நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்
துணிந்து செல்
தொடங்குது
உன் யுகம்
நினைத்ததை நடத்திடு
நினப்புதான் உன் பலம்
தடைகளை உடைத்திடு
தாமதம் அதை விடு
கடமைகள் புதியது
கரங்களை இணைத்திடு
போன வழி மாறி போனாலே வாராது
போ உந்தன் புது பாதை போராடிடு
காலம் ஒரு நாளும் உனக்காக மாறாது
காலத்தை நீ மாற்றி கரையேறு முன்னேறு
(நிமிர்ந்து நில்..)

நேற்றுமில்லை நாளையில்லை
இன்று மட்டும் என்றும் உண்டு
மாற்றமெல்லாம் மாற்றமில்லை
மாற வேண்டும் நீயும் இன்று
ஓடி ஓடி கைகள் ஓய்ந்து
தேடி தேடி கண்கள் சாய்ந்து போவதேனோ
வீரம் இன்று பிறப்பதில்லை
வீரனாக ஆவதுண்டு
கோழை என்று எவனுமில்லை
கோபம் கொண்டால் கோழை இல்லை
இங்கு உன் வாழ்வு உன் கையில்
உன் வேகம் உன் நெஞ்சில்
இங்கே உன் ஆண்மைக்கு
இப்போதுதான் சோதனை
(நிமிர்ந்து நில்..)

விழுவெதென்றால் அருவி போல
எழுவதென்றால் இமயம் போல
அழுவதென்றால் அன்புக்காக
அனைத்துமிங்கே நட்புக்காக
ஓய்ந்துபோனால் சாய்ந்துபோனால்
உந்தன் வாழ்வில் ஏதுமில்லை
ஓய்ந்திடாதே மோதி பாரு
முயன்று ஏறு முடிவில் உந்தன்
படைகள் வெல்லும்
வந்து போவார் கோடி பேர்கள்
மாண்டவர் யார் உலகம் சொல்லும்
நீயு முன்னாடியே ஜீரோ
இப்போதுதான் ஹீரோ
நில்லாதே எப்போதும்
உன் முன்னே தடைகள் இல்லை
(நிமிர்ந்து நில்..)

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

ஹேய் நண்பா பொண்ண பூ போல காப்பாத்து
கூஜாவத்தான் காலம் பூராவும் நீ தூக்கு

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

யார் மனதில் யாரென்று காணுவது எளிதன்று
சிதம்பர ரகசியமே
யார் கழுத்தில் யார் மாலை
கூறுவது யார் வேலை
இறைவனின் திருவுலமே

நேசம் இதை நெஞ்சில் போட்டாலும்
நாள் முழுதும் நீரை விட்டாலும்
நாற்று வர வேரிடம் சேறுமே
பெண்கள் இடம் விட்டு இடம் விட்டு பெயர்கிற பயிரடா

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்
மாப்பிள்ளை தோழர்கள் நாம்தாண்டா
மாத்தியாச்சு வெத்தல பாக்கு மனம் போல்தானே
ஓ ஏழைக்கென அடிச்சாச்சு யோகம்
புடிச்சான் புலிய கொம்பத்தான்
வலையாப்பட்டி தவிலுக்கு ஏத்த வாத்தியம் தானே

ஹேய் ஹேய் காதல் காதல் டைட்டானிக்
காதலுக்கு அது டானிக்
கடலையும் புயலையும் கடந்து நில் அஞ்சாதே
மனைவிக்கொரு மரியாதை
கொடுப்பதற்க்கு மறவாதே
போன பின் அவளுக்கு தாஜ் மகால் கட்டாதே

கொடுத்த வைத்த நண்பா நீ வாழ்க
கோல மயில் நிழலில் நலமாக
இன்று முதல் ஆயிரம் ஆண்டுகள்
தினம் எடு எடு இஅவினில்
சுகம் என்ற புதயலடா

ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

ஆஜா மேரா சோனியே சோனியே சோனியே
ஆஹா மேரா சோனியே
ஆஜா மேரா சோனியே
துஹி மேரி மித்வா

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: SPB சரண், ப்ரேம்ஜி அமரன், விஜய் ஜேசுதாஸ்

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
ஒய்யாரி..
ஏ அசந்து புடி
சிங்காரி..
நீ அழுத்தி பிடி
கொடியேத்தி..
தூக்கி பிடி இனி ரூட்டை கொஞ்சம் மாத்து

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி

குற்றாலத்து ஊத காத்து
கூத்தாடுது நேரம் பார்த்து
இப்போ சுதி ஏறுது தன்னாலே
அம்மாடி உன் ஆட்டம் பார்த்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னாலே

ஏதோ தோணுது எதுவோ நோகுது உன்ன பார்த்ததாலே
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது உன்ன சேர்ந்ததாலே

விடாது இந்த மோகம் வேகம்
தொடாமல் தொட்டு சேறும்
தடால் தடால்ன்னு அடிக்கிற மனசு
வௌவாலு மேலே பாயும்
வராதது வந்தாச்சுடா கொண்டாடலாம்
இனி நம்ம நேரம்தானே

துட்டாலே நீ கட்டி போடு
தூங்காமல் தான் கானா பாட்டு
விட்டால் இது வித வித விளையாட்டு
எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
எப்போ சுகம் விடுமாடா

காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழ
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு
பொன்னால மாலை எப்போதும் போடு
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கொண்டாடவேண்டும்
விடாத கொஞ்சம் கேப்பு
எல்லாருக்கும் நல்லாருக்கும் ஃபுல்லாருக்கும்
இனி நம்ம நேரம் தானே

கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி அட இது போல் வருமாடி
ஒய்யாரி..
ஏ அசந்து புடி
சிங்காரி..
நீ அழுத்தி பிடி
கொடியேத்தி..
தூக்கி பிடி இனி ரூட்டை கொஞ்சம் மாத்து

படம்: சரோஜா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: முஹம்மட் அஸ்லம், ரனினா, கவி

ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று

ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று
ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று
எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும்
விழிகளுக்கு ஏன் இந்த புழுக்கம்
அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்

கன்னி பருவம் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே
உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரன்
தூக்கம் தொலைத்தாய்
(ரகசியம்..)

அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன்
எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன்
காற்றில் கலந்த அவள் ஸ்வாசம் என்னை மட்டும் தீண்ட
கொள்ளை கொண்டு போனாள்
பிரிந்த நெஞ்சம் ஒன்றை
கண்கள் கலங்குதே விடை கொடு

கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம்
காதல் சுமந்தால் என்ன ஆகும் கண்ணா
உன்னி புகுந்த தூக்கம் கொலை காரி
தூக்கம் தொலைத்தாய்

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

பருவத் தென்றல் இல்லாது

பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தான் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றல் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு வாழ்வின் ஓர் அன்பே என்றால் இன்றானதே
சிலர் பார்வைக்கு வாழ்வின் உயில் செல்வம்தான் என்றானதே
காதல் கரைந்து நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கும் மேகம்தான் மேகம்தான்
காதல் அன்றோ

ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா

ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆடாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதன் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்

காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
(ஜூம்ஜூம்..)

காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் சலாம்..

இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா

படம்: பள்ளிக்கூடம்
பாடியவர்: ஸ்ரீனிவாஸ், ஜனனி
இசை: பரத்வாஜ்

பல்லவி
=======

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா

பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா

சரணம்‍‍‍‍‍ 1
========

ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...


சரணம் 2
========

ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ


பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

தேவதையே வா என் தேவ‌தையே வா

படம்: மலைக்கோட்டை
இசை: மணிசர்மா
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடல்: யுகபாரதி

பல்லவி
======

தேவதையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்

சரணம்-1
=======

விளையும் பூமி த‌ண்ணீரை வில‌கச் சொல்லாது
அலைக‌ட‌ல் சென்று பாயாம‌ல் ந‌திக‌ள் ஓயாது
சிதைவுக‌ள் இல்லை என்றாலே சிலைக‌ள் இங்கேது
வ‌ருவ‌தை எல்லாமல் ஏற்காம‌ல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்க‌ள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்ற‌ல் தான் கீத‌மாகும்
சுற்றும் இந்த‌ பூமியை சுழ‌ல‌ச் செய்யும் காத‌லை
க‌ற்றுக் கொண்டேன் உன்னிட‌ம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை

ச‌ர‌ண‌ம்-2
=======

அடைம‌ழை ந‌ம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அன‌லாய் வெயில் சுட்டாலே ம‌ழையே தூவென்போம்
த‌னிமைக‌ள் தொல்லை த‌ந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை ம‌ட்டும் இல்லையேல் ஏது நாட்க‌ள்
கைக‌ள் தொட்டு சூட‌வே காத‌ல் பூக்க‌ள்
க‌ண்ணை விற்று ஓவிய‌ம் வாங்கும் இந்த‌ ஊரிலே
அன்பை வைத்து வாழ‌லாம்
சுக‌மென‌ தின‌ம் சுமைக‌ளில் ம‌கிழ்ந்திரு

தேவ‌தையே வா என் தேவ‌தையே வா
உன் இருவிழி அசைவுக‌ள் எழுதிடும் க‌விதை நான்
பூம‌ழையே வா என் பூம‌ழையே வா
உன் விர‌ல்தொடும் தொலைவினில் விழுகிற‌ அருவி நான்
நீரில்லாம‌ல் மீன்க‌ளும் வேரில்லாமல் பூக்க‌ளும்
பாவ‌ம் தானே பூமியில்
சிலுவைளும் சிற‌கென‌ப் ப‌ற‌ந்திடு

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்

படம்: வீராப்பு
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ
இசை: டி.இமான்
பாடல்: நா.முத்துக்குமார்

பல்லவி
======

பெ: ஹாஹ ஹாஹ ஹா ஆ ஆ....
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
பெ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
பெ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
ஆ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

சரணம்-1
=======

பெ: காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
ஆ: உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
காட்டிக் கொடுக்கிறதே
உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
ஒன்றாய் நடக்கிறதே
பெ: ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

சரணம்-2
=======

பெ: ஆ ஹாஅ ஆ ஹா...
நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ
ஆ: ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
நானே வெறுத்து வந்தேன்
உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
பூண்டையும் நேசிக்கிறேன்
பெ: ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
பெ:ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
எழுந்திட மனசு இருக்குமா
பெ: எழுந்தாலும் மனசு இருக்குமா
ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ...
நான் உன்னைப் பார்க்கிறேன்

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

படம் : சென்னை 600028
பாடியவர்கள் : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு
இசை : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம் : வெங்கட்பிரபு


பல்லவி
=======
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)


சரணம்-1
=========
WarShip என்றும் நீரில் ஓடும்
SpaceShip என்றும் வானில் ஓடும்
FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ
FriendShip என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா.. ஹே (யாரோ யாருக்குள்)

சரணம்-2
=========
எங்கும் திரியும் இளமைத்தீவே
என்றும் எரியும் இனிமைத்தீயே
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா ஹே.. (யாரோ யாருக்குள்)

அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது

படம் : சத்தம் போடாதே
பாடியவர்: ஷங்கர் மஹாதேவன்
பாடல் : நா.முத்துக்குமார்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
பல்லவி
========

பெ: ஹே ஹே ஹே ஆ: ஹே ஹே
பெ: ஹோ ஹோ ஹோ ஆ: ஹோ ஹோ
பெ: லா லா லா ஆ: ம்ஹீம் ம்ஹீம் (ஹே ஹே ஹே)

ஆ: அழகுக் குட்டிச் செல்லம் உன்னை அள்ளித் தூக்கும் போது
உன் பிஞ்சுவிரல்கள் மோதி நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளைக் கடத்திப் போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக் கொண்டேன் நான் திரும்பிப் போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேசத் தெரியல‌
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புதுப்பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

குழு: ஜிஞ்சலேஞ்ச ஜிஞ்சலேஞ்ச‌ ஜிஞ்சலி
மஞ்சரிஞ்ச மஞ்சரிஞ்ச மஞ்சரி (அழகுக் குட்டிச் செல்லம்)

சரணம்‍‍‍-1
=======
ஆ: ரோஜாப்பூ கைரெண்டும் காற்றோடு கதைபேசும்
உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதிபேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால்வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டைப் பிடித்துவிட்டான் இப்படி ஓர்
அட்டினக்கால் தோரணை தோரணை

குழு: ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலிஞ்ச ஜிஞ்சலி....
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

சரணம்‍-2
=======
ஆ: நீ தின்ற மண்சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழிகேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்குக் காட்டி ஓடுகின்ற
கண்ணனே புன்னகை மன்னனே

குழு: ஜிஞ்சலிஞ்ச..
ஆ, குழு: அழகுக் குட்டிச் செல்லம்..
ஆ: அம்மு நீ என் பொம்மு நீ.....
ஆ, குழு: ஜிஞ்சலிஞ்ச...
ஆ: அழகுக் குட்டிச் செல்லம்..

ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு

படம் : வேல்
பாடியவர்: ஹரிசரண்
இசை : யுவன்ஷங்கர்ராஜா

பல்லவி
======
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே)


சரணம்-1
=======
ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)


சரணம்-2
========
ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)

கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே

படம்: ராமன் தேடிய சீதை
பாடியவர்கள்: மதுபாலகிருஷ்ணன், ஹரிணி
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======
பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: ஹீம் ஹீம் ஹீம்
ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 1
=======
ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌
பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌
ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

சரணம் 2
=======
ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை
ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

சட்டென நனைந்தது நெஞ்சம்

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகைத் தூறல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

எந்த வாசல் வழி காதல் நடந்துவரும்
என்று காத்துக்கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து
கூரை திறந்து வரும்
என்று இன்று தெளிந்தேன்

தாவி வந்து என்னை அணைத்தபோது
எந்தன் சல்லிவேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லைவரை சென்று மீண்டு
இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு
துடைத்திடு வெட்கத்தை
அணைப்பின் ஆதிக்கத்தால்
வெளியேற்று அச்சத்தை

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு
சட்டென நனைந்தது நெஞ்சம்


படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: மின்மினி

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல நீ வந்தாயே!
சுவாசமாக நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!
காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!
மரணம் மீண்ட ஜனனம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!
இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!

ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியுமிடம் நீதானே!
காற்றைப் போல் நீ வந்தாயே!
சுவாசமாய் நீ நின்றாயே!
மார்பில் ஊறும் உயிரே!

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியது:- சின்மயி
இசை:- ஏ.ஆர்.ரகுமான்

Hey Good Bye நண்பா Hey Good Bye நண்பா

பெண்: Hey Good Bye நண்பா Hey Good Bye நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிஷமோ துளி விஷம் ஸ்பரிஷமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

ஆண்: நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீ யாரோ நான் யாரோ

பெண்: (Hey Good Bye நண்பா)
ஆண்: ( நீ யாரோ)

ஆண்: அந்த சாலையில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை
இது வேண்டாத வேலை

ஆண்: ( நீ யாரோ)
பெண்: (Hey Good Bye நண்பா)

படம்: ஆயுத எழுத்து
பாடியவர்கள்: சுனிதா சாரதி, சங்கர் மகாதேவன், லக்கி அலி, கார்த்திக்
இசை: A.R.ரஹ்மான்

யாக்கை திரி காதல் சுடர் அன்பே

ஆண்: யாக்கை திரி காதல் சுடர் அன்பே
ஜீவன் நதி காதல் கடல் நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

(யாக்கை திரி)

பெண்: தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மறவோம் துறவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மறவோம் இரவோம்
(தொடுவோம்)
(தொடுவோம்)

பெண்: ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் வைதம் காதல் அத்வைதம்
சருமம் சூனியம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதம் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே
அது உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்

(யாக்கை திரி)
(தொடுவோம்)

படம்: ஆயுத எழுத்து
பாடியவர்கள்: சுனிதா சாரதி, ஷாலினி, A.R.ரஹ்மான்
இசை: A.R.ரஹ்மான

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ?

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே!
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே!

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

படம் : ரோஜா (1992)
இசை : ஏ.ஆர். ரகுமான்
குரல் : உன்னிமேனன், சுஜாதா

சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

(சின்ன சின்ன ஆசை)

மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

படம்: ரோஜா
பாடியவர: மின்மினி
இசை: A.R.ரஹ்மான்

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

ஓ.. கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை..
(கண்ணில்..)
(கண்ணில்..)

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடிப் பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வழிக்கின்றதா
நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா
காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் சந்தனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடி வா..
(பூங்காற்றிலே..)

(கண்ணில்..)
(கண்ணில்..)
வானம் எங்கும் உன் விம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் முன்னே
ஓடோடி வா..
(பூங்காற்றிலே..)

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ
(கண்ணாளனே..)

உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் மேலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும் உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும் புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது
(கண்ணாளனே..)

சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன் இந்த உலகத்தில் நான்ல்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால் எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
(கண்ணாளனே..)

படம்: பம்பாய்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சித்ரா
வரிகள்: வைரமுத்து

ஜன கன மன ஜனங்களை நினை

ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம்
ஒ யுவ யுவா ஓ யுவா

ஆயுதம் எடு ஆனவம் சுடு
தீப்பந்தம் எடு தீமையை சுடு
இருளை எரித்துவிடு

ஏழைக்கு வாழ்வது இருக்கின்ற இடைவெளி குறைத்து நிலை நிறுத்து
அட கொட்டத்தின் திட்டத்தை சட்டத்தின் வட்டத்தை உடைத்து

காட்டுக்குள் நுழைகின்ற காற்றதுவோ
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒ யுவா

ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

அச்சத்தை விடு லட்சியம் தொடு
வேற்றுமை விடு வெற்றியை தொடு
தோழா போராடு
மலைகளில் நுழைகின்ற நதியென சுயவழி அமைத்து படை நடத்து
அட வெற்றிக்கு பக்கத்து முற்றத்தில் சுற்றத்தை நிறுத்து
நல்லவர் யாவரும் ஒதுங்கிகொண்டால்
நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும்
வாலிப கூட்டணி வாலெடுத்தால்
வலபக்கம் பூமி திரும்பிவிடும்
ஒ யுவா ஒ யுவா ஒ யுவா ஒயுவா

ஜன கன மன
ஜனங்களை நினை
கனவுகள் வெல்ல
காரியம் துணை
ஒளியே வழியாக
மலையே படியாக
பகையும் பொடியாக
சட் சட் சட் சட் சட்

படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: AR ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே
மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே! பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

(வெள்ளைப் பூக்கள்)

காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ!
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ!

(வெள்ளைப் பூக்கள்)

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!

