மாலை நேரம் மழை தூறும் காலம்

மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம்
நிற்கிறேன் ...


நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே
மிதக்கிறேன் ...

ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நினைவுகள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே..

இது தான் வாழ்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே
கேட்கிறதே.....

ஓஹோ காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்தது
அன்பே.....

இது சோகம் அனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்
அன்பே...

இதம் தருமே... (ஓஹோ )

உன் கரம் கோர்கையில்
நினைவு ஓராயிரம்
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்..

காதலில் விழுந்த இதயம்
மீட்கமுடியதது..
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது..

ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்ன இழந்தேன் என ...

(ஓஹோ )

ஒருமுறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன..

இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொருத்து கொண்டால் என்ன
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன ..

என் தேடல்கள் நீ இல்லை..
உன் கனவுகள் நான் இல்லை..
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன ...

(மாலை நேரம்)

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்

சின்னக் குயில் கூவும் சங்கத்தமிழ் பாடும்
கண்ணின் இமைகள் திறந்திடும் காலை இது
சொந்தங்களை நாடும் சோம்பலுடன் தேடும்
புத்தம் புதிதாய் பிறந்திடும் வேளை இது
மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடவே

பட்ட பகல் வானம் வந்து விளையாடும்
வந்து விழும் மேற்கு நோக்கி ஒரு சூரியன்
வந்த கணம் மேலே வெள்ளி வாலி போலே
வந்து விழும் வெண்ணிலா
(பட்ட..)

அடித்தால் அன்று தானே என்று அதை
தள்ளி விட்டுச் சென்றிடுமே
தோளோடு மறைந்திடும் வலி மனதில் சேர்வதில்லை
அணைத்தால் கோழிக்குஞ்சை போல வந்து
இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொள்ளும்
அன்பெனும் கதகதப்பிலே கௌரவம் பார்ப்பதில்லை
ஓ மழைத்துளி ஆயிரம் கடல் மடி தேடுதே
அலைகளாக மாறி துள்ளி ஆடிடுவே
(பட்ட..)
(சின்ன குயில்..)

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்: கார்த்திக்

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போகச்சொல்லி கால்கள் தள்ள
நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர்க்கொஞ்சம் தருமா தருமா
கனவென்னக் களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் நேரம் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்
உன் குறும்பிலே நானே தூங்கிடுவேன்
உன் மடியிலே என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்க்குள் பெண்மை இருக்கிறதே
கூந்தல் அழுத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே
ஒரு வரி சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்
(மழை இன்று..)

ஆ.. காற்றில் கலந்து நீ
என் முகத்தினை நீயும் மோதினாய்
பூ மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே
நினைத்தப்பொழுதினிலே மரணம் எதிரினிலே
வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே
(ஒரு வெட்கம்..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஷ்ரேயா கோஷல்


எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ

எம் ஜி ஆரு இல்லீங்கோ நம்பியாரு இல்லீங்கோ
நாங்கெல்லாம் நடுவுலங்க
ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க
நாங்கலெல்லாம் வாட்டர் தானுங்க
ஹைக்க்ளாஸ் ஃபிகருக்கு ரூட்டு போடமாட்டோம்
லோக்க்ளாஸ் ஃபிகருக்கு கட்ரு போடமாட்டோம்
கான்வென் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம்
காலேஜ் ஃபிகருக்கு அண்ணன் ஆகமாட்டோங்க
டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே
ஏ.டி.எம் மெஷின் என்று தான் சொல்லுவோமே
தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ண மாட்டோமே
நாலு நாளு தாடியோட அலைவோமே
(எம் ஜி ஆரு..)

ராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரவுண்டடிப்போம்
சாத்துற நாயர் கடை டீக்குடிப்போம்
(ராத்திரியெல்லாம்..)
விடியும் வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம்
இரவினிலே இடிமழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்
வீட்டில் ஓடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான்
ஓவின் வாசலில் தவம் கெடப்போம்
பிக்கப்புன்னா பார்த்திதான் பேக்கப்புன்னா ஓடி தான்
கெட்டப்புள்ள மாட்டிக்கிட்டு ஆய் சொல்லுவோம்
(எம் ஜி ஆரு..)

பீச்சுக்கு போயி லைக்ட் ஹவுஸுக்கே லைட் அடிப்போம்
போலிஸு வந்தா ஸ்டுடன்ஸுன்னு பொய் சொல்லுவோம்
திரையரங்கில் படையெடுப்போம்
விரல்சழியே விசில் சத்தம் பறக்கும்
குட்டி சுவரில் கொடு கிழித்து
கிரிக்கட்டுல எங்க டீமு ஜெயிப்போம்
சிட்டி செண்டர் போயிதான்
ஷெர்ட்டு பேண்டு பார்த்துதான்
விலை மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம்
(எம் ஜி ஆரு..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரி சரண்


அன்பாலே அழகாகும் வீடு

அன்பாலே அழகாகும் வீடு
ஆனந்தம் அதற்க்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்போது
வேறொன்றும் அதற்க்கில்லை ஈடு
(அன்பாலே..)

வாடகை வீடே என்று வாடினால் ஏது இன்பம்
பூமியே நமக்கானது ஓ..
சோகமே வாழ்க்கை என்று சோர்வதால் ஏது லாபம்
யாவுமே இயல்பானது
மாறாமல் வாழ்வுமில்லை தேடாமல் ஏதுமில்லை
நம்பிக்கை விதையாகுமே
கலைகின்ற மேகம் போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே
(அன்பாலே..)

பாசமே கோவில் என்று வீட்டிலே தீபம் வைத்தால்
கார்த்திகை தினந்தோறுமே
ஆ.. நேசமே மாலை என்று நெஞ்சிலே சூடிக்கொண்டால்
வாசனை துணையாகுமே ஆ...
கூடினால் கோடி நன்மை சேருமே கையில் வந்து
வாழ்ந்திடு பிரியாமலே
ஏணியே தேவையில்லை ஏறலாம் மேலே மேலே
தோல்விகள் வெறும் காணலே
(அன்பாலே..)

படம்: பசங்க
இசை: ஜேம்ஸ் வசந்த்
பாடியவர்கள்: பாலமுரளி கிருஷ்ணா, சிவாங்கி

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே

காற்றிலே வாசமே காதலின் சுவாசமே
மயங்கிடும் பூங்கொடி மடியிலே விழாதா
கொஞ்சநாளாய் நானும் நீயும் கொஞ்சிக் கொள்ளும்
அந்தக் காதல் நேரங்கள் தேயுதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்

தீயிலே தேனிலே
தேயுதே தேகமே
ஒரு விழி தீயின்றி ஏங்கிடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

அன்பே அன்று உன்னைக் கண்டேன்
கண்டபோதிலே நெஞ்சில் அள்ளி வைத்துக்கொண்டேன்
இதயம் உருகியதே
முன்பே நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்
சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்
அதனை அறிந்ததனால் தான்
இரவிலே தீயின்றீ எறிந்திடும் நிலாவே
ஏதோ ஒன்று என்னை இன்று உந்தன் பக்கம்
வா வா என்று காந்தம் போல் ஈர்க்குதே ஈர்க்குதே

ஓ என்னதான் நீ செய்ய போகிறாய்
நீ பேசிப்பேசி காலம் தேய்கிறாய்
நான் காத்து காத்து ஏக்கம் கொண்டப்பின்னால்
கண்ணீரில் சேர்க்கிறாய்
நீ தாமரைப்பூ பூக்கும் நீர்நிலை
நீ காற்றில் ஊஞ்சல் ஆடும் வானிலை
நீ மாற்றிவிட்டாய் எந்தன் கண்மணியே வாழ்வினை

படம்: யாவரும் நலம்
இசை: ஷங்கர் எசான் லோய்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், சித்ரா


ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்

ஒரு பார்வையில் பூக்கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ரஞ்சித்


எப்படியோ மாட்டிக்கிட்டேன்

எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவை மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட
(எப்படியோ..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ளிண்டன், ந்ருத்தியா


நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
(நண்பா..)

உனை நீ தாழ்வாய் பார்க்காதே
அட நீயே உன்னிடம் தோற்க்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை
(நண்பா..)

நண்பா நண்பா உன் நெஞ்சில் ஏதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா
தயக்கம் என்பது சொந்த சிறை
அதில் தாங்கி கிடைப்பது உதன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுல் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை
(நண்பா..)

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கார்த்திக்

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்

தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய்
மொத்தத்தில் போரை மூட்ட்ப்போனாய்
(தித்திக்கும்..)
தொடத்தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
படப்படப்படப்பட தேகம் கொதிக்குது
பலப்பலப்பலப்பல விண்மீன் பறக்குது
உன்னாலே பெண்ணே உன்னாலே
(தித்திக்கும்..)

முதன் முதலாய் சறுக்க வைத்த
தனிமையிலே சிரிக்க வைத்தாய்
பக்கத்திலே வந்து நின்றாய்
பஞ்சனையில் பங்கு தந்தாய்
புது உலகம் காட்டிவிட்டாய்
பெண் வெட்கம் பொட்டுவிட்டாய்
உடல் கண்டிஷன் போட்டு விட்டாய்
பூ உடலின் தாழ்த்திறந்தாய்

இரண்டே இரண்டு இதழை கொண்ட
அதிசயப்பூ நீ தானே
தேனை தேடும் வண்டாய் வந்து
தீயில் மாட்டிக்கொண்டேனே
தூரத்தில் தூரத்தில் பூவெண்டு நீ தானே
பக்கத்தில் வந்தாளோ பூகம்பம் நீ தானே
முக்கனி மூன்றும் ஒன்றாய்க் காய்க்கும்
சர்க்கரை மரமும் நீ தானே
கூடை கொண்டு பறித்திட வந்தவன்
கூண்டுக்கிளியாய் ஆனேனே
பேரின்பம் எதுவென்றால்
பெண் என்றே சொல்வேனே
என் உடலை உறங்கவைத்தாய்
கண்ணெதிரே கரைய வைத்தாய்
தொடும்போதே தொலைய வைத்தாய்
தீ மழையில் நனைய வைத்தாய்

ஹோ காதல் என்பது கத்தியைப்போலே
குத்துக்குத்தி கொண்றிடுமே
கண்கள் இரண்டும் கேடையமாக
தடுக்கும்போதும் வென்றிடுமே
காயங்கள் இல்லாத காமம்தான் இங்கேது
தீக்குச்சி தேடாமல் தீபங்கள் தோன்றாது
ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே
வேட்டையாட விரும்புமே
பெண்கள் தேகம் அருகினில் வந்தால்
வெட்டுப்பட்டு திரும்புமே
மோகங்கள் எப்போதும் மின்சாரம்போல் ஆகும்
கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூளாகும்
இடைவெளிகள் தாண்டிவிட்டாய்
இடையினிலே தூண்டிவிட்டாய்
மகரந்த மழைக்கொடுத்தாய்
மறுஜென்மம் எடுக்க வைத்தாய்
(தித்திக்கும்..)

படம்: சிவா மனசுல சக்தி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: கே கே, ஷ்வேதா


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)

அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)

படம்: அங்காடித் தெரு
இசை: GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர்: பிரசன்னா

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு

போடி போடி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு லாங் ட்ரைவ் போலா கம் வித் மீ
ஸ்லோவா ஸ்பீடா நீயே ஓட்டிப்பாரு

போடி போடி

ஓட்ட சிம்கார்ட்டே எம்டி ஐப்போட்டே
உன்ன ஸ்வ்ட்ச் ஆன் செய்யுறது வேஸ்டு
ஹட்ச்சு புல் டாக்கே நச்சு கீழ்ப்பாக்கி
என்ன சுத்தமா போனா நான் சேஃப்

மண்ரோடே டேய் மண்ரோடே
எப்ப ஆவ மேயின் ரோடே..

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me
ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
உன் பேச்சும் தோட்டும் ரொம்ம குப்பலெட்சுமி
போடி போடி

ஹேய் கந்தசாமி என் லைஃபுல புயலா வந்த சாமி
என் அழகைப் பார்த்து மனசுல நொந்தசாமி
சீ வெந்தசாமி தூ ஹ ஹ ஹ..

உன் அழகுனால இல்ல
உன் இம்சையால நொந்தசாமி
உன் கையில சிக்கமாட்டா இந்த சாமி
கடவுள் இல்லைன்னு சொன்னான் இராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றான் கந்தசாமி

நோப்பா நோப்பா நோப்பா
சொன்னார் வள்ளுவர் கிரேட்ப்பா
கடல் தாண்டிக் கூடச்சொன்னார் கடைசி குரளில்
வேணாம் வேணாம் வேணாம்
நீ நாமம் போட வேணாம்
உன் கூட வந்தா சண்டைப்போட்டே வாழ்க்கைப்போகும் வீணா

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதல் ஒன்னும் யூதர் இல்லக் கொல்லாதே
லிங்கன் பேரனே லிங்கன் பேரனே
தத்துவங்கள் பேசிப்பேசிக் கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான்
தீராது டிஷ்யூம் தான்

போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போடி போடா
போ போ போ

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

ஹேய் என்ன ரொம்ப ஓவரா பண்ற
ஒன்னும் பண்ண விட மாட்றியே
நீ படிச்சப் பொண்ணுதானே
உன்ன படிக்க முடியலையே
ஹே ஏ ஏ தள்ளிப்போ
என்னை தள்ளிட்டு போ
கொஞ்சம் கூடு
ரொம்ப மூடு
ஐயோ

வேணா வேணா வேணா வேஸ்டுப்பேச்சு வேணாம்
இப்ப விட்டாத்தப்பு நீ பின்னால் அழுவ தானா
ஹேய் போடி போடி போடி ஃபூலா போன லேடி
கெர்ள்ஸை நம்பி லூசாப்போன பாய்ஸ் பல கோடி
ஹே உப்பு மூட்டையே உப்பு மூட்டையே
லைஃப்புல்லா உன்னை தூக்கி சுமப்பேண்டா
ஓ டக்கு முட்டையே டக்கு முட்டையே
வாத்துக்கூட்டம் கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ கிராஃமாறி
ப்ளீஸ் வாயேன் டேக்மாறி

ஹே Excuse me மிஸ்டர் கந்தசாமி
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஒரு காப்பி குடிப்போம் கம் வித் மீ
ஹாட்டா கூலா நீயே தொட்டுப்பாரு
போடி போடி
ஹே Excuse me மிஸ் சுப்புலெட்சுமி
யுவர் அக்டிவிட்டீஸ் ஆல் தப்புலெட்சுமி
போடா போடா

படம்: கந்தசாமி
இசை: தேவிஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: விக்ரம், சுசித்ரா

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே
சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே
சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே
சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே

நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய்
நீதானே நீதானே என் இமைகளை நீவினாய்

நீ ஓடும் பாதையில் நெஞ்சமோ
உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ
என் விழியின் கறுமணியில் தேடிப்பார்
உன் காலடி தடங்களை காட்டுமே
பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே
உன் சிறு இமை பிரிவில் தெரிந்ததே
விபத்துக்கள் எனக்குள் நடக்கவே
உன் நினைவுகள் தப்பி செல்ல வைக்குதே

உன்மைகள் சொல்வதும்
உண்ர்ச்சியை கொள்வதும்
உயிர்வரை செல்வதும்
நீதானே

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்
நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய்
என் உயிரை இரவலாய் கேட்கிறாய்
இதய சதுக்கம் நடுங்குதே
உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே
அலையில் ஒதுங்கும் கிழிஞ்சலாய்
என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே

ஒரு கணம் சாகிறேன்
மறு கணம் வாழ்கிறேன்
இரண்டுக்கும் நடுவிலே
நீதானே

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும்
அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளி விட நான் துள்ளி எழ
ஆஹா அது இன்ப துன்பம்
நான் கிள்ளி விட என் கை விரல்கள் ஏங்கும்

தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்-நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டு சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம்
செட்டி நாட்டு சமையல் வாசம்
ந்யூ யார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளிஅறை நம் செல்லஅறை
அன்பே அதில் பூக்கள் உண்டு
பூ வாடை இன்றி வேர் ஆடைகள் இல்லை
ஆண் என்பதும் பெண் என்பதும்
ஹயயோ இனி அர்த்தம் ஆகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னி கொண்டு
மணி முத்தம் எண்ணி கொண்டு
மனதோடு வீடு கட்டி காதல் செய்யுவேன்
உடல் கொண்ட ஆசை எல்லாம்
உயிர் கொண்ட ஆசை
எந்தன் உயிர் போகும் முன்னால்
வாழ்வை வெற்றி கொள்ளுவேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு
மகிழ்வேன் தினம் தினமும்

வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலம் இட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருமடியில் கலந்தேன்

காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
காணா காண்கிறேன் காணா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
இருவருமே இருவருமே இருவருமே

காதல் சுத்துதே என்னை சுத்துதே கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே

மௌனமாய் உன்னை நானே
மனபாடம் செய்கின்றேன்
தீண்டலில் இன்பம் கண்டு
திண்டாடி துடிக்கிறேன்
புத்தகம் நடுவே புகைப்படம் நீ
வானத்தில் எழுதா விடுமுறை நீ
இன்னொரு வானமாய் இருப்போமா
பூமியை தாண்டி நாம் பறப்போமா

ந ந நன்னா நானா நானா

முத்தத்தை கடனை கேட்கும்
முதலாளி இவள் தானோ
வெட்கத்தை மறந்து வந்த
விருந்தாளி இவர் தானோ
வாலிப உடலில் வசிக்கிறேன்
புன்னகை முகத்தை ரசிக்கிறேன்
காதலின் எல்லைக்குள் பறக்கிறேன்
மீண்டும் நான் இன்றே பிறகின்றேன்

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே
ஆஹா

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
ஓஹொஹோஒ
காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே
என் இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே உன்னாலே
தலை கீழ் பூமி சுத்துதே
பெண்ணே நீ ...பெண்ணே நீ
பெண்ணே நீ

பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மன்னனில் சுத்துதே
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை
கண்டதால் ஏனோ தலை சுத்துதே

காதல் சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்


நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல ?
திட்டம் இட்டே நாம் செய்த குற்றம் என்ன ?
போராட காலம் இல்லையே
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே நீ நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

உன் தேவை நான் என்றும் தாங்கி கொள்ள
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல ?
என் உள்ளம் தடுமாறுதே
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் வரும் சொர்கமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே

பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே


ஒ நதியே நீ எங்கே
என்று கரைகள் தேடக் கூடாதா
நிலவே நீ எங்கே
என்று முகில்கள் தேடக் கூடாதா
ஒ மழை இரவினில் குயிலின்
கீதம் துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும்
பலரின் கனவுகள் யார் அறிவார்
அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால்
அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் உயிரே எங்கே
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்று வெளியே இல்லையே ....
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே....

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேனே
விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் முன்னே
எந்தன் உயிர் ஒதுக்கி விடாது
உலகம் ஒரு புள்ளி ஆகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னை காணவே
ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
ஓரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமா

உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...


காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...
காதல் இல்லமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே

ட்வின் டவர் மேல aircraftடை - போல
என் மேல மோதினா என்னாவது ?
ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே


கண்ணா உன் கால்சட்டையை நீ போடு மேல்சட்டையை
என்னை நீ ஹே அணைச்சிக்கோ வா வா
அன்பே உன் ஆசைப்படி நீதான் என் ஆடையடி
ராவிலே ஹே..இருட்டிலே வா வா வா
ஒவ்வொரு நாளும் என்னை திருடு திருடு
ஒவ்வொரு இரவை மெல்ல வருடு வருடு
நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே
நீ என்னை அவ்வாறு கூறாத டீ


ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்னை நீ ஏன் பிடிச்ச ?
ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனச்சேன்
அப்படியா ?
உன் பேர உச்சரிசேன் என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது
அயல்நாட்டை கத்தி கத்தி அழைக்காதே
ஷில்பா ஷெட்டி உனக்கு நான் ..
ஹா ..எனக்கு நீ வா வா

தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா
படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா

முடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்
உனக்கென திறந்த நான் டாஸ்மாக் கடை தான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய்
பத்தாமல் போனாலும் கத்தாதே ..ஹே..ஹே..ஹே

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்

ஆஹ்....ஆஹ்....
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

ஆஹ்...ஆஹ்....
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
..ஓ ..ஹோ
நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..

லா...லா... லா...லா... லா...லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்


மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல்-தான்
ஏ ...ஏ
ஆனந்தம்

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...