Showing posts with label நியூ. Show all posts
Showing posts with label நியூ. Show all posts

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கைதொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா

அம்மா.....

இமை போல் இரவும் பகலும்
எனை காத்த அன்னையே
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட
வானம் பூமி யாவும் சிறியது

(காலையில்)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழைத்தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில்)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலைப் போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலேலோ
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ
நிலவே நிஜத்தில் இறங்கி
உனை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும் அதுவரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட