முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன

காதல் என்னும் தேசம் எங்கள் தேசம் ஆகும்
அதில் நாள்தோறும் இடைத் தேர்தல்களே
கையும் கையும் ஒன்றில் ஒன்று கூட்டுச்சேரும்
இரு கன்னங்களில் இதழ் சின்னங்களே
மாலை நேரம் நம் மன்றம் கூடும்
மையல் ராகம் நம் கண்கள் பாடும்
வரி மீது வரி போடு இதழ் மீதிலே

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன

கண்ணில் பாதி சொல்லில் பாதி மெல்லப்பேசு
பிறர் கேட்காமலும் நமை பார்க்காமலும்
கள்ளில் பாதி முள்ளில் பாதி உந்தன் பார்வை
ஒன்றில் காதல் வரும் ஒன்றில் காயம் படும்
கண்ணம் போடும் உன் கள்ளப்பார்வை
என்றும் தேவை உன் இன்பச்சேவை
தினம் தோறும் இனி வேண்டும் சுகவேதனை

முத்தம் என்னும் நாவலின் இன்பம் என்ன
மோகம் என்னும் பாடலின் சந்தம் என்ன
பத்து விரல் கோலத்தின் வண்ணம் என்ன
பள்ளியறை பாடத்தின் அர்த்தம் என்ன
எங்கே என் சொர்க்கம் இங்கே உன் பக்கம்
உன் கண்ணோரம் செந்தூரக் கோலம்