(வெள்ளைப் பூக்கள்)


படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடல்: வைரமுத்து
இசையமைத்து பாடியவர்: ஏ.ஆர்.ரஹ்மான்

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே
கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

மக்கள் மக்கள் என் பக்கம்
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம்
என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம்
அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம்
வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால்
கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்
(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே
நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால்
தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம்
விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு
வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை
இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால்
இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு
(கண்ணைக் கட்டிக்)

வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை

தோழா…தோழா…லாலல்லா
தோழா…தோழா…லாலல்லா

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)

ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)

அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)

பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)

படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமீட், மனோரமா
வரிகள்: வைரமுத்து

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு

பூவுக்கென்ன பூட்டு காற்றுக்கென்ன ரூட்டு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
வானும் மண்ணும் யாருக்கு நீயும் நானும் யாருக்கு
குல்லா குல்லா ஹல்லா குல்லா

நீ சிரிச்சா தீவானா கைக்கொடுத்தா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
நீயும் நானும் ஒன்னான்னா ரூப்பு தேரா மஸ்தானா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

சோலைக்கு என்ன ஒரு கவலை
எப்போதும் பறவைகள் அழுவதில்லை
சூரியனில் என்றும் இரவு இல்லை
எப்போதும் சொர்க்கத்துக்கு தடையில்லை
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா

காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
காணத்தானே கண்கள் கண்ணீர் சிந்த இல்லை
மேகங்கள் மண்விழுந்து காயங்கள் ஆனதில்லை
வாழத்தானே வாழ்க்கை வீழ்வதற்கு இல்லை
பொல்லாத ஜாதி மதம் இறைவனும் சொல்லவில்லை
(நீ சிரிச்சா..)

பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
பாடத்தானே நெஞ்சம் மௌனம் என்ன என்ன
ஆசைக்கு ரெக்கைக்கட்டி கட்டவிழ்த்து ஆடவிடு
வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லை
கையோடு கை சேர்த்து வானத்தையே தொட்டுவிடு
குல்லா குல்லா ஹல்லா குல்லா
குல்லா குல்லா ஹல்லா குல்லா
(காணத்தானே கண்கள்..)
(நீ சிரிச்சா..)

படம்: பாம்பே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுஜாதா, மால்குடி சுபா
வரிகள்: வைரமுத்து

நறுமுகையே நறுமுகையே

நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)

மங்கை மான்விழி அம்புக்ள்
என் மார்த்துளைத்ததென்ன
பாண்டிநாதனைக் கண்டு என்
மனம் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையினில் மேகலை இருக்கவில்லை
(நறுமுகையே..)

யாயும் யாயும் யாராகியறோனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழி அரிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)

திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொட்டிறப்
போய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா(2)
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதாறள நீர்வடிய கொட்டிறப்
போய்கை ஆடியவள் நீயா (2)

படம்: இருவர்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..

மனம் ஓடுது மேகம் மேலே போவோம் பின்னாலே
சுகம் தேடுது மேலே மேலே போவோம் தன்னாலே
(மனம் ஓடுது..)
வா வா வா நீ கூச்சம் கொள்ளாதே
நிலா நிலா கண்ணை கட்டிக் கொள்ளாதே

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது...)

அடடா அடடா அனுபவிடா
இளமையில் தடை எதுக்கு?
கனவால் கனவால் கடை விரிடா
நனைந்தப்பின் குடை எதுக்கு?
தினம் உயிருக்கு தானே உடல் வளர்த்தோம்
அதில் உணர்ச்சிக்கு தானே தடை வித்தித்தோம்
ஜனனம் மரணம் மறந்திடும் போதை

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது..)

இரவா பகலா தெரியலையே
காலங்கள் நகரலையே
ஏ முதலா முடிவா புரியலையே
இன்பத்தில் தடையில்லையே
இது மனிதனும் மிருகமும் சேரும் இடம்
இங்கு கவலைகள் தானாய் ஓடிவிடும்
ஜனனம் மரணம் மறந்திடும் போதை

ஹபீபீ ஹபீபீ ஹபீபீ ஹபீபீ
ஓ...ஓ..ஓ ஓ..
(மனம் ஓடுது..)

படம்: சாது மிரண்டால்
இசை: தீபக் தேவ்
பாடியவர்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: நா. முத்துக்குமார்

முகம் பூ மனம் பூ

முகம் பூ மனம் பூ
விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ
சிரிப்பு திகைப்பு
நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு

நடை போடும் மலர் காடி
ஒரு பூவும் போதுமா சொல்
எனை பூவாய் உன்னில் சூட
சுகமாகுமா சுமையாகுமா
இருமலர்கள் உரசுவதால் தீ தான் தோன்றுமா
(முகம் பூ..)

உதட்டின் மறைவில் உறைந்தது பெண்மை
ரோஜாப் பூவில் துளைத்த நிறம்
மீசை என்னும் காம்பினில் பார்த்தேன்
நெரிஞ்சிப் பூவில் உறுத்தும் குணம்
ஒவ்வொரு ஆரமும் சொவ்வரலி
ஒவ்வொரு விரலும் சாமந்தி
நீ என் பூ நான் உன் பூ
நாம் சேர சேர மாலை ஆகலாம்
உடை மலரே உடை மலரே
குடைவாய் உடைகாய் நீ

நானே நானே சூரிய காந்தி
என்னை சுற்றும் சூரியன் நீ
நானே நானே சந்திரப் பார்வை
என்னை வளர்த்தும் அல்லியும் நீ
உன் விரல் உரசும் ஒரு கணத்தில்
எனக்குள் நூறு சந்த்னப் பூ
உன் கண்கள் ஊதாப் பூ
ந் பார்க்கும் பார்வை பேசும் ஓசை போல்
ஒரு பொழுது சிவந்து விடும்
நானும் ஜாதிப் பூ
(முகம் பூ..)

