மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே
உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய ரசம்
உள்ளூர கள்ளூற தள்ளாடுமோ...ஓ
பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய ரசம்
உள்ளூர கள்ளூற தள்ளாடுமோ
குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்
வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ
ஓடை மீனாட ஓடும் நீர் வேண்டும்
உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கின் ஊர்கோலமோ...ஓ
ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை
உல்லாச பல்லாக்கின் ஊர்கோலமோ
நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க என்னும்
ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ
மாலை இடலாமோ மஞ்சம் வரலாமோ
சேலை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

நழுவ நழுவ என்னைத் தழுவ தழுவ வரும்
வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ
மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து வைத்தல்
அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ
காதல் விளையாட காவல் கிடையாதோ
காவல் தடை போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே