Showing posts with label ஓரம் போ. Show all posts
Showing posts with label ஓரம் போ. Show all posts

இது என்ன மாயம்

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
உன்னைப் பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே

இது என்ன மாயம்
இது எதுவரை போகும்
இரு சிறகை விரித்து நான்
மிதந்து போகிறேன் மேலே

கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே

உலகமே உன்னால் இன்று புதியதாய்
உணர்கிறேன் உற்சாகத்தை முழுவதாய்

என் வானத்தில் சில மாற்றங்கள்
வெண்மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

(இது என்ன மாயம்)

நான் நேற்று வரையில்
பூட்டிக்கிடந்த ஜன்னலாய்த் தோன்றினேன்
உன் பார்வை பட்டதும்
ஸ்பரிசம் தொட்டதும்
காட்சிகள் காண்கிறேன்

விழிகளை நீ மூடிவைத்தால்
வெளிச்சங்கள் தெரியாதே
வழிகளை நீ மூடிவைத்தால்
பயணங்கள் கிடையாதே

விரலோடுதான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனியில்லையே
உன் வார்த்தைகள் தரும் வேகத்தால்
நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்

(இது என்ன மாயம்)