படம்: தோட்டா
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், சின்மயி

சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்

சூரியனே என் கண்ணைக் கண்டு கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை பார்க்கும் பார்
என் வீட்டை கண்டதும் எல்லோரும் சில நேரம் நிற்பார்
என் கால் இனிமேல் சிம்மாசனம் ஏறும் நாள்
காலமெல்லாம் ஜாதகத்தில் யோகம் தான்
கேட்பதெல்லாம் செயற்கை காதல் எங்கும் பார்
கல்லூரிப் பெண்களும் என் போட்டோ மேலே ஆசைக் கொள்வார்
என் பேர் தமிழ் போல் நூறாண்டுகள் வாழும் பார்
மேல் மேல் மேல் மேலாக
பேஷன் இனிமேலே..
பேஷன் இனிமேலே..
உயர்வேனே மேலும் மேலும்
ரேஷன் விலை போலே
(சூரியனே...)

வானவில்லில் சட்டை ஒன்று காயும் பார்
வீதி எங்கும் கட்-அவுட் தோன்றும் பார்
ஒன் மோர் சூப்பர் ஸ்டார் என்றாலே இனி நாந்தானே
கூல்..
சீனச் சுவர் போல் என் சாதனை நீளும் பார்
கூட்டணிகள் ஆனால் அவை எட்டுமே
வாவ்..
டாக்டர் பட்டம் தந்து என்னை வாழ்த்துமே
சூப்பர்..
என் கார் செல்லவே தார் சாலை மூடி தாகம் உண்டே
என் வேர் உலகை பின்னால் அது பாடுமே
எல்லோரும் என்னை வாழ்த்த ஊரை ஆள்வேனே
கூல்..
செல்வாக்குக் கூட கூட சி.எம் ஆவேனே..

படம்: வெள்ளித்திரை
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: லக்கி அலி, ராகுல் நம்பியார்

பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா

பேரின்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர்ஸ்டாரு தானப்பா
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா
கேட்காம நாடே சொல்லும் சூப்பர்ஸ்டாரு தேனப்பா

பார் போற்றும் பாசக்காரன்
அவர் போல யாரைச் சொல்ல
பாராட்ட வார்த்தையில்ல
அவர் தோழனே
உனைப் பாடவே சுகம் கூடுதே
இதைவிடப் பெருமை கிடையாதே

(பேரின்ப பேச்சுக்காரன்)

தலையில் ஊரைக் காக்கும் சிவனை
தெய்வம் என்று சொல்வோமே
பூமி தலையைக் காக்கும் இவனை
என்றும் நெஞ்சில் வைப்போமே

இறைவன் காலில் முடியை வைத்து
வேண்டிக் கொள்ள எல்லோரும்
இவனின் கையை முதலில் தேடிப்
போகின்றோமே எந்நாளும்

இவன் கையை நம்பி
வாழ்வை வெல்லும் வாழ்வின் அத்தாட்சி
இவன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளும் காளி அண்ணாச்சி
பிறர் தலையின் கனமெல்லாம்
இவனாலே குறையாதோ
இவன் கருப்புத் தங்கம் வெட்டி எடுக்கும்
கலைஞன் தெரியாதோ

(பேரின்ப பேச்சுக்காரன்)

அடுத்த மனிதன் வளர்ச்சிக் கண்டு
மகிழும் மனிதன் உன் போலே
எவரும் இல்லை உலகில் இன்று
தலையும் தருவார் தன்னாலே
கொடுத்த தலையைக் குறையில்லாமல்
செதுக்கும் கலையைப் பெற்றாயே
உதிர்ந்த முடியை அழகாய் மாற்றி
வறுமை போக்கக் கற்றாயே


நீ கத்திரிக்கோலை செங்கோலாக்க வேலை செய்பவன்
நீ சோப்பு போட்டு செய்யும் தொழிலால்
வாழ்வை வெல்பவன்
அழகாகும் முகமெல்லாம்
உன் கையின் பரிசாகும்
உன் அழகு நிலையம்
ஆண்கள் மட்டும் ஆளும் அரசாங்கம்

(பேரின்ப பேச்சுக்காரன்)


படம்: குசேலன்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: யுகபாரதி
பாடியவர்: கைலாஷ் கெர், ப்ரசன்னா

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ

ஆசை ஐத்தானே மீசை வைத்தானே
கொஞ்சும் நேரத்தில் கூச வைத்தானே

உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள் நெஞ்சில் பூவாசம் உன்னாலோ
உய்யாலோ உய்யாலோ உய்யாலோ
உள்ளத்தில் உள்மத்தம் செய்தாளோ

உய்யாலாலோ உய்யாலாலோ நீதான் தேன் ஆறோ
நீ அங்கும் எங்கும் பூத்து நிற்கும் தங்க பூந்தேரோ
உய்யாலாலோ உய்யாலாலோ நீ தான் காட்டாறோ
என் குட்டி குட்டி கண்ணத்தில் முத்தம் தருவாயோ
சுறா மீனு கண்ணு கண்ணு
நிலா தேனு பொண்ணு பொண்ணு
ஒரே வீச்சுலே என்னை கொன்னு தீய மூட்டுறா
(உய்யாலாலோ..)

கொத்துக் கொத்துக்கா உன்னை ஊத்தி தான்
மிச்சம் வைக்காம முழுசா குடிக்கட்டா
திட்டு திட்டாக வெட்கம் பட்டுத்தான்
கூச்சம் பார்க்காமல் கண்ணும் கட்டுட்டா
அடி வாயாடி அடி வாயாடி அடி வாயாடும் தவிலே நீதானா
தொட தொணாத இடமே தேன் தானா
கொடி கொண்டாடும் மரமே நீ தானா
(உய்யாலாலோ..)

நீயும் நானும் தான் ஒன்னா பேசித்தான்
முத்தத் தீர்மானம் போட்டு கொண்டோமா
நானும் நீயும்தான் கன்னம் ஒட்டித்தான்
பூட்டே இல்லாம பூட்டிக் கொண்டோமா
நெஞ்சில் ஒரு வீச ஆசை மறைச்சேனே
கண்ணில் ஒரு கோடி தூக்கம் தொலைச்சேனே
என்னில் ஒரு பாதி தேடி புடித்தேனே
நாச்சீரே..

