Showing posts with label Mr. ரோமியோ. Show all posts
Showing posts with label Mr. ரோமியோ. Show all posts

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

மன்மதனை பார்த்தவுடன் மார்புக்குள் ஆசையை
மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே அவனுக்கு இடம் விட்டு
படுத்து கொண்டேன்
பகலில் தூங்கிவிட சொல்வேன்
இரவில் விழித்திருக்க சொல்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து காதோடு நான் பாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யயோ அதை மறைப்பது போய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

சேலைகளை துவைப்பதற்கா மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவினில் சுமப்பேன் அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும் முன்னூறு முத்தாடுவேன்

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்
கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்

மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே
என் உறவுக்கு இன்னிசையே என் உயிர் தொடும் நல்லிசையே

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்
உறங்காமல் தவித்திருந்தேன் விண்மீன்கள் எரித்திரிந்தேன்

எத்தனை நிலவை உனக்காக வெறுதிருந்தேன்
உயிர் சுமந்து பொறுத்திருந்தேன்
உன்னை கண்டு உயிர் தெளிந்தேன்

நீ ஒரு பாதி என்றும் நான் ஒரு பாதி
காதல் ஜோதி
என்னவனே நிலம் கடல் ஆனாலும் அழியாது இந்த பந்தம்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கணங்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கணங்களில் உன்னை சிறை எடுத்தேன்

மன்மத விதையை மனதோடு விதைத்து யார்
மழை ஊற்றி வளர்த்தது யார் மலர்க்காடு பறித்து யார்

காதல் தீயை நெய் கொண்டு வளர்த்தது யார்
கை கொண்டு மறைத்து யார் அதை வந்து அணைப்பது யார்

ஆயிரம் காலம் வாழும் காதலும் வாழும்
ஆயுள் நீளும்

பெண்ணழகே மண்ணும் விண்ணும் போனாலும்
மாறாது இந்த சொந்தம்

கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன்
சின்னஞ்சிறு கண்களில் உன்னை சிறை எடுத்தேன்