மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்
லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்
(மெட்ராஸை..)
ஹே.. மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்
(இதுதானே..)
அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்
பாரின் சரக்கு பர்மபஜார்
நம்ம உள்ளூர் சரக்க் பாம்பஜாரு
ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு
பொண்ணு ஏ பொண்ணூ
என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு
மெட்ராஸின் ஹீரோ அது மெட்ரோ வாட்டர்
ஆனா ஸ்டைலுன்னா இப்போ குடி மினரல் வாட்டர்
மெட்ராஸின் கீதம் அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை
ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு
(மெட்ராஸை..)
பொண்ணு ஏ பொண்ணு
நாத்தான் துண்ண வாடி என் கண்ணு
உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு
காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி
மூத்த சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மகராசி
வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்
ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
செண்ட்ரலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்
இங்கே இல்ல ஜோலி பக்கேட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி
(மெட்ராஸை..)
படம்: மே மாதம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஷாஹுல் ஹமீட், மனோரமா
வரிகள்: வைரமுத்து
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
(மார்கழி )
பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)
(வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)
காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(மார்கழி)
(வெண்பா)
மின்னலே நீ வந்தேனடி
மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
மின்னலே நீ வந்தேனடி
என் கண்ணிலே ஒரு காயம் ஏனடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
கண் விளித்து பார்த்த போது கலந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்ற மட்டும் நினைவு சின்னமே
கண் விளித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் தான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் ஏனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
பால் மலைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
பால் மலைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞ்சன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே
என் மேல் விழுந்த மழை துளியே
என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்
(என் மேல் விழுந்த...)
மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்
(என் மேல் விழுந்த ...)
இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ
(என் மேல் விழுந்த...)