ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்

ஒரு வார்த்தை காேக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியனை சூரியனை சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி ஆசை பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்

தண்ணிகுள்ளெ தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தை குடிச்சதிரிச்சே

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

ஊருகுள்ள ஓடும் தெருவில் பாட தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்

இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே

நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டு எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன

கண்ணுகுள்ளெ ஓடிய உன்ன துரத்த மனசுக்குள் நீ வந்து ஒழிஞ்ச
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நொழந்சே
ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனாதய்யா

ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நிண்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நிண்னேன்

அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு

கட்டபோம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசப்பற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட

அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன

வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா