Showing posts with label சிங்கக்குட்டி. Show all posts
Showing posts with label சிங்கக்குட்டி. Show all posts

ஏன்டா ராட்சஷா நீ என்னை தொடர்கிறாய்

பல்லவி


ஏன்டா ராட்சஷா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ


சரணம் 1


நீ கொஞ்சம் முரடன் தான்
எனை கொண்ட உருவம் தான்
ஆனாலும் உன்னை பிடிக்குமே
நீ நல்ல மனுஷன் தான்
ஸ்ரிங்கார புருஷன் தான்
அன்பே உன் கண்கள் பணிக்குமே


மன வீட்டை பூட்டி வைத்தேனே
நான் தான் விழி ஜன்னல் பார்த்து குதித்தே நீ தான்
உஷ்ணங்கள் ஏறி நிற்கிறேன்
நீ வா வா உன் கையில் என்னை சேர்கிறேன்


ஏன்டா ராட்சஷ நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ


சரணம் 2


எறும்பூற கல் தேயும்
நீ ஊற நான் தேய்ந்தேன்
பிடிவாத மன்னன் நீயாட
தொலை தூரம் சென்றாலும்
தொடும் தூரம் நின்றாலும்
பிரியாத நிழல் போல் நானாட


குளம் கொண்ட நீரில் கல் வீசினர்போல்
உள்ளம் கொஞ்சம் ஆட கண் வீசலாமா
நெஞ்சத்தை லேசாய் கிள்ளினாய்
நீ ஏன்டா நெருப்பாற்றில் என்னை தள்ளினாய்


ஏன்டா ராட்சஷா நீ என்னை தொடர்கிறாய்
ஐயோ அந்த மாதிரி என் மேல் படர்கிறாய்
காதலில் வன்முறை காதலன் நீயே
கொண்டு போ என்னை நீயே கொண்டு போ