இசையே இசையே இசை மழையே

தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்
தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்
தத்தோம் தித்தோம் தகதோம்
தக்ரதமி தித்தோம் த்தித்தோம்

இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
அன்னை நீ பாலூட்டுவாய்
உன்னை நான் தாலாட்டுவேன்
சந்தம் துள்ளி வாவா
சொந்தம் சொல்லி வா வா
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே

சிறகில்லை ஆனாலும் பறந்திடுவேன்
இசையே உறவாக நீ இருந்தாலே
நதி மீதும் கல மீதும் நடந்திடுவேன்
இசையே துணையாக நீ தொடர்ந்தாலே
மலைகளில் அருவி பாடும் பாடல்
மேகங்கள் எழுதியதோ
மனிதர்கள் பூமியில் பாடும் பாடல்
தாகங்கள் எழுதியதோ
தேவதையின் கனவுகள்தான்
ஸ்வரங்கள் என தோன்றியதோ
தேனிசை எங்கள் தெய்வீகமோ

தீம்ததன்னா தீம்ததனனா
தக்ருதானா தீரனா
தஹ்ருதானா தீரனா
தக்த தகத தகத திரதா
தோம் தோம் தர தீரனா

உன்னோடுதான் எந்தன் உயிர் இருக்கும்
உயிரே என்னோடு நீ இருப்பாயா
உனை வேண்டித்தான் மண்ணில் தவம் இருப்பேன்
தவமே வரமாக நீ வருவாயா
சங்கீத கங்கை பொங்கினால்தானே
என் தாகம் தீருமடி
சமதர்ம ராகம் பாடினால்தானே
என் தேசம் வாழுமடி
இமையமலை கரைந்துருகும்
இதயமெல்லாம் கனிந்துருகும்
புவி எங்கும் உன் சாம்ராஜ்யமே

இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
அன்னை நீ பாலூட்டுவாய்
உன்னை நான் தாலாட்டுவேன்
சந்தம் துள்ளி வாவா
சொந்தம் சொல்லி வா வா
இசையே இசையே இசை மழையே
நீ இல்லாமல் உலகில் உயிர் இல்லையே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