ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே
(ஒரு பெண்புறா...)
கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு
(ஒரு பெண் புறா...)
கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!
(ஒரு பெண் புறா...)
படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ்
Showing posts with label அண்ணாமலை. Show all posts
Showing posts with label அண்ணாமலை. Show all posts
Subscribe to:
Posts (Atom)