அள்ளி வச்ச மல்லிகையே

அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே

ஓ ராமனே...உன் ஆசை மெய்யானதா
ஏ பூங்கொடி...இந்த பூமி பொய்யானதா
காதில் சொன்ன வார்த்த என்னை காவல் காக்குமா
நேத்து சொன்ன பேச்சு நெறம் மாறிப்போகுமா
தங்கம் நெறம் கருக்குமா ஊர் ஒலகம் பொறுக்குமா
நம்பித்தானே வந்து விழுந்தேனே

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே

ஆகாயமும்...இந்த மண்ணும் சாட்சியடி
யார் கேட்டது...மனசாட்சி போதும் இனி
பாதம் நோகும் போது உள்ளங்கையால் தாங்கவா
பொய்யே சொல்ல வேணாம் சின்ன கையே தாங்குமா
வெண்ணிலவு உதிருமா நட்சத்திரம் நகருமா
உவம வேணாம் உண்மை சொல்லு மாமா

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே...ம்...ம்
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்

அள்ளி வச்ச மல்லிகையே...ம்...ம்...ம்
புள்ளி வச்ச பொன்மயிலே