இது போர்க்களமா இல்லை தீக்குளமா

இது போர்க்களமா இல்லை தீக்குளமா
விதி மாற்றிடும் காதல் புரியாதே (இது போர்க்களமா)

தீயின் மனமும் நீரின் குணமும்
எடுத்துச் செய்தவள் நீ நீயா

தெரிந்தப் பக்கம் தேவதையாக

தெரியாப் பக்கம் பேய் பேயா

நேரம் தின்றாய் நினைவைத் தின்றாய்

என்னைத் தின்றாய் பிழையில்லையா

வேலைவெட்டி இல்லாப் பெண்ணே

வீட்டில் உனக்கு உணவில்லையா

இருவிழி உரசிட ரகசியம் பேசிட

இடிமழை மின்னல் ஆரம்பம்

பாதம் கேசம் நாபிக்கமலம்

பற்றிக்கொண்டதும் பேரின்பம்

தகதகவென எரிவது தீயா

சுடச்சுடவெனத் தொடுவது நீயா

தொடுதொடுவெனச் சொல்லடி மாயா

கொடுகொடுவெனக் கொல்லுகின்றாயா


நண்பர் கூட்டம் எதிரே வந்தால்
தனியாய் விலகி நடக்கின்றேன்
நாளை உன்னைக் காண்பேனென்றே

நீண்ட இரவைப் பொறுக்கின்றேன்
இப்படி இப்படி வாழ்க்கை ஓடிட

இன்னும் என்ன செய்வாயோ

செப்படிவித்தை செய்யும் பெண்ணே

சீக்கிரம் என்னைக் கொல்வாயோ

எந்தக் கயிறு உந்தன் நினைவை

இறுக்கிப் பிடித்து கட்டுமடி

என்னை எரித்தால் எலும்புக்கூடும்

உன்பேர் சொல்லி அடங்குமடி

படபடவென படர்வதும் நீயா
விடுவிடுவென உதிர்வதும்
நீயா
தடதடவென அதிரவைப்பாயா
தனிமையிலே சிதறவைப்பாயா

இது என்ன மாயம்

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
உன்னைப் பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே

உலகமே உன்னால் இன்று புதியதாய்
உணர்கிறேன் உற்சாகத்தை முழுவதாய்

என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

(இது என்ன மாயம்)

நான் நேற்று வரையில்
பூட்டிக்கிடந்த ஜன்னலாய்த் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்

விழிகளை நீ மூடிவைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடிவைத்தால்
பயணங்கள் கிடையாதே

விரலோடுதான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனியில்லையே
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்

(இது என்ன மாயம்)

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோல்சாய்கிறேன் ஒ தோல்சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிகாலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

பறவையே எங்கு இருக்கிறாய்

என் வாழ்கைல வந்தது மூனே மூணு லெட்டர் …

Still i remember my first letter

பிரபா,

நீ என்ன தேடி இருபன்னு எனக்கு தெரியும்…

நானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா'ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….
நீ வரதுகோ லெட்டர் எழுதுரதுகோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…

நேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…
அந்த 'socks தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..

ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே (2)

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே

பார்க்கும் திசைகள் எல்லாம்…. பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…..

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதன்தேன்னே பெண்ணே நானும் படகாக…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடையங்கள் தேடி வருகிறேன் அன்பே

உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளதோ தோடு வானம் போலவே
கதை பேசிகொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் திர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…

ஏழை………….
காதல்………..

மலைகள்தனில் தோண்டுகின்ற ஒரு நதியாகும்….. மண்ணில்……
விழுந்து ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும்

நதி ஆகிடுவோம் … இதோ இதோ இந்த பயணத்திலே…..

இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்..
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியே தன் தொடராத…
என் தனியான பயன்கள் இன்றுடன் முடியாத..

முதல் முறை வாழ பிடிக்கிதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே….

முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பளிக்குதே…

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

உறவுகள் எனக்கு அது புரியல
சில உணர்வுகள் எனக்கு அது வெளங்கல
கலங்கர விளக்கமே இருட்டுல
பெத்ததுக்கு தண்டனைய குடுத்துட்டேன்
மாமன் ரத்தத்துல துக்கத்தையே தெளிசுடேன்
அன்புல அரலிய வெதச்சுடேன்

அட்ட கத்தி தன்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வெட்டு கத்திஆகா அது மாறி இப்ப வேனை ஆச்சு
பட்டாம் பூச்சி மேல ஒரு தொடங்குச்சி மூடியதே
கண்ணாம்பூச்சி அட்டதுல கண்ணு இப்ப காணலையே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

படச்சவன் போட முடுச்சு இது என் கழுத்துல மாட்டி இழுக்குது
பகையில மனசு தான் பதறுது

கனவுல பெய்யிற மழை இது நான் கை தொடும்போது மறையிது
மேகமே சோகமா உறையிது சூர தேங்காய் போல என்ன சுக்கு நூற உடைக்காதே
சொக்கம் பனை மேல நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டி போகயில ஈர குலை வேகிறதே
கூட்டான்சொறு ஆக்கயிலே தெரிக்காத்து விசியதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்லப்பாக்குதே
அது வாளெடுத்து வாளெடுத்து வெட்டப்பாக்குதே

நான் திமிறா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்ப உப்ப போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்னவுடன் மனசு வெறுத்து போச்சே
என் நிழலில்கூட இப்ப ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தளுமே வறப்பென்றும் அளியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் துலைந்தளுமே கண்ணாடி மறக்காதடி
மலை வாசம் வருகின்ற நேரம் எல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தளுமே நினைவேன்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழல் படம் அழிந்தளுமே நிஜமென்றும் அளியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பளுதல்லவா

ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால் நான் வாழ்வது அர்த்தம் ஆகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால் என் ஜென்மத்தின் சாபம் தீரும்

உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோல் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை

யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்கையில் வாழ்கையில் எனக்கு ஒன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைகிறதோ அதுவரை நாமும் சென்றிடுவோம்
வடைபெரும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது

கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் படங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்

உன்னுடைய நெற்றி உன்னை பற்றி கூறுதே

உள்ளிருக்கும் பொட்டு உன்தன் குட்டு சொல்லுதே

என்னுடைய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ

எனக்கு இருக்கும் சக்தி பராசக்தி புருஞ்சுக்கோ

கால் கொலுசு தன் கலகலகுது

கையின் வளையல் காது குளிர கானம் பாட

Chorus

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

போட்டு இருக்கும் கோஷா வேஷம் பேஷா போருந்துதே

பெண் அழகு மொத்தம் கான சித்தம் விரும்புதே

வெண்ணிலவின் தேகம் ஒடும் மேகம் விலகுமா

வண்ண உடையாவும் காணும் யோகம் வாய்க்குமா

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு

எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

அரபு நாடே அசந்து போகும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே ஹீஎய்


முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி

என்னளுமே என் பாட்டுக்கு நீ முதல் வரி

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

எனது நெஞ்சத்தில் முள்லை தெயக்காதே

அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே

அலைகளின் ஓசைகள் தானடி அகதியின் தாய்மொழி ஆனதே
எனக்கென யாரோ என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் நானாட அகதியை ஏங்குவது என்னடா
உனக்கென நானே ஒற்றை பெண் என வாழ்கிறேன்

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
முள்ளின் இமைகளினால் கண்கள் விழித்திருபேன்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

ஒரு நாள் ஒரு நாள் புயலாய் கடந்தே புலம்பெயர்வேன்
புயலாய் கடந்தால் உளியாய் நிலமாய் உடனிருப்பேன்
தெருவெல்லாம் அனல் அடித்தல் தென்றல் ஏற்குமா
தலை சாய இடம் கொடுத்தால் கண்கள் வேர்க்குமா
தீயில் செய்த தின்பண்டம் தித்திக்காது பெண்ணே
ஆயுதம் தான் திருகாணி ஆகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

உனைப்போல் உனைப்போல் கடல் நீர் உலையாய் கொதிக்கிறதே
உலை மேல் உலை மேல் இவன் ஊர் படகாய் மிதக்கிறதே

அலை தாண்டும் அகதிக்கெல்லாம் ஈரமில்லையே
நிலவோடு கதைப்பதர்கே நேரமில்லையே
முள்ளில் செய்த கூட்டில் தான் காக்கை குஞ்சு வாழும்
உன்னைவிட்டு என் ஜீவன் போகாதே

கண்ணை தொலைத்தவன் நானே மண்ணை பெறும்வரை காத்திருப்பேன்
உன்னை தொலைத்துவிட்டலே இங்கு ஓர் அகதியாய் நான் இருபெண்
எந்தன் இமைகளினால் உன்னை உறங்கவைபேன்
மெதுவாய் இமை நீ திறந்தால் என்னை நான் அறிவேன்

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
கானாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

சீஎஎயே ஒஹொஹொஹொஹொஹ் அஹஹஹஹாஆ
சீஎஎயே ஒஹொஹொஹொஹொஹ் எயெஒஹொஹொஹ் …
லேய்ய்யோ ஹோதொத் …லஎய்ய்யொஹொஹொஹ் …
லலேய்யி ..

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண் துகிலை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா ?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குலே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை
கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

கூந்தல் கூரையில் குடிசையை போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினை பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூதத் மேலாக்கு நீ
தள தளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவலவென பேசும் புல்லாக்கு நீ
ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தகரிங்க

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

கருகருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜடா இலவச மின்சாரம்
ஆண் கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….

எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

முதல் மழை என்னை நனைத்ததே..


முதல் மழை என்னை நனைத்ததே..
முதல் முறை ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே..

முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
மனமும் பறந்ததே..
இதயமும்.. ஹ்ம்.. இதமாய் மிதந்ததே .. யீ..

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப்படம் எடுத்தேன்..
என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்தேன்..

எதுவும் புரியா புதுக்கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..

கையை மீறும் ஒரு குடையாய்..
காற்றோடு தான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடு தான் நானும் பறந்தேன்..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே..
இதயமும்.. ஓ.. இதமாய் மிதந்ததே ..

ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்.. என் வாழ்வில் அந்த நாளே இல்லை .. ஓ.. ஓர்நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை..

இரவும் பகலும் ஒரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரினுள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்குமே..
நான் இருந்தாலுமே என்றும் இருக்குமே..

உனக்கென நான் எனக்கென நீ

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை எதற்காஹ எதற்காஹ
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்

புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடிப் பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் இருப்பாய்
நோயென கொஞ்சம் படுத்தால்
தாயென மாறி அணைப்பாய்
உனது காதலில்.. விழுந்தேன்..

அருகினில் வா அருகினில் வா
இடைவெளி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நான் எனில் நீ நீ எனில் நான்
விரைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
படைத்திட தவிக்குதே
மழை வெய்யில் காற்றோடு பூகம்பம் வந்தாலுமே
உனது மடி நான் தூங்கும் வீடாகுமே

அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அணைப்பினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில்.. விழுந்தேன்..

மரணமே பயந்திடும்
தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்
மனித நிலை
தாண்டிப் போகிறோம்
இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ.. ஹாஹா.. பிரிவில்லையே..

எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்

உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே.. ஏ
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே.. ஹேய்
ஹே.. ஹே.. ஹே.. 


 

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே


தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

சரணம் 1:
ஒரு துளி நீர் வேண்டி நின்றேன்
அடை மழை தந்து என்னை மிதக்க விட்டாய்
சிலுவைகள் நான் சுமந்து நின்றேன்
சுகங்களைத் தந்து என்னை நிமிர வைத்தாய்
விழிகள் ஓரம் நீர்த் துளியை
மகிழ்ச்சி தந்து உலர வைத்தாய்
பாலைவனத்தில் பூக்கள் தந்து
சொர்க்கங்களைக் கண்ணருகில் காட்டினாய்
கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
காலை நேரத்தில் இரவு கண்டேன்
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே


கோரஸ்....

சரணம் 2:

இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன்
மின்மினிப் பூச்சிகள் மிதக்க விட்டாய்
தனி அறையில் அடைந்து விட்டேன்
சிறகுகள் கொடுத்தென்னைப் பறக்க விட்டாய்
அலைகள் அடித்து தொலைந்து விடும்
தீவைப் போல மாட்டிக் கொண்டேன்
இறுதிச் சடங்கில் மிதிகள் படும்
பூவைப் போல கசங்கி விட்டேன்
தெய்வம் பூமிக்கு வருவதில்லை
தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்
தாயும் இங்கு எனக்கு இல்லை
எனக்கொரு தாய் அவன் உன் உருவில் தந்து விட்டான்

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
ஓ ஓ ஓ பெண்ணே

ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்

கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே

தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்

பெ : தேன் தேன் தேன் உனைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயை அளந்தேன் சிவந்தேன்

ஆ: தேன் தேன் தேன் எனை நானும் மறந்தேன்
உனை காண பயந்தேன் கரைந்தேன்

பெ: என்னவோ சொல்ல துணிந்தேன்
ஏதெதோ செய்யத் துணிந்தேன்
உன்னோடு சேரத்தானே நானும் மலர்ந்தேன் (தேன்)

பெ : அள்ளவரும் கைய ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன் அன்பை ரசித்தேன்

ஆ : முட்ட வரும் மெய்யை ரசித்தேன்
மோத வரும் பொய்யை ரசித்தேன்
உறங்காமல் ஏங்கும் உந்தன் உள்ளம் ரசித்தேன்

பெ: நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்

ஆ: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும் ரசித்தேன்

பெ: உன்னாலே தானே நானும் என்னை ரசித்தேன் ( தே)

ஆ: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று நேரில் அறிந்தேன்

பெ: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் தீ திருடத்தானே அசை அறிந்தேன்

ஆ: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்

பெ: ஆம் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்

ஆ : நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன் (தேன்)

கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ

பல்லவி
=======

ஆ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
உன் உயிர்வந்து எந்தன் உயிர்தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-1
========
ஆ: காதல் வந்து கெடுத்தபின் கவிதைகள் படிக்கிறேன்
பெ: தோழிகளைத் தவிர்க்கிறேன் உன்னைத்தேடி வருகிறேன்
ஆ: தாய் தந்தை இருந்துமேன் தனிமையில் தவிக்கிறேன்
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்
பெ: எந்தன் வீட்டை சொந்தமென்று நேற்றுவரை நினைத்தவள்
உன்வீட்டில் குடிவர நினைக்கிறேன்
ஆ: உன்னைக் காதலித்த கணமே உனக்குள் வந்தேன்
பெ: கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

சரணம்-2
========
ஆ: கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன்
பெ: கனவுகள் இங்கு இல்லை கண்விழித்து நினைக்கிறேன்
ஆ: பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி
மறந்தால் தானே நினைத்திட
பெ: அன்பே நானோ இறக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும்
உடனே நானும் பிறந்திட
ஆ: உண்மைக் காதல் சாவது இல்லையடி
கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டித் தட்டித் திறக்கிறதே

பெ: நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
காலடிச் சத்தம் ஒன்று கேட்கிறதே
ஆ: உன் உயிர்வந்து எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால் மாறிவிட்டது
பெ: கண்ணே சொல் இதுதான் காதல் என்பதா

வைகாசி நிலவே வைகாசி நிலவே

பல்லவி
======
ஆ:
வைகாசி நிலவே வைகாசி நிலவே
மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ
பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெ: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய்
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடித் தத்தளிக்கும் நேரம்
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும்வரை ஓ..
என் செய்வாய் நாளும் எனை ( வைகாசி நிலவே)

சரணம்-1
=======

ஆ: தூவானம் எனத் தூறல்கள் விழத்
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெ: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு
காதல் கைகூடட்டும்
அ: இதோ எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெ: கனி எதற்காகக் கனிந்தது அணில் கடித்திடத் தானே
அ: ஹோ.. காலம் நேரம் பார்த்துக் கொண்டா
காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..

சரணம்-2
========

ஆ: நூலாடை என மேலாடை எனப்
பாலாடை மேனி மீது படரட்டுமா
பெ: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்லத்
தீண்டித் தீ வைக்கிறாய்
ஆ: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெ: நனை நெருப்பாக இருக்கையில் எனைத் தவிப்பது கண்டு
ஆ: ஹோ.. மோகத்தீயும் தேகத் தீயும்
தீர்த்தம் பார்த்துத் தீராதம்மா

ஆ: வைகாசி நிலவே..
பெ: ஹோ.. வெட்கத்தை உடைத்தாய்..
ஆ: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெ: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு
ஹோ. என் ஜீவன் வாழும் வரை
என் செய்வாய் நாளும் எனை (என் ஜீவன்)

யாரோ யாருக்குள் இங்கு யாரோ


பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

உன்னைக் கண்டேனே முதல் முறை

உன்னைக் கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
உன்னைக் கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய்
ஹைய்யய்யோ.... ஹைய்யய்யயோ
அச்சம் வருதே தப்பிச்செல்லவே
வழிகள் இல்லை இங்கு ஹைய்யோ.... ஹைய்யய்யயோ
சீ... என்னமோ பண்ணினாய் நீயே
உன்னைக் கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டிது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது ? தந்த கனவிது
அகிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
ஏங்கினே நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள் வானமும்
இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

ஹைய்யோ....ஹைய்யோ.... ஹைய்யோ....ஹைய்யோ....
காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும்
கண்ணோடு இருக்கும் பல கடிதம்
பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன்
புரியாமல் தவித்தேன்
பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ
ஹோ காதல் எனை தாக்கிடுதே
சரிதான் எனையும் அது சாய்த்திடுதே
இரவில் கனவும் என்னை சாப்பிடுதெ
பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாருமில்லையே
உன்னைக் கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்

ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால்
உடனே என் உள்ளே நீ வருவாய்
கோயில் உள்ளே கண் மூடி நின்றால்
உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே
நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
நான் உன் பேர் தினம் வசிக்கிறேன்
உயிரை விடவும் உனை நேசிக்கிறேன்
கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
உன்னைக் கண்டேனே முதல் முறை
நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
காதல் பூதமே
என்னை நீயும் தொட்டால் ஹைய்யோ ஹைய்யய்யோ
அச்சம் வருதே தப்பிச்செல்லவே
வழிகள் இல்லை இங்கு ஹைய்யோ ஹைய்யய்யோ
சீ.... என்னமோ பண்ணினாய் நீயே

எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது
கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது
இனிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது
இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டிது
மௌனத்தின் மொழி இது மரணத்தின் வாழ்விது
அந்தரத்தின் கடல் இது ? தந்த கனவிது
அகிம்சையில் கொல்வது கேள் பெண்ணே
ஏங்கினே நான் தேங்கினேன்
ஏனடா போதும் இம்சைகள் வானமும்
இந்த பூமியும் உந்தன் தோற்றமே
உன்பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே

மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரி தானா நீ சொல்
மனசுக்குள் ஏதோ சொல் சொல்
எதிரினில் வந்து நில் நில்
உயிருக்குள் ஏதோ ஜல் ஜல்
இது சரி தானா நீ சொல் சொல்.

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு

தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
கண்ணா கண்ணா மூச்சு ஏன் கன்னா பின்னா பேச்சு
பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு

இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியலை
இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியலை

முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவளைக் கண்டாலே
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்றாலே
விட்டுடு விட்டுடு ஆளை விட்டுடு பொழைச்சு போறான் ஆம்பளை (இரவும்)

ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா?
பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்தைத் தோழியா?
பம்பரத்தைப் போல நானும் ஆடுறேனே மார்க்கமா
பச்சைத் தண்ணி நீ கொடுக்க ஆகிப்போகும் தீர்த்தமா

மகாமகக் குளமே என் மனசுக்கேத்த முகமே
நவ்வாப் பழ நிறமே என்னை நறுக்கிப் போட்ட நகமே
இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல
கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாளே
என்னை அடுக்குப் பானை முறுக்கு போல உடைச்சுத் தின்னாளே

கட்டழகு கட்டழகு கண்ணு படக் கூடுமே
எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே
பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ
பாதாதி கேசம் வரை பாசத்தோடு காட்டு நீ

தேக்கு மர ஜன்னல் நீ தேவலோக மின்னல்
ஈச்ச மரத் தொட்டில் நீ இலந்தைபழ கட்டில்
அறுந்த வாலு குறும்புத் தேளு
ஆனாலும் நீ ஏஞ்சலு

ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சு நின்னாளே இவ
ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சாளே (தாவணி)

ஏனோ கண்கள்

[பெண்]
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே

[ஆண்]
அடி நாக்கில மூக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்குல
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்கிற விலக்குற
விடுதலை கிடையாதா?
அடங்காதாது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே

[பெண்]
ஏதோ ஒன்று என் உள்ளே நடக்கிறதே
ஏனோ நெஞ்சம் மின்மினியாய் பறக்கிறதே
நேற்று பார்த்த பூமி வேறு
இன்று வேறு நிறம் என தெரிகிறதே
மூச்சை போல காதல் வந்து
உள்ளம் எங்கும் விரைவது புரிகிறதே

[ஆண்]
அடி நாக்கில முக்கில பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்குல நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?

[இசை]

[பெண்]
கண்ணாடியை பார்த்தே காலம்
தான் கழிகிறதா?
உன் விட்டில் தினமும்
இது போல் தான் நடக்கிறதா?
இந்த தினசரி மாற்றம் காதலினாலே
இரவுகள் எல்லாமே வேகமாய் விடிகிறதா?

