ் கிஸ்

நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஒஹொ காதலா ஐ லவ் யு என்று சொன்னாள் பொன்மணி

தூது செல்வதாரடி உருகிடும்போது செய்வதென்னடி

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

பெண்ணழகு பூச்சூடி பொட்டு வைத்து
மன்னவனின் சீர் பாடி மெட்டு போடுது
சென்ற சில நாளாக நெஞ்சம் மாருதேன்
செல்வன் அவன் தோள் சேர கண்கள் தேடுதே
நிலை பாரடி கண்ணமா பதில் கூறடி பொன்னமா
என் காதல் வேலன் உடன் வர

தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
ஒஹ் வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி
கேள் என் சகி சகி சகி
உடன் வர
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி

நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்

நலம்வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண்பாடும்
ஓகோ..கோ..ஓகோ..கொ
ஓகோ...கோ..ஓகோ.கொ

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக்கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே.....

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிர்ப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒருவாசல் மூடி மறுவாசல் வைப்பான் .இறைவன்

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய்...

உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை
பார்த்து விட்டாய்...
உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை
உணர்ந்து விட்டாய்...

யார் இவளோ என்றொரு கேள்வி ?
எழுகிறதா ஆ ஆ ...
மாறி வர என் இரு விழிகள்
துடிக்கிறதா ஆ ஆ ...

உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்'கையில்
அடங்கியதா ஆ ஆ ...
எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில்
பறந்திடுதா?

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே

காதலிக்கும் பெண்ணின்
கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின்
வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோக்‌ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
பூமியின் பூபாளமே

(காதலின்)

காதலிக்கும் பெண் எழுதும் கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே
காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரம் பூ கோடி ரூபாய்
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்தால் லக்‌ஷ ரூபாய்

(காதலிக்கும்)

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
காதலுக்கு அன்னபக்‌ஷி தேவையில்லையே
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
இது நட்பமாந்தோ எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதில்லை
பாலும் வண்ணம் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆடாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா
இல்லை யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் இன்று
காதல் முள்ளின் வேலியா
இல்லை யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் இன்று
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில்
நிழலையும் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுபிடிக்க

கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூண்டிலிட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
கால்கள் இருண்டு விட கண்கள் சிவந்துவிட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் கண்ணை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா எங்கே சொல் சொல்
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் இல்லை
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன்
பேரை சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாய்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கறையும்முன்
உடல் மண்ணில் சரியும்முன்
கண்ணா கண்ணா வா வா
கண்ணீரில் உயிர் துடிக்க
கண்ணா வா உயிர் கொடுக்க..

காதல் என்பது கடவுள் அல்லவா

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா
காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா
வரங்கள் என்பது அலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா
(காதல் என்பது..)

கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும்போது நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்களாய் உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேனே நானே
நீ இன்றி நானாய் வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகு கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
(காதல் என்பது..)

காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லயே

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை


உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே..ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்


பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்


நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்

நீயில்லை நிழலில்லை நிழல் கூட துணையில்லை

ஓர் வெண்ணிலா இரு வானிலா

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்
(ஓ வெண்ணிலா..)

மழை நீரில் வானம் நனையாதம்மா
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா
எனைக் கேட்டு காதல் வரவில்லையே
நான் சொல்லி காதல் விடவில்லையே
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா
இறந்தாலும் காதல் இறக்காதம்மா
(ஓ வெண்ணிலா..)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா
எனதல்ல அதுவும் உனதல்லவா
எதை கேட்ட போதும் தரக்கூடுமே
உயிர் கூட உனக்காய் விட கூடுமே
தருகின்ற பொருளாய் காதல் இல்லை
தந்தாலே காதல் காதல் இல்லை

ஓ வெண்ணிலா இரு வானிலா
நீ..
ஓ நண்பனே அறியாமலா
நான்..

கண்ணே கண்ணே காதல் செய்தாய்
காதல் என்னும் பூவை நெய்தாய்
நண்பன் அந்த பூவை கொய்தான்
ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா

வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா
உள்ளுலாய் உள்ளுலாய் கொழந்தை போல
போகும் ஜனம் பாக்க வச்சா
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில்
கோடு போட்டு ஆடவச்சா
ஆத்தா மனம் வானா காத்தாடியா பறக்குதே
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே

அப்போ கானா தான் புடிக்குமே
இப்போ மெலடியும் புடிக்குதே
குஷி இடுப்ப மட்டும் பாத்தவன்
கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்
காதல் என்பது ஆந்தையப் போலே
நைட்டு முழுவதும் முழிக்கும்
கம்பன் வீட்டு நாயைப் போலே
கவிதையா அது கொறைக்கும்
அவ தும்மல் அழகுடா pimple அழகுடா
சோம்பல் அழகுடா வசந்த முல்லை

வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே
காலமெல்லாம் நான் நனைவேனே வாவா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து
அசைந்து ஆடும் பெண் புறாவே

நம்பியாரப் போல் இருந்தேனே
எம்.ஜி. ஆரப் போல் மாத்திட்டா
கம்பி எண்ணியே வளர்ந்தேனே
தும்பி பிடிக்கவே மாத்திட்டா
காதல் என்பது காப்பியைப் போலே
ஆறிப்போனா கசக்கும்
காஞ்சு போனா மொளகா பஜ்ஜி
கேக்கப் போலவே இனிக்கும்
தாடி வச்சிருக்கும் கேடி ரௌடி முகம்
கேடி என்னை போல்
தெரியுது மாப்பு
(வசந்த முல்லை..)