Showing posts with label ரன். Show all posts
Showing posts with label ரன். Show all posts

மின்சாரம் என் மீது பாய்கின்றதே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்புதரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன்
தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தாய் புத்திக்கு ஓய்வு தந்தேன்

பெண்ணென்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே


மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளையடித்தது நீயேயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்

பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர காதல்தான் என்று கண்டேன்

அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்
காதல் தீயே காதல் தீயே காதல் தீயே

மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே

பொய் சொல்லக்கூடாது காதலி

பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)

அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
என்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
ரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
நீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே
நெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)


படம்: ரன்
இசை: வித்யாசாகர்
பாடல்: அறிவுமதி
பாடியவர்: ஹரிஹரன்