மனசுகுள்ள காதல் சிரிக்குது

படம்: பூ
பாடல்: மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி

மனசுகுள்ள காதல் சிரிக்குது
மழையும் இல்ல வெயிலும் இல்ல
அப்பறம் எப்படி வானவில் வந்தது
மாமன்காரன் எங்கே இருக்கான்…
ஏ ஏ ஏலே ஏலே…

மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி
மயிலு காத்திருக்கா இராபூட்டி

கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே

ரொட்டி போட்ட
பூனை போல
உன் காலை நான் சுத்துறேன்

குறுக்கு போட்ட
பின்னல் போல
உன் மார்பில் இளைப்பருறேன்

பள்ளிக்குளம் மேலே
கல்லு போட்ட போல
வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஆரச்சங்கு சத்தம்
கேட்கும் போது கூட
உன்னோட பேர் சொல்லுதே

கைய தொட்டு பேசுற மாமன்
மைய வச்ச முகத்தையும் தொடுவான்
நெருங்கி வருவான்
முத்தம் தருவான்
மத்த கத நான் சொல்லமாட்டேன்
பாசி மணி தடங்கற கழுத்தில்
பத்து விரல் தடயங்கள் தருவான்
ஊசிவெடியாய்
உள்ளே வெடிச்சேன்
மூச்சு விட்டு மயங்கியே போவேன்

ஆளாகி நாளான ராசாத்தியே
அழகான என் நெஞ்சை குடைசாத்தியே

வெள்ளை வேட்டி மேலே
மஞ்சள் கறை போல
ஒட்டிக்கொள்ள இடம் கேட்கிறேன்

ஏ வண்டி கட்டி நானே
பொண்ணு கேட்டு வந்தேன்
சொர்க்கத்தை நான் எடை பார்க்கிறேன்

தன தன தன தன நா நா
தன தன தன தன நா நா
தன தன தன தன நா நா

கூ கு கூ.

சைய்ய சைய்யா
சைய்ய சைய்ய சய்ய சைய்யா…

தாலி கட்டி உனக்கும் எனக்கும்
தேன்நிலவு நிலவுல நடக்கும்
பாலும் பழமும் இருக்கும் போதும்
வேற பசி நெஞ்சில எடுக்கும்
கட்டிலுக்கு தினம் கால் வழிக்கும்
நூத்தியெட்டு பிள்ளகுட்டி பிறக்கும்
நம்ம பிள்ளைஙக படிக்கத்தானே
பள்ளிக்கூடம் தனியா திறக்கும்

எம்மாடி எம்மாடி தாங்காதுமா
ஆனாலும் என் ஆசை தூங்காதமா

சைய்யா சைய்யா யா…
அத்தை பெத்த பைய்யா
ஒத்திகைக்கு எப்ப வரட்டும்

ஒத்த பார்வை பார்த்தே
செத்து புழைச்சேன்டி
மத்த பார்வை என்ன வரட்டும்…

மாமன் எங்கு இருக்கான் ஆள்காட்டி
மயிலு காத்திருக்கா இராபூட்டி

கண்ணுக்குள் வச்சிக்கிட்டே வெளியே நீயும் தேடாதே
வண்ணத்துப்பூச்சியென்றும் பூவை விட்டு போகாதே

ரொட்டி போட்ட
பூனை போல
உன் காலை நான் சுத்துறேன்

குறுக்கு போட்ட
பின்னல் போல
உன் மார்பில் இளைப்பருறேன்

பள்ளிக்குளம் மேலே
கல்லு போட்ட போல
வட்டம் போட்டு அலைப்பாயுறேன்

ஏ…ஆரச்சங்கு சத்தம்
கேட்கும் போது கூட
உன்னோட பேர் சொல்லுதே… ஏ…