படம்: தாம் தூம்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: சுஜாதா, கைலாஷ் கேர்

ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே

ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு போடவா

வாழ்க்கை என்னும் கேமராவில் நாம்
புன்னகை மட்டும் புகைப்படம் எடுப்போம்
வலிகளையெல்லாம் ட்ராஷில் போட்டு
ரிஃப்ரெஷ் பண்ணி தினம்தினம் சிரிப்போம்

ஏலே ஏலே மொட்டை மாடி மேல ஏறி
டெலஸ்கோப்பை வச்சுப் பார்க்க வாலே
கேலக்ஸியில் குதிக்கலாம் மேலே
சயின்சைக் கலக்கிட வா

டைம்மிஷினில் ஏறிச் சென்று நாமும்
ஹிரோஷிமா யுத்த அழிவைத் தடுப்போம்
ஹிட்லர் பிரெயினை சர்ஜரி செய்து அங்கே
குண்டுக்கு பதிலாய் பூக்கள் எடுத்து வைப்போம்
சார்லி சாப்ளினுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்போம்
மொசமொசன்னு வளர்ந்துவிட்டோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

மழை மேகம் எங்கே அதைத் தேடி
நாம் விரட்டிச் சென்று பிடித்திடுவோம்
மரம் கோடி வைத்து மழை வந்தால்
வருக வருக என்று வரவேற்போம்
ஆண்டெனாவில் அமரும் பறவை அழைத்து
வீட்டில் வந்து கூடு கட்டச் சொல்வோம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)

காற்றின் முகத்தில் கரியைப் பூச வேண்டாம்
காரை விட்டு சைக்கிள் வாங்கிப் பறப்போம்
கருப்பு கலரில் விஷக் கோலா வேண்டாம்
கரும்பு ஜூஸு இளநீ வாங்கிக் குடிப்போம்
டெளரி மாப்பிள்ளைக்கு காதல் சொல்லிக்கொடுப்போம்

(ஏலே நேரம் வந்துடுச்சு ஏலே)


படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: நா.முத்துக்குமார்
பாடியவர்: க்ரீஷ், நரேஷ் ஐயர்

ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்

சின்னம்மா சிலகம்மா நில்லு நில்லு நில்லு
செல்லம்மா சிலையம்மா சொல்லு சொல்லு சொல்லு

அம்மம்மா அழகம்மா அடிநெஞ்சில் யாரம்மா
விழியம்மா முழியம்மா சிற்பங்கள்(??) எவனம்மா


ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்
சொல் எதுக்கு எதுக்கு பிழி கெஞ்சல்
நீ சிரிக்க சிரிக்க கொட்டும் கிளிஞ்சல்
வெட்கம் ஒதுக்கு ஒதுக்கு அது இடைஞ்சல்

கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்
நிறம் மாறிப் போனதென் மஞ்சள்
இனி உனக்கும் எனக்கும் முத்தக் காய்ச்சல்
அடி துவங்கு துவங்கு வெட்கக் கூச்சல்

வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்
வெயிலாய் தொட்டானே சூடு சூடு சூடாய்
மழையாய்ப் பட்டானே கோடு கோடு கோடாய்

யார் யாரோ அவன் யாரோ
என் பேர்தான் கேட்பாரோ
என் பேரோ உன் பேரோ
ஒன்றென்று அறிவரோ

சின்னம்மா சிலகம்மா
சின்னம்மா சிலகம்மா


உம்மா உம்மா
ஐயோ கசக்கும்
சும்மா சும்மா
கேட்டால் இனிக்கும்
காதல் கணக்கே வித்தியாசம்
சுடுமா சுடுமா
நெருப்பைத்(??) தீயே
சுகமா சுகமா
காதல் கனவே உயிர் வாசம்
நீ உருகி வழிந்திடும் தங்கம்
உன்னைப் பார்த்த கண்ணில் ஆதங்கம்
உன் எடையும் இடையும் தான் கொஞ்சம்
உன் வீட்டில் உணவுக்கா பஞ்சம்


( சின்னம்மா சிலகம்மா )


வெள்ளை இரவே
இரவின் குளிர் நீ
தெளியும் நதியே
நதியின் கரை நீ
நீயோ அழகின் ரசவாதம்
கொஞ்சல் மொழியே
மொழியின் உயிர் நீ
உறையா பனியே
நீ என் நூறு சதவீதம்
நீ பூக்கள் போர்த்திய படுக்கை
உன் உதடு தேன்களின் இருக்கை
நின் உடலின் பயில்கிறேன் கணக்கை
உனைப் பாட ஏதடி தணிக்கை

(ஜல் ஜலக்கு ஜலக்கு உன் கொஞ்சல்)


படம்: சக்கரக்கட்டி
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: பா.விஜய்
பாடியவர்கள்: பென்னி தயால், சின்மயி

கண்ணனுக்கு என்ன வேண்டும்

கண்ணனுக்கு என்ன வேண்டும்
கண்ணனுக்கு என்ன வேண்டும்

தினமும் உதிக்கும் பொன்மலரோ
இதழ்கள் உதிர்க்கும் சொல்மலரோ
உன்னை எண்ணி ஏங்கித்தவிக்கும்
உள்ளம் என்னும் மலரோ
சொல்லு கண்ணா சொல்லு கண்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)


நதி வழி ஓர் ஓடம் போவது போலே
விதி வழி என் உள்ளம் உன் புகழ் பாடும்
தூரிகைகள் தீட்டாத ஓவியம் நீயே
பாரில் உனைப் பாடாத காலங்கள் வீணே
உன்னைப் போற்ற மண்ணின் மீது
உள்ளம் உண்டு கோடி கோடி
உந்தன் உள்ளம் என்னவென்று சொல்லு கண்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)

அல்லும் பகல் தோறும் உன் ஸ்ரீகிருஷ்ண கானம்
உள்ளமதில் உருகாமல் போனால் என்னாகும்
வெண்ணிலவில் நதியோரம் வேங்குழல் ஓசை
என்னையது தாலாட்ட ஏங்குது ஆசை
கீதகோவிந்த கிருஷண கிருஷணா
பாதவிந்தங்கள் போற்றி கிருஷ்ணா
யாதுமாய் நின்ற கிருஷ்ணா

(கண்ணனுக்கு என்ன வேண்டும்)


படம்: தனம்
இசை: இளையராஜா
பாடல்: விசாலி கண்ணதாசன்
பாடியவர்கள்: பவதாரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்

பல்லவி:

ஆண் : பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோடு மௌவல் மௌவல்

உன் பூ விழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் காற்கொலுசொலிகள் பொதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..

பெண் : வாஜி வாஜி வாஜி - என்
ஜூவன் நீ சிவாஜி
வாஜி வாஜி வாஜி - என்
ஜீவன் நீ சிவாஜி

அன்பா.. வாளை எடு
அழகைச் சாணையிடு!
உன் ஆண்வாசனை
என் மேனியில்
நீ பூசிவிடு!!

