கண்ணில் பார்வை போனபோதும்

கண்ணில் பார்வை போனபோதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ?

(கண்ணில் பார்வை போனபோதும்)

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இன்று
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப் போலே ஒரு துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ?

(கண்ணில் பார்வை போன போதும்)

வீதி என்றொரு வீடும் உண்டு
எனக்கு அது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது
வேலியில்லா சோலைக்காக‌
வந்ததோர் காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ?


(கண்ணில் பார்வை போனபோதும்)



படம்: நான் கடவுள்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்