பருத்திக்காடு பத்திக்கிச்சு

படம்: திண்டுக்கல் சாரதி
பாடல்: பருத்திக்காடு பத்திக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

மெதுவா மெதுவா மெதுவா….
கருப்புக்குதிரைக் கரையுதடி
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ….
நெஞ்சுக்கூடு எரியுதடி
சூரைக்காத்தில் சுழலுதே கடவிளக்கு
சுற்றுப்புறம் சுட்டுவிட்ட வாழ்க்கை எனக்கு
கத்தி இல்ல இரத்தம் இல்ல காயம் எனக்கு
புத்திக்கெட்டு போனப்பின்னே சாயம் எதுக்கு

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

ஆரிராரிராரிராரி ரார ரார………
ஆரிராரிராரிராரி ரார ரார………

ஏ… காட்டுப்புலி கூட்டத்துக்கு நடுவாளே
ஒன்ன பொத்திவச்சேன் பூட்டிவச்சேன் புள்ளிமானே
அந்த வேட்டைக்காரன் செஞ்சுவச்ச செடியாலே
நீயும் ஒத்திக்கிட்டு போகாதே வெள்ளி மீனே…
எமங்கரையா புத்து ஒன்னு மொளைச்சதடி
மனசு மலைப்பாம்பா சுத்திக்கிட்டு நெலியுதடி
நான் உனக்கிணறு தவளையா உள்ள அழுதேன்
உன்னை ஊரு சனம் குத்தம் சொல்ல என்னை மறந்தேன்
அடியே…. அடியே….
கருங்கல்லும் செங்கல்லும் ஒன்னா சேர்ந்தாதானே வீடு
அடியே… அடியே…
அண்டங்காக்காவும் வெல்லக்கொக்கும் சேர்ந்தா எத்தனப்பாடு

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

அந்தத் தாய்ப்பாலில் கலப்படம் இருந்ததில்லே
என் தாரத்தோட தரத்திலே குறையுமில்லே
நான் வாய்ப்பாட்டில் படிக்கலை வாழ்க்கைக்கணக்கு
இப்போ பூஜ்ஜியமா ஆனேனே யாருப் பொறுப்பு…
நான் அச்சடிச்ச காகிதமா வாழ்ந்திருந்தேன்
இப்போ அச்சுப்பிழை எழுத்தால அர்த்தம் இழந்தேன்
நான் நெடுஞ்சாலை பாதைப்போல ஓடித் திரிந்தேன்
உன்ன மைலுக்கல்லா நட்டுவைக்க ஊருத்திரிஞ்சேன்
அடியே… அடியே…
சமுதாயம் ஒரு மாயம்
ஒன்னும் புரியலையே சாமி…
அடியே.. அடியே…
நான் சூரியனும் சந்திரனும் பார்க்காத பூமி

பருத்திக்காடு பத்திக்கிச்சு
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு
பருத்திக்காடு பத்திக்கிச்சு …
ஒருத்தன் உசுரு சிக்கிக்கிச்சு

மெதுவா மெதுவா மெதுவா….
கருப்புக்குதிரைக் கரையுதடி
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ….
நெஞ்சுக்கூடு எரியுதடி
சூரைக்காத்தில் சுழலுதே கடவிளக்கு
சுற்றுப்புறம் சுட்டுவிட்ட வாழ்க்கை எனக்கு
கத்தி இல்ல இரத்தம் இல்ல காயம் எனக்கு
புத்திக்கெட்டு போனப்பின்னே சாயம் எதுக்கு