Showing posts with label மஜ்னு. Show all posts
Showing posts with label மஜ்னு. Show all posts

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே என் நெஞ்சில் அடங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?

மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன?
உன் மனத்தில் மனத்தில் மனத்தில் உள்ள முதல் வரி என்ன?

குல்முஹர் மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே தூக்கி எரியாதே

உயிரை திரிகி உந்தன் கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு உதட்டு சாயம் பூசி கொள்ளாதே
விண்மீன் பறிக்க வழியில்லை என்று கண்களை பறிக்காதே
என் இரவை எரித்து குழைத்து குழைத்து கண் மை பூசாதே
என்னை விடவும் என்னை அறிந்தும் யார் நீ? என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும் என்னையும் கவிஞன் ஆக்காதே

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில் புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து கலகம் மூட்டுகிறாய்
இன்று இந்தரை மணிக்குள் காதல் வருமென அறிகுறி காட்டாதே
மௌனம் என்பது உறவா பகையா வயது தீயில் வாட்டு கிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்

மலரே மலரே குல்முஹர் மலரே கொல்லப் பார்க்காதே
உன் துப்பட்டா வில் என்னை கட்டி
தூக்கில் போடாதே தூக்கில் போடாதே
தூக்கி எரியாதே........ தூக்கில் போடாதே