பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
கடலோடு கடலோடு முஹில் பிரியும்
மழையாகத்தான்
காற்றோடு காற்றோடு சுரம் பிரியும்
இசையாகத்தான்
தறியோடு தறியோடு இழை பிரியும்
உடையாகத்தான்
தளிரே நம் பிரிவெல்லாம் பிரிவெல்லாம்
உறவாகத்தான்
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும்
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
இமை ரெண்டும் பிரியாமலே
அடி விழி இல்லை விழி இல்லை விழி இல்லையே
இரவொன்று பிரியாமலே
ஒளி ஒளி கொண்ட ஒளி கொண்ட பகல் இல்லையே
கரை ரெண்டும் பிரியாமலே
அட நதி இல்லை நதி இல்லை நதி இல்லையே
கரம் இரண்டும் பிரியாமலே
ஒரு செயல் இல்லை செயல் இல்லை செயல் இல்லையே
தினந்தோறும் மழை என்றால்
சுவை சுவை இல்லையே
கொஞ்சம் வெய்யில் காய்ந்து மழை வந்தால்
சுகம் சுகம் கொள்ளையே
உருகாத மெழுகுக்கு ஒளி ஒளி இல்லையே
கொஞ்சம் பிரியாத உறவுக்கு
பலம் பலம் இல்லையே
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
ஒரு உடலைப் பிரியாமலே
ஒரு உயிருக்கு உயிருக்கு பிறப்பில்லையே
இரு உதடு பிரியாமலே
ஒரு சொல் இல்லை சொல் இல்லை சொல் இல்லையே
தண்டவாளம் பிரியாமலே
ஒரு ரயில் இல்லை ரயில் இல்லை ரயில் இல்லையே
எண்ணம் மனதைப் பிரியாமலே
கவி இல்லை கவி இல்லை கவி இல்லையே
ஆழ் கிணத்து நீர் அலைக்கு பிரிவு பிரிவில்லையே
கொஞ்சம் வான் நிலவு மறைந்து சென்றால்
பிரிவு முடிவிலையே
பிரியாத உறவுவோடு ருசி ருசி இல்லையே
இந்த பிரிவுக்கும் உறவென்று
பெயர் பெயர் முல்லையே
இழந்தால்தான் அணு கொண்ட ஆற்றல் தெறியும்
கொஞ்சம் பிரிந்தால்தான் மெய்காதல் மேன்மை புரியும்
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
காலையில் கதிரவன் கடல் விட்டு வருவதும்
மாலையில் கதிரவன் மலை தொட்டு பிரிவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
கோடையில் மேகம் கடல் விட்டு பிரிவதும்
வாடையில் மீண்டும் கடல் தொட்டு இணைவதும்
இயற்கையடி இயற்கையடி இயற்கையடி
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
சிறு பிரிவாலே நீங்குமெனில் அன்பென்ன அன்பா
பிரிவெல்லாம் பிரிவல்ல நண்பா
Showing posts with label சூரி. Show all posts
Showing posts with label சூரி. Show all posts
Subscribe to:
Posts (Atom)