[ஆண்]
வயதோடு ஒரு பூதம் வன்முறையில் இறங்கிடுதா?
ஏமாந்திடும் நேரம் தன் வேலையை தொடங்கிடுதா?
பார்த்திடும் போது பழமுதிர் சோலை
அட பருகிட சொல்கிறது

வா வா வா வா வா வா.........வா
வா வா வா .........

[இசை..]

[பெண்]
மெதுவாய் ஒரு மௌனம்
மனதோடு பேசிடுதோ?
பொதுவாய் ஒரு நாணம்
புன்னகையை வீசிடுதோ?
தடு மாறிடும் நேரம்
வானிலை மாற்றம்
காற்றிலே நடைந்தே குளிர் காய்ச்சல் அடிக்கிறதா

[ஆண்]
புரியாதோரு வேட்கை பூ போல மலர்கிறதா
பூவொன்று தொட்டால் தீ போல சுடுகிறதா
மூடிய பூவுக்கு பூஜைகள் இல்லை...
சூடிட வேண்டும்
வா வா வா வா வா வா ......... வா

[பெண்]
ஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே
ஏனோ கால்கள் உன் இடமே வருகிறதே
ஆசையோடு பேச வந்த வார்த்தை இன்று
விடுமுறை தருகிறதே
நூறு கோடி மான்கள் ஒடும் வேகம்
போல இருதயம் துடிக்கிறதே

[ஆண்]
அடி நாக்குல மூக்குல பேச்சில மூச்சில
உனக்கு இது புரியாதா ?
உன் போக்கில நாய்க்கில
நடையில உடையில
மயங்கிறேன் தெரியாதா?
அடி நிக்கிற நெளியுற
நொறுங்குற நெருங்குற
நெருப்புன்னு தெரியாதா?
தினம் சொக்குற சொறுகுற விக்குற விலகுற
விடுதலை கிடையாதா?
அடங்காதது காமம் அதை நீயும் அடக்காதே
அடி பெண்ணே சாதம் உப்பின்றி ருசிக்காதே

நியுயார்க் நகரம் உறங்கும் நேரம்

நியுயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படந்தது...
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது!
நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுகுவர்த்தியும்...
தனிமை தனிமையோ... கொடுமை கொடுமையோ...


பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ!
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ!


நாட்குறிப்பில் நூறூ தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில் என்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர் காலம் கோடை ஆனதேனோ?
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே!..

ரகசியமாய் ரகசியமாய்

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள் பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

வெள்ளித் தரைப் போலவே என் இதயம் இருந்தது.
மெல்ல வந்த உன் விரல் காதல் என்று எழுதுது.

ஒரு நாள் காதல் என் வாசலில்…
ஒரு நாள் காதல் என் வாசலில்,
வரவா? வரவா? கேட்டது.
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்,
அடிமை சாசனம் மீட்டுது.
அதுவோ? அது இதுவோ? இது எதுவோ?
அதுவே நாம் அறியோமே.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
அவசரமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்துசிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்

ஏதேதோ எண்ணங்கள் வந்து

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே..
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்குதே..
அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..
புரிந்தது புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது உயிர்வரை தெளிந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து
எனக்குள் தூக்கம் போடுதே
வழிதேடி மனசுக்குள் வந்து
வருகை பதிவு செய்ததே....

பழகியருசியே பழகியபசியே உயிரில் உன் வாசம்..
நெருங்கிய கனவே நொருங்கிய கனவே
உதட்டில் உன் சுவாசம்..
வேரில்லா மலர்கள் என்னை வந்து வருடியதே...
காலில்ல காற்றுதான் என்னை தேடி தடவியதே..
சிரகில்லா மேகமும் என்னை என்னை மோதுதே..
நகமில்ல இரவுகள் என்னை மட்டும் கீரியதே..
முதல்முறை தெரிந்தது முதல்முறை புரிந்த்து
முதல்முறை பிறந்தது தனிஉணர்வு..
இது ஒரு ரகசியம் இது ஒரு அதிசயம்
இது ஒரு அவசியம் புது உறவு
கவனித்து நடந்தேன் கவனித்து நடந்தேன்
உனக்குள் விழுந்திடவே
இமைகளை பிளந்தேன் இமைகளை
திறந்தேன் உடனே பறந்திடவே
யார்யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே
நீ வந்து போகயில் கண்கள் அகலம் ஆயிடுதே
திரும்பமல் போனால் பாதி ஜீவன் போயிடுமே
விரும்பாமல் போனால் மொத்த ஜீவனும் சாய்ந்திடுமே.

அலைந்தது அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது அடிமனம் அசைந்தது பார்.
மிதந்தது மிதந்தது இரவேன மிதந்தது
வழர்ந்தது இருஇமை வழர்ந்தது பார்..

ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போடுதே..

உயிரிலே என் உயிரிலே

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே

பல்லவி
========

க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக
பரவசமாகப் பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவன் வசமாக வா வா அன்பே
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
ஒரு சொட்டுக் கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஓ ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முதலாக...

சரணம்-1
========
கார்த்திக்: ஒரு பார்வையின் நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தை
தாங்காமல் வீழ்ந்தேனே தூங்காமல் வாழ்ந்தேனே
நதி மீது சருகைப் போல் உன்பாதை வருகின்றேன்
கரைத்தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய் நான்மாறிப் போனேனே
சுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
க்ரிஷ்: முதல் முதலாக முதல் முத்லாக..
கார்த்திக்: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே

சரணம்-2
========
கார்த்திக்: நீயென்பது மழையாக நானென்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும் அந்த வானிலை சுகமாகும்
ஹரிணி: சரியென்று தெரியாமல் தவறென்று புரியாமல்
எதில்வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான்
கார்த்திக்: என்வசம் என்வசம் இரண்டடுக்கு ஆகாயம்
இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
பபபபப்பப்ப பபபபப்பப்ப ..


ஹரிணி: உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே
உன்முன்னே உன்முன்னே மெய்காண நின்றேனே
கார்த்திக்: ஒரு சொட்டுக் கடலும் நீ ஒருபொட்டு வானம் நீ
ஒருபுள்ளிப் புயலும் நீ பிரம்மித்தேன்
ஹரிணி: ஒளிவீசும் இரவும் நீ உயிர்கேட்கும் அமுதம் நீ
இமைமூடும் விழியும் நீ யாசித்தேன்

எந்தன் வானமும் நீதான்

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே
உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே

நீ நடக்கும் போது உன் நிழலும்
மண்ணின் விழும்முன்னே ஏந்திக்கொள்வேன்
உன் காதலின் ஆளம் கண்டு கண்கள் கலங்குதே
உன்னுடய கால்தடத்தை மழை அழித்தால்
குடை ஒன்று பிடித்து காவல் செய்வேன்
உன்னால் இன்று பெண்ணானதின் அர்த்தம் புரிந்ததே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ஒரே ஒரு வார்த்தயில் கவிதை என்றால்
உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்
என் பெயரைதான் யாரும் கேட்டல்
உன்பெர் சொல்கிரேன்
ஒரே ஒரு உடலில் இருஇதயம்
காதல் என்னும் உலகத்தில்தான் இருக்கும்
நீயில்லயேல் நான் இல்லயே நெஞ்சம் சொல்லுதே

உன் பேச்சிலே என் முகவரி
உன் மூச்சிலே என் வாழ்வடி
எந்தன் வாழ்வடி

எந்தன் வானமும் நீதான்
எந்தன் பூமியும் நீதான்
உன் கண்கள் பார்த்திடும் திசையில்
வாழ்கிரேனே
எந்தன் பாதயும் நீதான்
எந்தன் பயணமும் நீதான்
உன் கால்கள் நடந்திடும் வளியில் வருகிரேனே

ரகசியமானது காதல் மிகமிக

பல்லவி
======

ஆ: ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சரணம் - 1
==========
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல
(ரகசியமானது காதல்)

சரணம் - 2
=========
பெ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல
(ரகசியமானது காதல்)

உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து

பல்லவி
=======


பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
த‌ற்செய‌லா தாய் செய‌லா..
நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு)


சரணம்‍‍‍‍‍ 1
=========


பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
ஓ ஓ ஓ ஓஒ


சரணம் 2
=========


பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே
தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
(உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

எப்ப நீ என்னைப் பாப்ப

எப்ப நீ என்னைப் பாப்ப
எப்ப என் பேச்சைக் கேப்ப
எப்ப நான் பேச கெட்ட பையா

எப்போடா கோபம் கொறையும்
எப்படா பாசம் தெரியும்
எப்ப நான் பேச கெட்ட பையா

(எப்ப நீ என்னைப்)

நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாடுறேன்

ஒரு செல்லா நாயாய் உந்தன்
முன்னே வாலாட்டுறேன்
உன் செயலை எல்லாம் தூரம்
நின்று பாராட்டுறேன்
என்னை ஒரு முறை நீயும்
திரும்பிப் பார்ப்பாயா

கண்ணைக் கட்டிக்கொண்டு உன் பின்னால்
காலம் முழுவதும் வருவேனே
உந்தன் பாதையில் பயமில்லை நீ வா

மலையை சுமக்கிற பலமுனக்கு
மலரை ரசிக்கிற மனமுனக்கு
இனிமேல் போதும் நீ எனக்கு நீ வா

உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா
உன் கோபம் கூட நியாயமென்று ரசித்தேனடா

நீ தீயாயிரு எனைத் திரியாய்த் தொடு
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா

அட என்னைத் தவிர எல்லாப்
பேரும் ஆணாய் ஆனாலும்
நான் உனக்கு மட்டும் சொந்தம்
என்றேன் என்ன ஆனாலும்
நீ இல்லை என்று சொல்லி விடேண்டா

எரிமலை கண்கள் ரெண்டு
பனிமலை இதயம் ஒன்று
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா
பூமியில் ஆம்பளை என்று உன்னை
தான் சொல்வேன் என்று
வேறென்ன சொல்ல கெட்ட பையா

உன்னாலே அச்சமின்றி நான் வாழவே
உன்கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்

இந்தப் பூமிப்பந்தை தாண்டிப்போக முடியாதுடா
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதடா
என் நிலவரம் உனக்குப் புரியவில்லையா

நாக்க முக்க...

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
தொல வச்சி மேளம் கட்டி,
அடரா அடரா நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

ஒய்யாரம ஊட்டுல கோழிகுழம்பு கொதிக்குது
எலிபெண்ட்டு கேட்டுல கிக்கு மேட்டர் விக்குது
கெல்லீஸு ரோட்டுல புள்ளிமானு நிக்குது
வேட்டையாடி புடிங்கடா..
வேகவச்சி தின்னுங்கடா
எங்கடா இங்கடா.. ஆள விடுங்க தேவுடா

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

யேய்..
குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது
அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா
காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா
அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி
சாவு தான் எத்தினி..

எங்கடா இங்கடா
அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்

அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

கிறுகிறு ராட்டிணம் தலைய சுத்தி ஓடுது
பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது
வெள்ளிக்காசு வேணுன்டா கண்ண காட்டு தேவுடா

அடிங்கடா அடிங்கடா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

விறுவிறு மீட்டரு..
இங்கலீசு மேட்டரு
ராத்திரிக்கு குவாட்டரு
விடிஞ்சிருச்சு எந்திரு

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

அடரா அடரா
அடரா அடரா
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)

பறவையே எங்கு இருக்கிறாய்

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..
அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..
பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...

உன்னோடு நானும்.. போகின்ற பாதை
இது நீளாதோ, தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே..
இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
(மேகத்தில் ...)
விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
(மேகத்தில்..)
கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை ஜொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்

மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன்
நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலை காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்
கண்ணா சிலநாள் தெரிவோம் அதனால்
உறவா சேர்த்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்
மடலா வற்றி விடும்
கிளியோ போகும் காற்றும் ஒரு நாள்
வீட்டுக்கு திரும்பி வரும்
பிரித்தால் என்பது இளையுதிர் காலம்
நிச்சயம் பசுமை வரும்
(மேகத்தில்..)

கண்ட நாள் முதலாய்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான் (கண்ட நாள் முதலாய்)

இனி நானும் நான் இல்லை


இனி நானும் நான் இல்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போலே நானில்லை
முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி

நானும் நீயும்
ஏனோ இன்னும்
வேறு வேறாய்
தூரம் என்றே சொல்லை
தூக்கில் போட்டுக்கொள்ள
நீ வாராய்
புறை ஏறும் போதெல்லாம்
தனியே சிரிக்கின்றேன்
அது ஏனடி?
(இனி நானும்..)

உனது கன்னத்தில் குழியில் கட்டில் போட்டேனா
படுத்து கொள்ள விரும்பியதும் சிரித்தாய் நீ
நான் விழுந்தேன்
கையில் கடிகாரம் இருந்த போதும் நீ என்னை
மணி கேட்டதில் அட
நான் விழுந்தேன்
ஒரு வார்த்தை பேசாமல்
புருவத்தைஅ நீ தூக்கி
ஒரு பார்வை பார்த்தாயே
அதில் தானே நான் விழுந்தேன்
என் பிறந்த நாள் வாழ்த்தை
சொல்லவே நீயும்
நள்ளிரவில் பரிசோடு
சுவர் ஏறி குதித்தாயே அப்போது
நான் விழுந்தேன்
எப்போது நினைத்தாலும்
இப்போது போல் தோன்றும் அன்பே
(இனி நானும்)

எங்கும் போகாமல் மனிதர்கள் முகத்தை பாராமல்
வருடம் முழுதும் விடுமுறை என எண்ணி கொள்வோமா
போதும் போதாட ஆடை நீ அணிய
பார்த்தும் பாராதவன் போல் ரசிப்பேனே
பசித்தாலும் உண்ணாமல்
தொலைப்பேசி பணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நானும்
(பசித்தாலும்..)
சில நாட்கள் வாழ்வோமா?
தினந்தோறும் சில ஊடல்
தித்திக்கும் ஒரு தேடல் நிகழும்
(இனி நானும்..)

நெஞ்சோடு கலந்திடு உறவாலே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வழி போகும் என் அன்பே அன்பே
(நெஞ்சோடு..)

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா
(நெஞ்சோடு..)

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை
(ஒரு பார்வை..)
(நெஞ்சோடு..)

கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்

கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே

எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்?
உன்னை விட்டு தான்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்?

போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?

கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவே நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே

எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்?
உன்னை விட்டு தான்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்?

போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?

முன்பே வா என் அன்பே வா

பெண் :முன்பே வா என் அன்பே வா
ஊணே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் என் நெஞ்சம் சொன்னதே (முன்பே வா)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டாய்
கோலம் போட்டவள்
கைகள் வாழி
வளையல் சத்தம்
ஜல்ஜல்
(ரங்கோ ரங்கோலி )
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
பெண் : ஆஅ ஆஅ ஆஆஅ
பூவைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப்பூவைத்துப் பூவைத்த
பூவைக்குள் தீவைத்தாய் ஓஓ
ஆண்:
தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ
பெண் : தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீன் ( முன்பே வா)
ஆண் :
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?
பெண் : தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?
ஆண்:
நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம் ( முன்பே வா)
(ரங்கோ ரங்கோலி)

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்
(பூமிக்கு..)
நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்த பிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை
(பூமிக்கு..)

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே
(பூமிக்கு..)

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
(இரு கண்கள்..)

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான்
ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
(இரு கண்கள்..)

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
(இரு கண்கள்..)

ஏன் சிரிக்கின்றேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)
(என்னோடு..)
(இரு கண்கள்..)

ஏய் செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்

ஏய் செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்
மதம் வேண்டாம் குலம் வேண்டாம்
I want only குனம்
மனம் வேண்டாம் நிறம் வேண்டாம்
I want just want only மனம்
மலராய் மலரே துபாய் குயிலோ
சென்னை கேவை நெல்லை நிலவோ

We have a Romeo
We need a Juliette - (2x)

Computer பெண் போறாடா
மோசமான வேணாம்ண்டா
TV அங்கிள் போறாண்டா
கேட்சமாக்ஸ் மாடல் போறாண்டா
அவ போட்டோவுக்காக சிரிப்பாடா
Cellphone beauty போறாண்டா
அவ always எங்கேசுடா
கண்ணா பின்னா கதை சொல்லாதே
சொன்னா செட் ஆகாதே ஆகாதே
உன்னை அசத்தும் பெண்ணை
உன் life time போதாதுடா

We have a Romeo
We need a Juliette - (2x)

c
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்...

வாடா போடா என்று என்னை
வாஞ்சசை வழிய கூப்பிடனும்
நட்பு காதலை இரெண்டையுமே
அவளே தந்திடனும்
நானும் அவளும் போனாலே
நீயும் இவனும் வெந்திடனும்
முத்தம் ஒன்று நான் கேட்டால்
பத்தாய் தந்திடனும்
ஒன்றாய் குழியில்
ஒன்றாய் உணவு
கொஞ்சம் தூக்கம் நிறைய கனவு
என்னை எனக்கே புதுசா காட்டும்
ஒரு வெண்நிலவை தேடி செல்கிறேன்

We have a Romeo
We need a Juliette - (2x)

செந்தமிழ் பேசும் அழகு ஜிலியட்
அங்கிருக்காலோ தேடுவோம்
செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்....

கனா காணும் காலங்கள்

கனா காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ ?
விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமோ ?

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகளின் ஒரு நரகம் , இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும் , கடவுளின் ரகசியம்

உலகே மிக இனித்திடும் பாஷை
இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
மெதுவா இனி மழை வரும் சை ...

(காண காணும் காலங்கள் ...)

நனையாத காளுக்கேல்லாம் , கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறு என்றால் நட்பு என்று பேரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவை என்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை
தனிமையில் கால்கள் எதை தேடி போகிறதோ
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ

தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழி இல்லையே ...

(கனா காணும் காலங்கள் ...)

இது என்ன காற்றில் இன்று ஈர பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்த்தி வேலை அழைக்கிரத
அதி காலை நேரம் எல்லாம் , தூங்காமல் விடிகிரதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
நடை பாதை கடலில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

பட படைப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனி துளியாய் அது மறைவது ஏன் ?
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிக கொடுமை

(கனா காணும் காலங்கள் ...)

உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே

உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே    
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும்போாது நினைத்து கொண்டேன
கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்புதோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்?
நீ என்னை கேட்ட போது காதல் இல்லைநான்
காதலுற்ற போது நீயும் இல்லை
ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன
இப்போதும் எந்தன்மீது காதல் உள்ளதா?
ஹார்மோங்களின் ஸத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த ஸத்தம்?

என் சாலை இங்கும் அங்கும் ஆண்கள் கூட்டம்
என்
கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை
காட்சி யாவும் புதைந்து போனதே
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்?
ஓ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னொடு எட்டி நின்ற நாகரீகம
்கண்ணில் கண்ணில் வந்து பொகுதே
என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே





காதல் மழையே காதல் மழையே

வச: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....

ஆ: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே....

ஆ: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி)
தேடிக் கிடைப்பதில்லை......
வாழ்ந்த வாழ்வெனக்கும் .......

குழு: காதல்.... காதல்.... காதல்....
(காதல்)

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா? ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)

சொக்குபோடி கொண்ட சுடர் விழியே ?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகைய ?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளிய ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா ?
மூடி கிடந்த ஜோடி திமிர ?
என்ன சொல்ல எப்படி சொல்ல ? எதுகை மோனை கை வாசம் இல்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

மறு முறை உன்னை சந்திப்பேனா ?
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேன ?
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா ?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தூண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் வந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் பொது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போலே நீயும் காதல் கொண்டாயா ?

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினிய ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)

மேற்கே மேற்கே மேற்கே தான்

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!
மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

செம்பூவே பூவே உன்

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...
படை கொண்டு நடக்கும் மன்மத சிலையோ ...ஒ ...
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...
இமைகளும் உதடுகள் ஆகுமோ ...
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ (செம்பூவே )

அந்தி சூரியனும் குன்றில் சாய
மேன் வந்து கச்சை ஆஹா
காமன் தாங்கும் மோக பூவில் முத்த கும்மாளம்
தங்க திங்கள் நெற்றி பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் சுவாச சூட்டில் காதல் குற்றாலம்
தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவை சொல்லி
ஆசை கேநிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பாட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீரியதோ ... (செம்பூவே )

இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில் தும்பி பாடிச் செல்லாதோ
அந்த காமன் அம்பு என்னை சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலருக்கும் சேலை பொன்பூவே ...
மின்னியது தாமரை வண்டு தொடும் நாளிலா
பாவைமயல் சாயுதே மன்னன் மணி மார்பிலோ ..
முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
நாணதலோர் ஆடை சூடிக்கொல்வேன் நானே
தாயாகும் வழி சொல்லாதே பஞ்சனை புதையலின் ரகசியமே ...
(சாய்ந்தாடும் )

போகாதே போகாதே

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த காலங்கள்யாவும் கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு
உனக்காக காத்திருபேன்.... உயிரோடு பார்த்திருபேன்....

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தேவான ஏமாற்றம் தங்களையே
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன

மனம் விரும்புதே உன்னை... உன்னை

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா

(மனம்.....)

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

(நினைத்தாலே.....)

மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!

(நினைத்தாலே.....)

எங்கெங்கே எங்கெங்கே எங்கே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

(துடிக்கின்ற )

இனி முத்துக்களால் தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

(துடிக்கின்ற )

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

(துடிக்கின்ற )

அவள் வருவாளா அவள் வருவாளா

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா

(அவள் ..)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் .......)