Showing posts with label இம்புட்டு அம்புட்டு எம்புட்டு. Show all posts
Showing posts with label இம்புட்டு அம்புட்டு எம்புட்டு. Show all posts

அடியே அம்மு அழகு பொம்மு

அடியே அம்மு அழகு பொம்மு
இன்னும் உந்தன் கோபம் தீரலையா
ஆசை செல்லம் அச்சு வெல்லம்
ஆவி பறக்கும் கோபம் மாறலையா
கோலார் தங்க வயலும் கொடுத்தேன்
கோஹினூர் வைரம் கொடுத்தேன்
சிங்கப்பூரு செயினும் கொடுத்தேன்
சீனப்பட்டும் வாங்கிக் கொடுத்தேன்
லண்டன் model blouseம் கொடுத்தேன்
Los angeles கொலுசும் கொடுத்தேன்
மானாமதுர மல்லிக கொடுத்தேன்
மடிசார் மடிப்பில் மனசையும் கொடுத்தேன்

என்ன பெருசா பண்ணிட்ட

எல்லா பொருட்களும் வாங்கி கொடுத்தேன்
எடைக்கு எடையா என்னையும் கொடுத்தேன்

கல்யாணியா ஹம்சத்வனியா காம்போதியா நந்தினியா
உன் சிரிப்பு எந்த ராகம் சொல்
ஸ்ரீரஞ்சனியா ஷிவரஞ்சனியா
மித்ராஞ்சனியா மீனலோச்சனியா
உன் பேச்சு எந்த ராகம் சொல்
ஆனந்தமா அபூர்வமா
அதிசயமா அற்புதமா
உன் மூச்சு எந்த ராகம் சொல்
ஹே தித்திக்கும் பூபாளம்
திகட்டாத ஹிந்தோளம்
உன் நளினம் எந்த ராகம் சொல்
புல்லரிக்கும் வார்த்தையில
பொடி வைத்து பேசுவது
அழகான ரீல் ராகமா
நீ பூனகுட்டிப் போல வந்து
ஆள சுத்திப் பாடுவது
அதிசய ஐஸ் ராகமா
கண்ணே என்றும் மூக்கே என்றும்
கண்டபடி வர்ணிக்கின்ற
ராகம் என்ன சமாதானமா
கடிகாரம் கேட்டதற்கு
காதில் பூவை சுற்றிவிட்டு
கெஞ்சும் ராகம் தந்திரமா

சின்ன சின்ன சேட்டை செய்தால்
சீ போ என்னும் செல்லக் கோபம்
சிந்துபைரவியா
தேனீர் குடிக்கையில் உன் உதடு செய்யும்
சத்தம் கரஹரப்ரியாவா
ஹேய் ச்ச்ச்சு ச்ச்ச்சு முத்தம் என்ன இந்தோளமா
அதில் வரும் சத்தம் என்ன கேதாரமா
ச்ச்ச்சு ச்ச்ச்சு முத்தம் என்ன இந்தோளமா
அதில் வரும் சத்தம் என்ன கேதாரமா
தமிழ் பேசும் உன் வளையல்
ஜதி போடும் உன் கொலுசு
உரையாடும் ராகம் என்ன சொல்

நல்லா ஐஸ் வைக்கிற

சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
சொல் சொல் சொல் நீயே சொல் சொல்
தன்னன தானா ஹோ ஹோ ஹோ
தன்னன தானா ஹோ ஹோ ஹோ
ந ந ந ந ந நனனன நனன னனன
ந ந ந ந ந நனனன நனன னனன
ந ந ந ந ந நனனன நனன னனன

வாணலியில் நீ வைத்து தாளிக்கும் கடுகொலி
வாசனை வனஸ்பதியா
வாசலில் நீ இடும் கோலமாவின் மெல்லிசை
வசந்தமனோஹரியா
கண் இமைகள் தட்டும் சத்தம்
சரசாங்கியா
கண்ணாடிமேல் செய்யும் யுத்தம்
சாருஹேசியா
கண் இமைகள் தட்டும் சத்தம்
சரசாங்கியா
கண்ணாடிமேல் செய்யும் யுத்தம்
சாருஹேசியா
புயல் போன்ற உன் கோபம்
மழை போன்ற உன் அழுகை
உறவாடும் ராகம் என்ன சொல்

ச் ச்ச்...... ஜொள்ளு விடாத

அடியே அம்மு அழகு பொம்மு
இன்னும் உந்தன் கோபம் தீரலையா
நா ந நா நா நனன் நனன் நன