Showing posts with label கடலோரக் கவிதைகள். Show all posts
Showing posts with label கடலோரக் கவிதைகள். Show all posts

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

மனசு தடுமாறும் அது நெனச்சா நெரம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடா போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்