துளசி செடிய அரளி பூவு தூரமா தான் பாக்கணும்

ஆண் :
துளசி செடிய அரளி பூவு தூரமா தான் பாக்கணும்
என்ன நீயும் ஏத்துக்கிட்ட என்னென்னவோ கேக்கணும்


பெண் :
ஓஹ் பட்டபகல் வெட்ட வெயில் நம்ம இப்போ சேர்க்கணும்


ஆண் :
என் உசிரே நீ உதிராம நான் புடிப்பேன்
நெல்லுக்கதிறு நீ கருகாம நான் வாழவைப்பேன்


பெண் :
எம்மனசே உம்பின்னால சுத்துதடா
உன் நினைப்பே என்கன்னால குத்துதடா குத்துதடா


ஆண் :
ஓஹ் ஓஹ் ஓஹ் வேப்பங்குச்சா இருந்த என்ன
வெட்டி வேரா மாத்துன
செவல போல திருஞ்ச என்ன
ஊர் கோழிய ஆக்குன
கட்டுத்தறி காளைய போல காலம் பூரா சுத்துவேன்
வீட்டுதறி போல உந்தன் காலடியில் சிக்குவேன்


பெண் :
ஒத்தவார்த்தை சொன்னவுடன் ஓரங்கட்டி போனியே
மொத்தமாதான் என்நேனப்ப மூடி வச்சு நின்னியே


ஆண் :
சொடலைமாட சாமி மேல சத்தியமா சொல்லுறேன்
உம்மனசு காயப்பட கூடாதுன்னு தள்ளுனேன்


பெண் :
என் வயசு உன்ன பாக்காம கோரஞ்சிடுமே
என் உசிரு நீ இல்லன்னா மரஞ்சிடுமே மரஞ்சிடுமே


[துளசி செடிய]


பெண் : பாரிஜாத பூ நீயும் பார்வையால தாக்குன
பம்பரமா சுத்தி என்ன தந்திரமா மாத்துன


கத்திகம்பு அருவா எல்லாம் நீயும் தூக்கி வீசுன
உன் கள்ளத்தனம் அத்தனையும் காதலா தான் மாத்துன


ஆண் :
முக்குலத்து தோட்டத்துல நான் பரிச்சேன் முல்லை தான்
நீ மூணு மையில் தாண்டி புட்டா என் மனசு தொல்லை தான்


பெண் :
சாயர்புரம் சந்தையில வாங்கி வந்தேன் மோதிரம்
சாயங்கால நேரம் வந்தா ஒன்னோட ஞாபகம்


ஆண் :
என் உயிரே உன்னை ஒரு நாளும் மறக்கலியே
இளம் பயிர் உன்னை ஒரு நாளும் வெருக்கலியெ


[துளசி செடிய ]