Showing posts with label பொறி. Show all posts
Showing posts with label பொறி. Show all posts

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்

ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்கிடக்கும் நாளிதழ் நீ....தானே

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல் படும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடிதவர் தருகிற பரிசு பொருளும்அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே