Showing posts with label சில்லுனு ஒரு காதல். Show all posts
Showing posts with label சில்லுனு ஒரு காதல். Show all posts

நியுயார்க் நகரம் உறங்கும் நேரம்

நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படந்தது...
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது!
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தியும்...
தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...


பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ!
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ!


நாட்குறிப்பில் நூறூ தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே!..

முன்பே வா என் அன்பே வா

பெண் :முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)