அகரம் இப்போ சிகரம் ஆச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெல்லம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)

தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆரும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு...)