Showing posts with label ஜே ஜே. Show all posts
Showing posts with label ஜே ஜே. Show all posts

உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே

உன்னை நினைக்கவே நொடிகள் பூதுமே    
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே

நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்
ஏன் இன்று குளிக்கும்போாது நினைத்து கொண்டேன
கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள்
கண் முன்புதோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்?
நீ என்னை கேட்ட போது காதல் இல்லைநான்
காதலுற்ற போது நீயும் இல்லை
ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன
இப்போதும் எந்தன்மீது காதல் உள்ளதா?
ஹார்மோங்களின் ஸத்தம் கேட்குதே
உன் காதிலே என்று கேட்கும் இந்த ஸத்தம்?

என் சாலை இங்கும் அங்கும் ஆண்கள் கூட்டம்
என்
கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை
காட்சி யாவும் புதைந்து போனதே
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்?
ஓ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்
என்னொடு எட்டி நின்ற நாகரீகம
்கண்ணில் கண்ணில் வந்து பொகுதே
என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே
உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
நீ கேட்கயில் சலனமே இல்லையே
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே





காதல் மழையே காதல் மழையே

வச: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....

ஆ: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன்
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீ தான் உயிரே வாராய்

(காதல்)

குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா.....
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே....

ஆ: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி)
தேடிக் கிடைப்பதில்லை......
வாழ்ந்த வாழ்வெனக்கும் .......

குழு: காதல்.... காதல்.... காதல்....
(காதல்)

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
லட்சம் சிறகுகள் முளைக்குதே
நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா? ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)

சொக்குபோடி கொண்ட சுடர் விழியே ?
திக்கி திக்கி வந்த சிறு மொழியா ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
8 மில்லிமீட்டர் புன்னகைய ?
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளிய ?
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி
முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா ?
மூடி கிடந்த ஜோடி திமிர ?
என்ன சொல்ல எப்படி சொல்ல ? எதுகை மோனை கை வாசம் இல்ல
உன்னை எண்ணிக்கொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

மறு முறை உன்னை சந்திப்பேனா ?
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேன ?
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா ?
வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே
பதறும் இதயம் தூண்டி எடுத்து
சிதறு தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் வந்திடும் முன்னே
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்
என்னை காணும் பொது கண்ணை பார்த்து சொல்லு
கண்ணே என் போலே நீயும் காதல் கொண்டாயா ?

நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா ?
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினிய ?

ஜே ஜே உனக்கு ஜே ஜே
ஜே ஜே உனக்கு ஜே ஜே

(உன்னை நான் ...)