காத்தாட போகிறா கைராசி மோகனா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

கண் ஜாட ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

மீன்கூட கையில தேன்கூடு நெஞ்சில
ரெண்டுக்கும் வெல இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
மீன்கூட கையில தேன்கூடு நெஞ்சில
ரெண்டுக்கும் வெல இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
சிறுகால் நண்டாட்டம்
இவ மனசுல என்னடி கொண்டாட்டம்
செண்டு மேலாட கொண்ட கீழாட
ஆடி அசஞ்சி வாராளே
இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான
சிரிப்பா விரிப்பா செலந்தி வலைய

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்

மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு
மங்கம்மா ராணியாம் தங்கந்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையில வித்தாளாம் கருவாடு
வாள மீனுண்டு கையளவுல வஞ்சிர மீனுண்டு
கெண்ட மீனுண்டு கெளுத்தி மீனுண்டு
அள்ளிக் கொடுப்பா ஏராளம்
இவ கடலிலும் போகாம வலையும் போடாம
கரைமேல் இருந்தே சரியா புடிப்பா

காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்
கண் ஜாட ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா

ஹய்யோ காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாத்தான் மனசு கெடும்
இவ பேர கேட்டாத்தான் மயக்கம் வரும்