ஆண் : அடி நெட்டை... நிலவே..
ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு ..( வாஜி)


சரணம் - 1

ஆண் : ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்
என் தேனிலவே
ஒரு நிலவுடன் தான்

அவள் யாருமில்லை
இதோ இதோ இவள்தான்..

பெண் : புன்னகைப் பேரரசே
தேன் குழைத்து
பூவிக்குள் குளிப்பீரா?

விடியும் வரை
மார்புக்குள் இருப்பீரா?

விழிகளுக்குள்
சிறு துயில் கொள்வீரா?

ஆண் : பெண்களிடம்
சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி..( வாஜி)

சரணம் : 2

ஆண் : பொன் வாக்கியமே..
வாய் வாத்தியமே..

உன் வளைவுகளில்
உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்து கொண்டேன்
சுகம் சுகம் கண்டேன்!

பெண் : ஆனந்த வெறியில் நான்
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி..
வெண்ணிலவை சகதியும் ஆக்கி விட்டேன்

ஆண் : அடடா...
குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாடு மூட்டை நீ ...(வாஜி)

கவிஞர் வைரமுத்து

அற்றைத் திங்கள் வானிடம்

பெண்: அற்றைத் திங்கள் வானிடம்

ஆண்: அல்லிச் செண்டோ நீரிடம்

பெண்: சுற்றும் தென்றல் பூவிடம்

ஆண்: சொக்கும் ராகம் யாழிடம்

பெண்: காணுகின்ற காதல் என்னிடம்

ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம் (அற்றை)

பெண்: அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பாஷை

ஆண்: பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண்: முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் மனதினில் உயிரோசை

ஆண்: உருகிடஉருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது
குளிர்வீசும்

பெண்: குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல்
மேய்ந்திட

ஆண்: மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட

பெண்: காணுகின்ற காதல் என்னிடம்

ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்: உடலெது உடையெது தேடும் நிலையிது (அற்றை)
காதல் கடனிது அடையாது

பெண்: இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண்: கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது

பெண்: வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண்: நடுங்காலம் குளிர்வாடையில் அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண்: தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்

ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்

பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஒரு கூடை சன் லைட்

Male: Give me one time style yea..
Give me two time style yea..
Give me three time style yea..

பல்லவி

ஒரு கூடை சன் லைட்
ஒரு கூடை மூன் லைட்
ஒன்றாக சேர்த்த
கலர் தானே என் ஒயிட்

அப்பத்தா வெச்ச கறுப்பே
இப்பத்தான் செக்கச் சிவப்பே
எப்போதும் பச்சைத் தமிழன்
இப்போ நான் வெள்ளைத் தமிழன்..

கோரஸ்

Aayo aayo inaadi wayo
Aayo aayo inaadi wayo!

சரணம் - 1

ஆண் : அட அட அட
அசத்துது ஸ்..டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்..டைல்

கட கட கட
சிரிப்பதும் ஸ்..டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்..டைல்

பெண்: கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்

குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்

ஆண் : அட அட அட
அசத்துது ஸ்..டைல்
நட நட நட
நடப்பதும் ஸ்..டைல்
கட கட கட
சிரிப்பதும் ஸ்..டைல்
பட பட பட
பேச்சிலும் ஸ்..டைல்
சுட சுட சுட
தொடுவதும் ஸ்..டைல்
தட தட தட
அதிரடி ஸ்..டைல்
அடிக்கடி முடி
கலைவதும் ஸ்..டைல்
வர வர
எல்லாமே ஸ்..டைல்

Female : Aayo aayo nuestro vido
Aayo aayo nuestro dei vido!

Female Whispering:
Nuestro furturo del vido
Tengo marquadennel pecho todos los dias!
( ஒரு கூடை)

Male: Oh! Let me say something..

சரணம் -2

பெண் : ரகளை செய்
ரௌத்திர வீரா!

மிரளச் செய்
மன்மத மாறா!

கனி தேடும்
கலகக் காரா

கண் கடவும்
கந்தள மாறா

கிண்ணென்ற
கன்னியை பூரா

தின்னின்று
வெள்ளைக்காரா

ஆண் : அடடா நீ
ஐந்தடி மிட்டாய்!

நடந்தாய் நீ
பறக்கிற தட்டாய் !

இருந்தாய் நீ
உருவத்தில் எட்டாய் !

மலர்ந்தாய் நீ
மொழு மொழு மொட்டாய்

ஐஸ் நதியை
நரம்புக்குள் விட்டாய்!

சீ என்னும்
சொல்லிலே சுட்டாய் !

ஈ·பிள் டவர்
இதயத்தில் நட்டாய்..
பட்டாசாய் பட்டாய் !!


Female : ஹீரோ ஹீரோ ஹீரோதி ஹீரோ..
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர் ஸ்டாரோ..
(ஒரு கூடை)

Give me one Time style yea..
Give me two time style yea..
Give me three time something!!

வெத்தலைய போட்டேன்டி டி டி

ஆண்: வெத்தலைய போட்டேன்டி டி டி
புத்தி கொஞ்சம் மாறுதடி டி டி டி
புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி

(இசை...)

ஆண்: ஏ உச்சிப்பொட்டு தெரிக்க உள்ள வெடி வெடிக்க
ஆத்திகிட்டு போச்சி பித்துமனம் துடிக்க
ரத்தம் ரத்தம் சூடாகும் பித்தம் பித்தம் தலையேறும்
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்...
வெத்தலைய போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி
வெத்தலைய போட்டேன்டி புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில சக்தி கொஞ்சம் ஏறுதடி

(இசை...)

ஆண்: ஏ ரெண்டே ரெண்டு குருவி குருவி கொத்த வருது என்ன என்ன
குடைபிடிச்ச குத்தாலமே வா ஏ நானடுச்ச மத்தாளமே வா
ஒன்னே ஒன்னு நழுவி நழுவி சுத்தி வருதே என்ன என்ன
குடை பிடிச்ச குத்தாலமே வா.. நானடுச்ச மத்தாளமே வா..
அடி அடங்காத என் நெஞ்சை
அடக்க அடக்க அடக்கத்தான் (வெத்தலைய...)

(இசை...)

குழு: டக்கருன்னா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருன்னா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்

(இசை...)

ஆண்: ஏ முக்கால் வாசி நனஞ்சேன் நனஞ்சேன்
முழுசா நனைய நான் இப்போ துணிஞ்சேன்
நானாதான் நானும் இருந்தேன் நீனாதான் வந்து விழுந்தே
ஓடிப்போனா தொரத்தி வருதே தொரத்திப் பாத்தா ஓடி விடுதே
புலி வால நான்தான் புடிச்சேன்
குழு: நான்தான் புடிச்சேன்

ஆண்: அய்யய்யோ சிக்கி தவிச்சேன்
குழு: சிக்கி தவிச்சேன்

ஆண்: அடி பழசெல்லாம் மறக்கத்தான் புதுசு புதுசு இப்ப நான் (வெத்தலைய...)

ஆண்: அடி சும்மா சும்மா அசத்தும் அது சுத்தி சுத்தி மெரட்டும்
அடி சும்மா சும்மா அசத்தும் அது சுத்தி சுத்தி மெரட்டும்
அடி சும்மா சும்மா அசத்தும் அது சுத்தி சுத்தி மெரட்டும்
விக்குதடி விக்குதடி எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி பூமி எனக்கு சுத்துதடி
விக்குதடி விக்குதடி எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி பூமி எனக்கு சுத்துதடி

பாடல்: ஷங்கர் மாகாதேவன்

சேவல் கொடி பறக்குதடா சேந்து இடி இடிக்குதடா

குழு: வேல.... வேல... வேல... வே...ல....
வேல் வேல்.. வேல் வேல்..

(இசை...)

ஆண்: சேவல் கொடி பறக்குதடா சேந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
காக்க காக்க காக்குமடா நோக்க நோக்க தாக்குமடா
பார்க்க பார்க்க பரவுமடா மூக்கையா
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் இந்த
முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான்
நீ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்தா எங்க வேலய்யா
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா (சேவல் கொடி...)

(இசை...)

குழு: கந்தனுக்கு.. அரோகரா.. வேலனுக்கு.. அரோகரா..
முருகனுக்கு.. அரோகரா.. குமரனுக்கு.. அரோகரா..
கந்தனுக்கு.. கந்தனுக்கு.. வேலனுக்கு.. வேலனுக்கு..
முருகனுக்கு.. முருகனுக்கு.. குமரனுக்கு.. குமரனுக்கு..

ஆண்: தெருக்கூத்து தமிழனுக்கு முதலாட்டம்
புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும்
வீரன்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
வேடனடா வேடன் எவன் தனிகை மலை நடேன்
வீரனடா வீரன் நாம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
நீ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்தா எங்க வேலைய
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நா பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடடா (சேவல் கொடி...)

(இசை...)

குழு: ஏலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நா..னே.. நா..னே..
தந்தானேநானே நானே நா..னே.. நானேநா
தந்தானே நானே நா தந்தானே நா

ஆண்: மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது பொறியாடும்
ஏறுமலை ஏறு எங்க அண்ணன் அழகைபாரு
ஆறுமுகம் யாரு நம்ம நண்பன்தானே குரு
தமிழ் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலைலேறி வேலய்யா
வேலும் மயிலும் பர பரக்க
காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன் தான் இந்த
முப்பாட்டன் எங்களுக்கு தலைவன் தான்
நீ காட்டுக்குள்ள நடமாடி நாட்டுக்குள்ள முடி சூடி
வீட்டுக்குள்ள வந்தா எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா

குழு: நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா
வச்சி பாடட்டா

படம் : பில்லா
பாடல்: சேவல் கொடி பறக்குதடா
கோரஸ்,விஜய் யேசுதாஸ்

செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்

பெண்: செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவ வா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சுடாவதி செய் ஏடாகூடம் செய்

(இசை...)

பெண்: உண்டு இருக்கவா என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா..
கண்ணை இருக்கவா.. உன் உருவுக்குள் நீரூற்றி
கருவுக்குள் வேரூன்றி கொண்டு செல்லவா..
செம்புலனைப் போல் அம்புலம் சேர்க
உன்புலம் அய்ந்தில் என் புலம் மூழ்க
என்று என்றுமே நின்று நின்று
உன்னை கொன்று கொன்று விடவா
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவ வா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்

குழு: செய்.... ஓ.....

(இசை...)

பெண்: முத்தெடுக்கவா மென் மஞ்சங்கள் குடை சாய
வஞ்சங்கள் குளிர்காய உன்னை கெஞ்சுதே ஒத்துழைக்கவா
உன் கம்பீரம் தாங்காமல் சம்சாரியம் வாங்காமல்
அன்பால் ஏங்குதே
கர்மனின் மோட்சம் காமசாவேதம்
அண்ட சராசம் பெண்ணின் விலாசம்
அட்ரா அட்ரா என்னை பட்ரா பட்ரா
உன்னை உட்ரா உட்ரா அறிவேன்

(இசை...)

பெண்: செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
நான் சிலை நான் சிலை நான் மாறுகிறேன் ஓர் முல்லை
செல்லை உயிர் கொள்ளை என்னை ஊடுறுவா பில்லா
உன்னை மேய்த்து மேய்த்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்

படம் : பில்லா
பாடல்: செய் ஏதாவது செய்
நேகா பேசின் ,பிரீத்தீ பல்லா

மை நேம் இஸ் பில்லா... வாழ்க்கை எல்லாம்....

ஆண்: மை நேம் இஸ் பில்லா... வாழ்க்கை எல்லாம்....
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லை
போகாத ஊர் இல்லை அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா ஓ ஓ

(இசை...)

ஆண்: ஏ... யாருக்கும் யாரும் சொந்தம் இல்லை
நட்பின் மேல் நம்பிக்கை இல்லை
நேரங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓட
வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் தான் நான் செல்லும் பாதை
சரி என்ன தவறென்ன எவர்க்கும் எது வேண்டும் செய்வோம் (மை நேம்...)

(இசை...)

ஆண்: வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால்தான் நம்மை
இங்குள்ள எவருக்கும் இடமில்லை இதுதானே உண்மை (மை நேம்...)

படம் :பில்லா
பாடல்: மை நேம் இஸ் பில்லா...
ஹே ஹே, நவீன்