படம் : கற்பூர முல்லை
இசை : இளையராஜா
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ் & பி.சுசீலா
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப் பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
பாட்டுதான் தாலாட்டுதான்
கேட்கக் கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள்
வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
மயக்கத்தில் மனம் சேர்ந்தது
(பூங்காவியம்...)
யார் மகள் இப்பூமகள்
ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடைக் காற்றும் போற்றும்
புதுக்கதை அரங்கேறிடும்
(பூங்காவியம்...)
Showing posts with label கற்பூர முல்லை. Show all posts
Showing posts with label கற்பூர முல்லை. Show all posts
Subscribe to:
Posts (Atom)